Wednesday, 18 November 2015

இடுக்கமான வாசல் என்பது என்ன?---ஆசிரியர்.சுவி.D. விமலன்--jeevavootru.blogspot.com



இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்;கேட்டுக்கு போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது, அதின் வழியாய் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்கு போகிற வாசல் இடுக்கமும் வழி நெருக்கமுமாயிருக்கிறது, அதை கண்டு பிடிக்கிறவர்கள் சிலர்(மத் 7:13-14)

    இயேசு கிறிஸ்து மாம்சத்தில் இருந்த நாட்களில் ,"வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" (மத் 11:28) என்பதாக கூறினார்,ஆனால் அதே வேளையில் இங்கு மத்தேயு 7:13-14 ல் நீங்கள் இடுக்கமான வாசலிலும் அதன் வழியிலுமே உட்பிரவேசிக்க வேண்டும் என்கிறார், இயேசு மனிதர்களுக்கு சந்தோஷம், சமாதானம், இரட்சிப்பு, நித்திய ஜீவனை அளிக்கும் படியே உலகத்திற்கு வந்தார்.
இதனடிப்படையில் பார்த்தால் மனிதன் ஒடுங்கிய வாழ்க்கையை வாழாமல் விடுதலையுள்ள வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதே அவருடைய விருப்பமாக உள்ளது என்பதை அறிய முடிகிறது, அப்படி இருக்கிறபோது மிகவும் நெருக்கமான வாசல் வழியே பிரவேசிக்க சொல்லுகிற காரணமென்ன என்பதை ஆவியானவர் கொடுத்த விளக்கத்தின் படி உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன், இதை மேலோட்டமாக பார்க்கிற சிலருக்கு 'தீயிலிருந்து ஒருவனை காப்பாற்றி அவனை திரும்பவும் நெருப்புச்சட்டியில் உட்கார வைப்பதைப் போல தோன்றுகிறதே என்று நினைக்கலாம், ஆனால் அது உண்மையல்ல , கிறிஸ்தவ வாழ்க்கை என்பது இந்த இடுக்கமான வாசலில் கஷ்டப்பட்டு நுழைந்த பின் பல வேதனைகளையும் கண்ணீர்களையும் தாண்டித்தான் பரலோகம் செல்ல வேண்டும் என்பது போல சில பல பிரசங்கங்களும்  தவறுதலாக போதிக்கப்படுகிறது, நாம் இவ்வளவு வேதனைகளையும்  சகித்துத்தான் பரலோகம் செல்ல வேண்டும் என்பதற்காகவா கிறிஸ்து சிலுவையில் அந்த பாடுகள் பட்டார்?, அதுவும் அவர் பட்ட பாடுகள் எதுவுமே தனக்காக அல்ல, மாறாக ஒட்டுமொத்த உலக மனுக்குலத்துக்காகவே, பரலோகம் செல்வது என்பது கிறிஸ்துவுக்கு முன்பு வரை எட்டாத கனியாகவே இருந்தது, ஆனால் கிறிஸ்துவுக்கு பின் பரலோகம் செல்வது என்பது மிகவும் சுலபமான ஒன்று என்பதை கிறிஸ்துவின ஆவிக்குரியவர்கள் நன்கு அறிவர், எனவேதான் இயேசு கிறிஸ்து சொன்னார்,"...பரலோகராஜ்யம் பலவந்தம் பண்ணப்படுகிறது; பலவந்தம் பண்ணுகிறவர்கள் அதைப் பிடித்துக்கொள்ளுகிறார்கள்." (மத் 11:12)
பலவந்தம் என்பதின் அர்த்தம் வேதனையோடு, துக்கத்தோடு அதை பெற்றுக்கொள்ளுதல் என்பதல்ல, பலவந்தம் என்பது கட்டாயப்படுத்தி அல்லது மேற்கொண்டு பெற்றுகொள்ளுதல் என்பதே பொருள், மனுக்குலம் பரலோகம் செல்ல தடையாக இருந்த பலம்வாய்ந்த யாவையும் கிறிஸ்து இயேசுவின் மூலமாய் பலவீனப்படுத்தி அவைகளை மேற்கொண்டு எளிதாக அடைந்து கொள்ளுதலையே வேதம் இங்கு குறிப்பிடுகிறது, 
இயேசு கிறிஸ்துவின் மூலமாக இவ்வளவு எளிதாக அடைந்துகொள்ளுகிற பரலோக இராஜ்ஜியத்தின் வாசலும் வழியும் ஏன் இவ்வளவு குறுகினதாக இருக்க வேண்டும் என்ற கேள்வி நமக்குள் தோன்றாமலில்லையே.
  
  இந்த இடுக்கமான வாசல் முதலில் யார் என்று தெரிந்து கொள்ளவேண்டும், யோவான் 10:9 ன் படி இயேசுவே நாம் உட் பிரவேசிக்கும் வாசல், மாத்திரமல்ல அவரே வழியாகவும் இருக்கிறார், வாசலாகிய இயேசுவுக்குள் ஒரு மனுஷன் பிரவேசிப்பது என்பது இரட்சிப்பின் முதல் அனுபவத்தைக் குறிக்கிறது, ஒரு மனுஷன் அல்லது மனுஷி எதிலிருந்து இரட்சிக்கப்படுகிறார்கள் என்றால், அவர்களுடைய ஜென்ம சுபாவ மூட்டைகளை சுமந்தவர்களாக, தங்கள் சுய பாவ இச்சை மூட்டைகளை சுமந்தவர்களாக, பல விதமான வருத்தம் ,நோய், வேதனை, கவலை என்னும் மூட்டைகளை சுமந்தவர்களாக கிறிஸ்து இயேசுவண்டை வருகிறவர்களை மீட்டெடுப்பதே இரட்சிப்பு,

 இப்படிப்பட்ட பாவ பார மூட்டைகளை சுமந்து வருகிறவர்கள் தாங்களே அதை பிடித்திருக்கிறார்கள் என்பதல்ல, அப்படியானால் அவர்களே எங்காவது இறக்கி வைத்து விடலாமே, ஆனால் அம்மூட்டைகள் அனைத்தும் அவர்களோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது, எனவே அவர்கள் தன்னுடைய பாரங்களிலிருந்து தனக்கு விடுதலை வேண்டும் என்று ஏங்குகிற போது, அங்கே வாசலாக இருக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து,"பாரஞ்சுமக்கிற நீங்கள் யாவரும் என்னிடத்தில் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" என்கிறார், அவருடைய வார்த்தைக்கு செவிகொடுத்து வாசலாகிய இயேசுவண்டை வருகிறபோது, அந்த வாசல் குறுகியதாகவும், இடுக்கமானதாகவும் இருப்பதைப் பார்த்து திகைத்தவர்கள் சிலர் குழப்ப்மடைந்து இந்த குறுகிய வாசலுக்குள் இவ்வளவு பெரிய மூட்டைகளோடு நான் எப்படி  பிரவேசிக்க இயலும் என்ற சந்தேகத்தோடு திரும்பிச்சென்று தடையில்லாத பெரிய வாசல் வழியாக பாரத்தைச் சுமந்தவாரு வேதனையோடு கண்ணீரோடு கலக்கத்தோடு முடிவை அறியாமல் அதில் செல்ல தீர்மானிக்கின்றனர், ஆனால் நம்பிக்கை கொண்டவர்கள் கிறிஸ்துவாகிய அந்த குறுகிய இடுக்கமான வாசலில் நுழைய முற்பட்டபோதே அவர்கள் மேல் ஒட்டியிருந்த மூட்டைகள் தானாக அறுந்து விழுகிறதை கண்டபோது அவர்கள் இருதயத்தில் ஆனந்தம் பேரானந்தத்தோடு இன்னமும் நான் உள்ளே நுழைய முயற்சிப்பேன் என்று தன் உடலை நுழைத்தபோது இன்னும் பல மூட்டைகள் தெரித்து விழுவதை கண்ட பாரம் சுமந்த மனுக்குலம் ஆச்சர்யத்தோடு ஆனந்தத்தோடு தொடந்து முயற்சித்து முன்னேறுகிறார்கள், அதுவரையில் அவர்களை வாட்டி வதைத்த மன பாரங்கள் நீங்கி பாவ பாரங்களிலிருந்து , சாப பாரங்களிலிருந்து விடுதலையை அடைகிறவர்களாக அந்த இடுக்கமான் வாசலில் மிகுந்த சந்தோஷத்தோடு நுழைகிறார்கள் , ஆக இடுக்கமான வாசல் என்பது தம்முடையவர்களை கஷ்ட படுத்துவதற்கான வாசலாக இல்லாமல், தம்மைத் தேடி வருகிற பர்ரஞ்சுமந்தவர்களை விடுவிப்பதற்கான வாசலாகவே அந்த இடுக்கமான வாசல் காணப்படுகிறது, எல்லாம் சரி இடுக்கமான வாசல் ஓகே, வழியும் ஏன் இடுக்கமா இருக்கனும் அப்படின்னு கேட்க தோன்றலாம், கிறிஸ்துவின் வழி விசாலமானதாக இருந்தால் ம்னிதன் மீண்டும் இச்சையில் இழுப்புண்டு, மீண்டும் பாவ மூட்டைகளை சுமந்தவர்களாக பரலோக வாசலை தட்டிவிடக்கூடாதே என்பதற்காகத்தான் வழியையும் இடுக்கமாக வைத்து அதில் தம்முடைய பரிசுத்தவான்களை பயணிக்க செய்கிறார், இந்த நெருக்கமான வழியில் பயணிக்கும் பரிசுத்தவான்கள் யாவரும் சமாதானத்தோடும் சந்தோஷத்தோடும் பெரிதான நம்பிக்கையோடும் தேவ பெலத்தோடும் யுத்த வீரனை போல வெற்றி நடை போடுவார்கள், இதைத்தான் பவுலடிகள் நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டாலும் ஒடுங்கிப்போகிறதில்லை (2 கொரி 4:8) என்கிறார், சிலர் கிறிஸ்து எனும் இடுக்கமான வாசலில் உட்பிரவேசித்தும் இடுக்கமான வழிப்பாதையை தொடராமல் விசாலமான பாதையில் நுழைந்து , பல விதமான உலக பாரங்களை மீண்டும் சுமந்து கொண்டு கிறிஸ்தவ வாழ்க்கையிலும் மன நிம்மதி இல்லை என்று புலம்பிக்கொண்டு அல்லது முறுமுறுத்துக்கொண்டு வெளி உலகத்திற்கு கிறிஸ்தகவர்களாக வேஷம் போட்டே வாழ்ந்து வரும் அவல நிலைக்கு கிறிஸ்து எவ்வளவும் காரணமல்லவே, தன் வாழ்க்கையில் காணப்ப்டும் பின் மாற்றதை உணரும் உணர்வில்லாமல் பயணித்துகொண்டிருக்கின்றனர், 

ஆக இடுக்கமான வாசல், வழி என்பது உலக பயமில்லாமல் நிம்மதியுடன் கிறிஸ்துவின் வருகை மட்டும் தொடருகின்ற பயணம்தான் கிறிஸ்தவ வாழ்க்கை என்பதை கர்த்தருடைய ஆவியானவர் கொடுத்த தைரியத்தோடு உங்களுக்கு தெரிவித்திருக்கிறேன், இனி இடுக்கமான வாசல் என்பது கடினமானது வேதனையானது கண்ணீர் நிறைந்தது என்று உங்கள் செவி கேட்க சத்துரு போதித்தால் சரியான பதிலடி கொடுப்பீர்களென்று கர்த்தருக்குள் விசுவாசிக்கிறேன், தேவனுக்கே மகிமையுண்டாவதாக

இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்;கேட்டுக்கு போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது, அதின் வழியாய் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்கு போகிற வாசல் இடுக்கமும் வழி நெருக்கமுமாயிருக்கிறது, அதை கண்டு பிடிக்கிறவர்கள் சிலர்(மத் 7:13-14)

No comments:

Post a Comment