
தலைக்கு மேல் ஆபத்துக்கள் தொங்கிக்கொண்டிருக்கின்றன, என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா, ஆம் நமது விண்வெளியில் கணக்கிலடங்காத எரிகற்கள் எப்போது தன் நிலை தடுமாறி நம் பூமியில் விழுமோ என்ற பயத்தில் விஞ்ஞானிகளும் உலக நாடுகளும் பீதியில் உறைந்துள்ளன என்று சொன்னால் அது மிகையாகாது. மனிதன் விஞ்ஞானத்தில் எவ்வளவோ வளர்ந்துவிட்டான் என்று மார்தட்டிக்கொள்ளும் மனித இனம் நம் தலைக்கு மேல் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் எரிகற்களில் சில 50 மீட்டர் விட்டமுடைய எரிகற்கள் உள்ளன அவைகளில் வெறும் 10 சதவிகித கற்களை மாத்திரமே கண்டறிந்துள்ளதாகவும் இவைகள் 10000 ற்கும் அதிகமான நகரங்களை தாக்கி அழிக்கும் திறன் கொண்டவை என்றும் கண்டறியப்பட்டுள்ளன,
உலகின் தலைசிறந்த விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் தலைவர் சார்லஸ் போல்டன் மற்றும் விஞ்ஞானிகள் சமீபத்தில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் பேசிய போது ஒரு சில விண்கற்கள் ஏறத்தாழ ஒரு கிலோ மீட்டர் விட்டமுடைய விண்கற்கள் பூமிக்கு மேல் சுற்றிக்கொண்டிருக்கின்றன, இப்படிப்பட்ட விண்கற்களானது மனித நாகரீகத்தையே முற்றிலும் அழித்துவிடும் அபாயம் உள்ளது என்று எச்சரித்துள்ளனர்.
பூமியை தாக்க இருக்கும் இப்படிப்பட்ட பேரரக்கன்களாகிய எரிகற்களை திசை திருப்புவது என்பது தற்போது உள்ள விஞ்ஞான தொழில் நுட்பத்தை வைத்து ஒன்றும் செய்ய இயலாது என்பதை வெளிப்படையாகவே நாசாவின் தலைவர் ஒப்புக்கொண்டுள்ளார், இதை தடுக்க வேறு என்னதான் வழி என்று கேட்டால்,
எல்லாம் கை மீறி போகும் பட்சத்தில் படைத்த இறைவனிடம் பிரார்த்தனை செய்வதைத் தவிர வேறு வழி இல்லை என்கிறாராம்.
அவர் சொல்வதிலும் உண்மை இருக்கத்தானே செய்கிறது விண்கற்களை நம் இஷ்டத்திற்கு திசைதிருப்ப நாம் என்ன கடவுளா?, கர்த்தர் யோபுவிடம் "துருவச்சக்கர நட்சத்திரத்தையும் அதைச்சேர்ந்த நட்சத்திரங்களையும் வழி நடத்துவாயோ" என்று கேட்கிறார்(யோபு 38:32)
கர்த்தர் நகரத்தை காவாராகில் காவலாளர் விழித்திருக்கிறது விருதா(சங் 127:2)
விஞ்ஞான அறிவை நம்பி மோசம் போகும் மனித குலமே உங்கள் விஞ்ஞானமும் விஞ்ஞான கண்டுபிடிப்புகளும் உங்களை காக்க இயலுமோ, கடந்த பிப்ரவரி மாதம் இரஷ்யாவை தாக்கிய விண்கல்லை பூமியை தாக்காதபடி திசை திருப்பி விடலாம் என்று குண்டு வைத்து தகர்க்க முற்பட்டனர் ஆனால் அதற்கு எந்தவித பலனுமின்றி இரஷ்யாவை பெருத்த அதிர்வலையோடு தாக்கியதை நாம் அனைவரும் அறிவோம்,
இப்படிப்பட்ட பேராபத்துக்கள் பூமியின் கடைசி நாட்களில் பூமியை தாக்கும் என்பதை மிகவும் துல்லியமாக நம்முடைய கைகளில் உள்ள பரிசுத்த வேதாகமம் முன்னறிவித்துள்ளது என்பதை பின்வரும் வசனத்தில் நீங்கள் தெளிவாக பார்க்க இயலும்
"வானத்தின் நட்சத்திரங்கள் விழும், வானங்களிலுள்ள சத்துவங்களும் அசைக்கப்படும்"(மாற்கு 13:25)
"அத்திமரமானது பெருங்காற்றினால் அசைக்கப்படும் போது அதின் காய்கள் உதிருகிறது போல, வானத்தின் நட்சத்திரங்களும் பூமியிலே விழுந்தது".(வெளி 6:13)
இவைகள் இப்போதே நடக்கிறது என்பதல்ல இவை பூமியின் இறுதி நாளில் நடப்பவை ஆனால் இப்போது நடப்பவை கடும் மழைக்குமுன் வானம் இருண்டு இடி மின்னல் போன்றவைகள் உண்டாகுமே அதற்கு ஒப்பானவை, ஆகவே இனியும் கால தாமதமேன், இன்றே மனந்திரும்புங்கள், இயேசு உங்களை அழைக்கிறார்.
(SOURCE TAKEN :MAALAI MALAR 20/03/2013)
No comments:
Post a Comment