Wednesday, 18 November 2015

தம்முடைய வசனத்தை அனுப்பி தம்முடையவர்களை காத்த மெய்யான தேவன்--jeevavootru.blogspot.com

அந்த பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பரிசுத்த வேதாகமம்Inline image 1
சமீபத்தில்(கடந்த மே 2013) ட்விஸ்டர் என்று சொல்லப்படுகிற அதிபயங்கர சுழல்புயல் காற்று அமெரிக்காவின் ஒக்லஹாமா பகுதியை மிகவும் சீரழித்து சென்றதை உலகமே அறியும், 

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இந்த புயல் மிகப்பெரிய சேதத்தை விளைவித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

சுமாராக 51 பேர் வரை இந்த புயலால் மரித்துள்ளனர் என்றும் இதில் குழந்தைகளும் அடங்குவதாக செய்திகள் குறிப்பிடுகின்றன,

இதுபோன்ற புயலை பின் தொடர்ந்து ஆய்வுகளை செய்துவருகின்ற குழுவைச் சேர்ந்த பிரண்டன் ஹெய்டன் என்பவர் புயல் சேதப்பகுதியில் திறந்த நிலையிலிருந்த ஒரு பைபிளை கண்டெடுத்தார், எதேச்சையாக அது ஏசாயா 32:2 வசனத்தை காண்பித்த படி திறந்திருந்தது, அவ்வசனம் என்னவென்றால் " அவர் காற்றுக்கு ஒதுக்காகவும், பெருவெள்ளத்துக்கு புகலிடமாகவும் , வறண்ட நிலத்துக்கு நீர்கால்களாகவும், விடாய்த்த பூமிக்கு பெருங்கன்மலையின் நிழலாகவும் இருப்பார்" என்பதே அந்த வசனம்,

அந்த புயல் ஆய்வாளர் இந்த வேதாகமம் யாருடையது என்பதை பார்த்தபோது அது மைக்கேல் அலெக்சாண்டர் என்பவருக்கு சொந்தமானது என்பதை தெரிந்துகொண்டார், இது அவருடைய வீட்டிற்கு அருகாமையிலுள்ள ஒரு பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

புயல் ஆய்வாளர் பிரண்டன், தான் அந்த பைபிளை எடுத்த வன்னமாக அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தார், அவரும் அந்த வேத வசனத்தை படித்தார், தன்னையும் தன் வீட்டாரையும் தேவனே தம் வார்த்தையை அனுப்பி காத்தார் என்பதை மனதார உணர்ந்தவராக முழங்கால் படியிட்டு வானத்திற்கு நேராக கைகளை கூப்பி நன்றி ஏறெடுத்தார், இந்த கர்த்தருடைய வார்த்தை தன்னை மிகவும் தேற்றி நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்றார்

சீக்கிரத்தில் இந்த செய்தி தேசமெங்கும் பரவியது, நம்பிக்கை இழந்த நிலையில் பீதியில் உறைந்திருந்த அநேகருக்கு நம்பிக்கை தீபமாய் விளங்கியது

ஏசாயா 32:2 "" அவர் காற்றுக்கு ஒதுக்காகவும், பெருவெள்ளத்துக்கு புகலிடமாகவும் , வறண்ட நிலத்துக்கு நீர்கால்களாகவும், விடாய்த்த பூமிக்கு பெருங்கன்மலையின் நிழலாகவும் இருப்பார்"

சங்கீதம் 19:7 "கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்பிக்கிறதுமாயிருக்கிறது

No comments:

Post a Comment