கர்த்தருடைய வருகைக்குரிய அடையாளங்கள் ஒவ்வொரு நாளும் அவருடைய வார்த்தையின் படியே திட்டமாக நம் கண் முன்னே நடந்தேறி வருகிறது, சிலர் எதையும் விஞ்ஞான பூர்வமாகத்தான் நம்புவோம் என்று ஆதாரங்களை தேடுவோருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக விஞ்ஞானத்தின் வாயிலாகவும் கர்த்தர் தம்முடைய வார்த்தையை உறுதி படுத்தி வருகிறார், அப்படியிருந்தும் சில கொழுத்த இருதயம் படைத்தவர்கள் இப்படிப்பட்ட ஆதாரத்தையும் நம்ப மறுத்து விதண்டா வாதம் பண்ணி வருகின்றனர், ஆனாலும் கர்த்தரோ தம்முடைய வார்த்தையை தொடர்ந்து உறுதிபடுத்தி வருகிறார்,
இதற்கு ஆதாரமாக, சமீபத்தில் மாலை மலர் செய்தி நிருவனம் மார்ச் 13(2013)ல் வெளியிட்ட ஒரு செய்தி குறிப்பை உங்கள் முன் வைக்கிரேன், அதன் பின் நீங்களே நிதானித்துக்கொள்ளுங்கள்
"உலகம் முழுவதும் புதிய புதிய நோய்கள் அடிக்கடி உருவாகி வருகின்றன. அந்த நோய் கிருமிகளை கொல்வதற்கு உரிய மருந்துகள் இல்லை. இதற்கு பதிலாக நோய் எதிர்ப்பு சக்தி (ஆன்டி பயாடிக்) மருந்துகளை கொடுத்து வருகின்றனர்.
ஆனால் இந்த நோய் எதிர்ப்பு மருந்துகளும் தற்போது சரியாக வேலை செய்யவில்லை. இதனால் மனித குலத்திற்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது இங்கிலாந்து விஞ்ஞானியும் தலைமை மருத்துவ அதிகாரியுமான சேலிடேவிஸ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது:-
புதிய வகை நோய் எதிர்ப்பு சக்தி மருந்து சமீபகாலமாக கண்டுபிடிக்கப்படவில்லை. 25 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட மருந்தைதான் இப்போதும் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் இப்போதெல்லாம் கிருமிகள் கட்டுப்படுவதில்லை.

மேலும் தினமும் புதிய புதிய கிருமிகள் உருவாகி வருகின்றன. ஆனால் புதிய நோய் எதிர்ப்பு மருந்துகளை நாம் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் கிருமிகளால் மனித குலம் கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சொல்லப்போனால் இது தீவிரவாதத்தைவிட மோசமான பாதிப்பை ஏற்படுத்தலாம். புதிய மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே இதனை சமாளிக்க முடியும்"
என்று அவர் தெரிவித்துள்ளதாக அந்த நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது, இப்படிப்பட்ட நிலை அமெரிக்காவையும் விட்டு வைக்கவில்லை, அமெரிக்காவில் நிலவி வரும் நிலையை அமெரிக்க அதிகாரிகள் கூறுவதை நீங்களே படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்
"அமெரிக்காவில் மரணத்தை ஏற்படுத்தும் தன்மை கொண்ட பாக்டீரியா கிருமிகளின் தாக்கம் அதிகரித்து வருவதாக மருத்துவ அதிகாரிகள் அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளனர். வீரியம் மிக்க மருந்துகளால்கூட இவற்றின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
இத்தகைய பாக்டீரியா பரவலை தடுப்பதற்கான வழிமுறைகளும் மிகவும் குறைவாகவே உள்ளன என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். உயிர்காக்கும் கடைசித் தீர்வான கார்போபெனிம் மருந்துகள் கூட இந்த பாக்டீரியா கிருமிகள் முன் பயன்படாமல் போகின்றன.
இந்தக் கிருமிகள் நுரையீரல், சிறுநீரகப் பாதை அல்லது ரத்த ஓட்டத்துடன் கலந்தால் அந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது கடினம். இவ்வாறு ரத்த ஓட்டத்தில் கலந்தவர்களில் 50 சதவீத நோயாளிகள் மரணத்தைத் தழுவுகின்றனர்.
இந்த நோய்த்தொற்று ஏற்பட்டவர்கள் மருத்துவமனையில் தொடர்ந்து தங்கியிருந்து, சிக்கலான மருத்துவ முறைகளையும் நீண்ட கால கவனிப்பையும் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது". என்று தெரிவித்துள்ளனர்.(ஆதாரம் மாலை மலர் மார்ச் 6)

இந்தியாவிலும் புதிய வைரஸ் தொற்று பரவி வருவதாக மருத்துவ விஞ்ஞானம் எச்சரித்துள்ளது(ஆதாரம் மாலை மலர் பெப்ரவரி 13)
"வைரஸ்களால் ஊடுருவும் புதிய மூச்சு திணறல் நோய் இந்தியாவுக்குள் ஊடுருவுகிறது. வைரஸ் கிருமிகளால் மூச்சு திணறல் நோய் ஏற்படுகிறது. தற்போது அபாயகரமான புதிய வைரஸ் கிருமியால் கடுமையாக பாதிக்கக்கூடிய மூச்சு திணறல் நோய் உருவாகியுள்ளது. இந்த வைரஸ் கிருமிகள் நுரையீரல் மற்றும் மூச்சு குழாய்களை தாக்கி இந்த நோயை உண்டாக்குகின்றன.
ஐரோப்பிய நாடுகளான இங்கிலாந்து, ஜெர்மனியில் பரவிய இந்த நோய் தற்போது மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் பரவுகிறது. இங்கிலாந்தில் இந்த நோய் தாக்குதலுக்குள்ளான 2 பேர் மான்செஸ்டர் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சவுதி அரேபியாவில் 5 பேர் பாதிக்கப்பட்டனர் அவர்களில் 3 பேர் பரிதாபமாக இறந்தனர். ஜோர்டானில் பாதிக்கப்பட்ட 2 பேரும் உயிரிழந்தனர். ஜெர்மனியில் ஒருவர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளார். இதுவரை 10 பேர் இந்த புதிய மூச்சு திணறல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை உலக சுகாதார மையம் உறுதிப்படுத்தியுள்ளது. கொடுமையான வைரஸ்களால் பரவும் இந்த நோய் தற்போது பாகிஸ்தானில் பரவியுள்ளது. அது படிப்படியாக இந்தியாவுக்குள் ஊடுருவும் அபாயம் உள்ளது". என்று எச்சரித்துள்ளது,
வேதம் கொள்ளை நோய் என்று குறிப்பிட்டுள்ளது, கொள்ளை நோய் என்றால் ஆங்கிலத்தில் பிளேக்(plaque) என்கிறோம், பிளேக் என்றால் திடீரென்று தோன்றும் கிருமிகளால் உண்டாகும் நோய் என்று அர்த்தம்,வேதம் எவ்வளவு திட்டமாக நமக்கு முன்னுரைத்துள்ளது என்பதை பாருங்கள் லூக்கா 21:11 "பல இடங்களில்...கொள்ளை நோய்களும் உண்டாகும்".
வணங்கா கழுத்துள்ளவர்களாக நாம் இராமல், மெய் தேவனாகிய இயேசு கிறிஸ்துவை இன்றே ஏற்றுக்கொள்ளுங்கள்,
No comments:
Post a Comment