தள்ளுபடி ஆகமங்கள் ( THE APOCRYPHAL BOOKS) ================= அப்போக்ரைபா என்றால் மறைக்கப்பட்டது அல்லது மூடப்பட்டது என்பதாகும். கனோனின் விதிகளை சில புத்தகங்கள் நிறைவேற்றவில்லை. அவைகள்: 1 எஸ்ரா, 2 எஸ்ரா, தோபித், யூடித், எஸ்தரின் ஓய்வு, சலோமின் ஞானங்கள், பிரசங்கிகள், பாரூக், மூன்று எபிரேய குழந்தைகளின் பாடல்கள், சூசன்னாவின் வரலாறு, பாகாலும் வலுசர்ப்பமும், மனாசாவின் ஜெபம், 1 மேக்காபீயர்கள், 2மேக்காபீயர்கள் மற்றும் எரேமியாவின் கடிதம். 1546ல் டிரென்ட் ஆலோசனைக்கூட்டத்தில், ரோமன் கத்தோலிக்க சபை இப்புத்தகங்களை ஏற்றுகொண்டாலும் புரட்டஸ்தாந்து சபைகள் பரிசுத்தாவியின் ஏவுதலால் எழுதப்பட்ட புத்தகங்கள் அல்லவென்று நிராகரித்து விட்டன. ஒருவேளை இப்புத்தகங்களில் வரலாற்று உண்மைகளும், திறமைகளும் இருந்தாலும் இவைகள் கீழ்காணும் காரங்களால் தள்ளப்படுகின்றன. *. தள்ளுபடி ஆகமங்களை எழுதிய ஆசிரியர்கள் எவரும் தெய்வீக ஏவுதலை தெரிவிக்கவில்லை, சிலர் இதனை மறுக்கின்றனர். (உதாரணமாக: 1 மக் 4:46 , 11 மக் 2 :23, 15 , 38 ) *. அநேக கிரேக்க மொழிபெயர்ப்பில் இவைகள் இடம்பெற்றிருந்தாலும் எபிரேயு பதிப்பில் இவைகள் இடம்பெறவில்லை. *. ஜெமினியாவில் 90 கி.பி யில் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் யூதர்கள் இவைகளை ஏற்றுக்கொள்ளவில்லை. *. இந்த புத்தகங்களில் பொய்யான வரலாறும், இடங்களும், தவறான வருடங்களும், உண்மையற்ற கட்டுகதைகளும் காணப்படுகின்றன. *. வேதத்தில் சொல்லப்பட்ட தரமான உபதேசங்களுக்கு மாறாக சில பொய்யான உபதேசங்களை உபதேசிக்கின்றது (தற்கொலை, தாக்குதல், மரித்தோருக்கானஜெபம் போன்ற காரியங்களை நியாயப்படுத்துகின்றது). *. ஏசுவும் புதிய ஏற்பாட்டு ஆசிரியர்களும் இந்த புத்தகங்களிலிருந்து ஒரு குறிப்பும் எடுத்து சொன்னதில்லை. அனால் மற்ற புத்தகங்களில் இருந்து நூற்றுக்கணக்கான குறிப்புகளை எடுத்துரைத்திருக்கிறார்கள். *. ஆதிகால சபை பிதாக்களான ஒரிஜன், ஜெரோம், டட்டுலியன், ஜெருசலேம் சிறில், தேர்ட்டுலியன் மற்றும் ஆத்ரசியஸ் போன்றவர்கள் இவைகளுக்கு எதிராக பேசினார்கள். *. முதல் நான்கு நூற்றாண்டுகளில் வேத சம்பந்தபட்ட ஆலோசனைக்கூட்டங்களில் இவைகள் அங்கீகரிக்கபடவில்லை. *. லுத்தரும், சீர்திருத்தவாதிகளும் இந்த புத்தங்களை நிராகரித்தனர். *. சீர்திருத்த காலங்களில் இருந்த ரோமன் கத்தோலிக்க அறிஞர்களும் தள்ளுபடி ஆகமங்களை நிராகரித்தனர்.
No comments:
Post a Comment