Wednesday, 18 November 2015

"நீ உயிரோடு பிழைத்தால் நான் உன்னை அதிகமாய் நேசிக்கிறேன் என்பதை நினைத்துக்கொள்"-ஜப்பான் பூகம்பத்தில் நடந்த உண்மை சம்பவம்----ஆசிரியர்.D.விமலன்--jeevavootru.blogspot.com


ஜப்பானில் பூகம்பம் நிகழ்ந்த பின், மீட்பு பணியில் அரசாங்கம் மும்மூரம் காட்டியது, மீட்பு பணியாளர்கள் ஒரு குறிப்பிட்ட இளம் வயது பெண்ணின் வீட்டை அடைந்தபோது அந்த பெண்ணின் உடல் வீட்டின் இடிபாடுகளில் சிக்கி மரித்திருந்தாள், ஆனால் அந்த காட்சி மீட்பு பணியாளர்கள் மத்தியில் ஒரு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது, காரணம்,இடிபாடுகளில் சிக்கி மரித்திருந்த அந்த பெண்ணின் முழங்கால்கள் ஜெபிப்பதை போல மண்டியிட்ட நிலையிலும் உடல் முன்புறமாக விழுந்த நிலையிலும் காணப்பட்டது, அவளுடைய இரு கைகளும் தன் உடலை தாங்கிக்கொள்ளக்கூடிய ஒன்றை பிடித்திருந்தாள்.இடிந்து விழுந்த அந்த வீடு அவள் உடலின் பின் புறத்தையும் மண்டையையும் உடைத்திருந்தது. 
அந்த மீட்பு பணியாளர்களின் தலைவர் மிகுந்த சிறமத்திற்க்கிடையில் பூகம்ப பிளவுகளுக்குள் சிக்கியிருந்த அந்த பெண் ஒருவேளை உயிருடன் இருக்க கூடுமோ என்று எண்ணியவராய் அந்த பெண்ணின் உடலை தொட்ட போது அது குளிர்ந்தும் விரைத்துபோய் இருந்ததால் அந்த பெண் மரித்துவிட்டாள் என்ற மன நிலைக்குள் வந்தவராய் அவரும் அவருடைய டீமும் அந்த வீட்டை விட்டு அடுத்த வீட்டிற்கு சென்று அங்கு யாரும் உயிருடன் போராடி வருகின்றனரா என்று பார்க்க கடந்து சென்றார்கள், இருந்தபோதும் ஏதோ உள்ளத்தில் தூண்டப்பட்டவராய் இடிபாடுகளுக்குள் சிக்கி மரித்திருந்த அந்த பெண்ணின் வீட்டிற்கு திரும்ப சென்று பார்க்க விரைந்தனர், மறுபடியும் அந்த இடிபாடுகளுக்கிடையில் சிக்கியிருந்த அந்த பெண்ணின் இருந்த பகுதியில் தான் எடுத்து வந்த மீட்பு கருவியைக் கொண்டு பல பிரயாசத்திற்கிடையில் அந்த பெண்ணின் சடலத்தை நெருங்கியபோது, திடீரென்று மிகுந்த ஆச்சர்யத்தோடு "ஒரு குழந்தை,இங்கே ஒரு குழந்தை" என்று கத்தினார்.
ஒட்டுமொத்த குழுவினரும் மிகுந்த ஜாக்கிரதையுடன் அந்த இடிபாடுகளையும் கற்களையும் நீக்கியபின் மரித்த அந்த பெண்ணின் சடலத்தை அடைந்தனர், அந்த மரித்த பெண்ணின மடியில் அழகிய 3 மாத ஆண் குழந்தை உயிருடன் காணப்பட்டது, அந்த ஆண் பிள்ளை தன் தாயின் மடியில் பஞ்ஜனையில் தூங்குவது போல் நன்றாக தூங்கிக்கொண்டிருந்தது, அந்த பெண் தன் பிள்ளையை காப்பதற்காக தன் உயிரை பெரிதாக எண்ணாமல் வேதனைகளையும் வலிகளையும் தாங்கியவளாய் அவள் மரித்து தன் பிள்ளையை காப்பாற்றினாள்,இன்னமும் தூங்கிக்கொண்டிருந்த அந்த பச்சிளம் சிறுவனை தூக்கி எடுத்தனர், அங்கே ஒரு மருத்துவர் அவசரமாக வரவழைக்கப்பட்டு அந்த குழந்தையை பரிசோதித்தார், இந்த வேளையில் அந்த குழந்தையை சுற்றியிருந்த துப்பட்டியில் ஏதோ ஒன்று இருப்பதை கவனித்த மீட்பு பணிக்குழுவின் தலைவர், அதை எடுத்து பார்த்தபோது அதில் ஒரு செல்போன் இருந்தது, அந்த செல்போனில் ஒரு எழுத்து குறுஞ்செய்தி(TEXT MESSAGE) இருந்தது, அது என்னவென்று படித்த்போது அதில் பின்வருமாறு டைப் செய்யப்பட்டிருந்தது, "நீ உயிரோடு பிழைத்தால், நான் உன்னை அதிகமாய் நேசித்தேன் என்பதை நினைத்துக்கொள்"(if you can survive, you must remember that i love you), அந்த செல்போன் செய்தி ஒருவரிடத்திலிருந்து மற்றவர்க்கு வெகு விரைவாக பரவியது, யார்யாரெல்லாம் அந்த செய்தியை படித்தார்களோ அத்தனைபேரும் அந்த தாயின் அன்பை எண்ணி கதறி அழுதனர்,"நீ உயிரோடு பிழைத்தால், நான் உன்னை அதிகமாய் நேசித்தேன் என்பதை நினைத்துக்கொள்", என்ற தாய் தன் பிள்ளையை எவ்வளவாய் நேசித்தாள் என்பதை உலகம் அறிந்து கொண்டது.
ஆனால் 2000 வருடங்களுக்கு முன்பு நம் எல்லாருக்காகவும் தன் ஜீவனை பெரிதாக எண்ணாமல் நாம் அடைய வேண்டிய தண்டனையை அவர் தன் மேல் ஏற்றுக்கொண்டு பாவமறியாத நமக்காக பாவியைப் போல சிலுவையில் கடைசி சொட்டு இரத்தத்தையும் சிந்தியவராய் பாடுபட்டு மரித்து இவ்வள்ளவாய் நம் மேல் அவர் அன்பு கூர்ந்த போதும், இன்னமும் நம் வார்த்தைகளினாலும் செயல்களினாலும் காயப்படுத்தி வருகிறோம், நாம் அனைவரும் நரகத்திற்கு செல்லவே தகுதியானவர்கள் ஆனால் அவர் தன் மேல் அந்த ஆக்கினையை ஏற்று நாம் பிழைக்கும் படி செய்திருக்கிறார், நாம் அவரை நேசித்ததால் அல்ல அவர் நம்மை முந்தி நேசித்ததால், அவரால் பிழைத்த நீங்களும் நானும் அவரை உண்மையாய் நேசிக்கிறோமா?, அவர் உங்களையும் என்னையும் பார்த்து கேட்கிற கேள்வி இதுதான்,"என்னால் பிழைத்த நீ, நான் உன்னை அதிகமாய் நேசிக்கிறேன் என்பதை மறந்து விடாதே"



No comments:

Post a Comment