Wednesday, 18 November 2015

பிளாக் ஹோலில் சிக்கிய விண்கலம்--jeevavootru.blogspot.com


1962-ம் வருடம் பிப்ரவரி மாதம் 20ம் தேதி சரியாக காலை 9:47 மணியளவில் விண்கலம் கொழுந்து விட்டு எரியும் நெருப்பின் நடுவில் புகையை கக்கி கொண்டு, ஜான் கிலன் (John Glenn) என்ற விண்வெளி ஆராய்ச்சியாளரை ஏந்தி கொண்டு கிளம்பியது. அந்த விண்கலத்தில் அவர் மட்டும் தனித்து பயணம் செய்தார்.

அந்த விண்கலம் பூமியை மூன்று முறை சுற்றி, நான்கு மணி நேரத்தில் 80,000 மைல்களை கடந்து வந்து படங்களை எடுத்துவிட்டு, பூமிக்கு திரும்ப ஆரம்பித்தது. அந்த ஊர்தி கீழே வந்து கொண்டிருந்தபோது, அதை கன்ட்ரோல் செய்து கொண்டிருந்த ஹுஸ்டனில் உள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை அந்த விண்கலத்தில் இருந்து கிடைத்தது. 

அதன்படி, அந்த ஊர்தியில் இருந்த அக்கினி கேடகம் அதை விட்டு தனியே கழன்றுகொண்டு இருக்கிறது என்று அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அப்படி அது கழன்று வந்தால், முழு ஊர்தியும் எரிந்து போய் விடும். அதிலிருந்த ஜானும் எரிந்து போய் விடுவார்.

இதை விண்வெளியிலிருந்து சரி செய்ய இப்போது முடியாது. ஆனால் அந்த கலம் பூமியை நோக்கி விரைவாக வந்து கொண்டிருந்தது. என்ன செய்வது என்று விஞ்ஞானிகள் யோசித்து கொண்டிருந்தனர்.

அதே நேரத்தில் திடீரென்று அந்த விண்வெளிகலத்திற்கும் கீழே அதை இயக்கி கொண்டிருந்த ஆராய்ச்சியாளர்களுக்கும் இடையில் தொடர்பு அற்று போனது. அதை Black Hole என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். எந்தவித தொடர்பும் என்ன நடக்கிறது என்று அறியாமலும் இருக்கும்போது இந்த நிலைமை ஏற்படும்.

நிமிடங்கள் வேகமாக கடந்து சென்று கொண்டிருந்தது. நாசா விஞ்ஞானிகள் இயக்குகிற அறையிலிருந்து என்ன செய்வது என்று தவித்து கொண்டிருந்தனர். 

ஐந்து நிமிடங்கள் கழித்து, ஜானின் குரல் அவர்களுடைய ரேடியோவில் கேட்டது 'இது ஜான்' என்று. ஜான் பூமியை நோக்கி பத்திரமாக வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்தவர்களின் மத்தியில் ஏற்பட்ட சந்தோஷம் அளவில்லாதது!

பின்னர் தான் தெரிந்தது, அது தவறான ஒரு சிக்னல் என்று! ஜான் பத்திரமாக வந்து தரையிறங்கினார். அவர் அந்த Black Hole லில் இருந்த அந்த நிமிடங்கள் மிகவும் அதிர வைக்கத்தக்கதாக இருந்தது.

இதை போலவே அநேக நேரங்களில நாமும் தனிமையில் விடப்பட்டதைப் போன்ற நிலையில் தள்ளப்படுகிறோம், எந்த மனிதர்களும் நமக்கு எதுவும் செய்ய முடியாத நிலையில்,எல்லாம் முடிந்து போனது போன்ற சூழ்நிலை நம்மை இருக்கமான இருள் சூழ்ந்த மனநிலைக்கு தள்ளலாம், 

உலகம் உங்களைப் பார்த்து சொல்லலாம் இது உன் விதி, இதுதான் உன் தலையெழுத்து, இனி உன்னை யாராலும் காப்பாற்ற இயலாது என்று கைவிடலாம், இன்னும் சிலர் உங்கள் நிலையைக் கண்டு உங்களுக்காக இரண்டு சொட்டு கண்ணீரும் விடலாம், ஆனால் நீங்கள் சிக்கியுள்ள இந்த குழியிலிருந்து உங்களை விடுவிக்க, அந்த அசுத்தம் நிறைந்த அறுவருப்பான குழிக்குள் இறங்கி உங்களை தூக்கி எடுக்க ஒருவரால் மாத்திரமே கூடும் அவர்தான் "இயேசு".

இயேசுவை தவிர வேறு வழியே இல்லை, நீங்கள் சிக்கியுள்ள இந்த பிளாக் ஹோலில் ஒருவரை மட்டுமே தொடர்பு கொள்ள இயலும் அவர் இயேசு, உங்களை விடுவிக்க அவர் காத்திருக்கிறார் அவரை நோக்கி கூப்பிடுவீர்களா

சங்கீதம் 139:8 "...நான் பாதாளத்தில் படுக்கைப் போட்டாலும்,நீர் அங்கேயும் இருக்கிறீர்"
சங்கீதம் 121:1 எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்
சங்கீதம் 121:2 வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்.

No comments:

Post a Comment