Wednesday, 13 January 2016

புகழ்பெற்ற தேவ ஊழியர் ஓரல் ராபர்ட்ஸ்க்கு வெளிப்படுத்தப்பட்ட கடைசிகால இரகசியம்--jeevavootru.blogspot.com


உலகளவில் மிகவும் பிரசித்திப் பெற்ற மூத்த கிறிஸ்தவ ஊழியராக விளங்குபவர் ஓரல் ராபர்ட்ஸ், இவர் அமெரிக்காவின் ஒக்லஹாமா என்ற மாகாணத்தில் உலகளவில் பிரசித்திப்பெற்ற ஓரல் ராபர்ட்ஸ் பல்கலைகழகத்தை ஸ்தாபித்தவர், இவர் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைக் குறித்து செய்தியாக ஜனங்கள் மத்தியில் பேசி வந்திருக்கிறார், இந்நிலையில் அவருடைய இந்த முதிர்வயதில் தேவன் அவருக்கு விசேஷித்த விதத்தில் இயேசுவின் இரண்டாம் வருகையைக் குறித்த அதிர்ச்சியளிக்கும் தரிசனத்தை கொடுத்துள்ளார், தமக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளைக் குறித்து அவர் கூறிய வார்த்தைகளின் தொகுப்பை உங்கள் முன் வைக்கிறேன், இது வேத வார்த்தைக்கு உகந்த வெளிப்பாடுதான் என்று நீங்கள் கருதுவீர்களானால் இந்த வார்த்தைகளை எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளலாம், அல்லது நீங்கள் இதை தவிர்த்து செல்வதற்கும் உங்களுக்கு உரிமை உண்டு, எது எப்படியானாலும் கிறிஸ்துவின் இரண்டாம் வருகை என்பது நிதர்சனமாக நடக்கப்போகிற வரலாற்று சம்பவமாக மாறப்போகிறது.

இதோ இப்போதும் அந்த முதிர்வயது தேவ மனுஷனுக்கு வெளிப்படுத்தப்பட்ட வெளிப்பாடுகளின் தொகுப்பை தொடர்ந்து படியுங்கள்.

"அமெரிக்க தேசத்திலும் உலகமெங்கிலும் கலவரங்களும், திகிலும் பயமும் சூழ்ந்த நிலையில் நான் அதைக் குறித்து சிந்தித்துக்கொண்டே நடந்துக்கொண்டிருந்தபோது, நான் கர்த்தருடைய சத்தத்தை என் ஆவியின் காதுகளினால் கேட்டேன், இந்த சத்தம் எனக்கு மிகவும் பரிட்ச்சயமான சத்தம், காரணம் இதே சத்தத்தை இதற்கு முன்னர் பலமுறை கேட்டிருக்கிறேன்,நான் அந்த சத்தத்தை கேட்டதோடு மாத்திரமல்ல என் கண்களினால் நான் ஒருபோதும் கண்டிராத காட்சிகளையும் தரிசனமாக கண்டேன்,(அதன் விவரமாவது)

திடீரென, நியுயார்க் நகரத்திலும் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் கிழக்கு பகுதியின் வானத்திலே சூழ்ந்த மேகமானது பூமியை தொடாமல் சிறிது நேரம் அங்கேயே நின்று கொண்டிருந்தது, அதன்பின் அங்கிருந்து முழு அமெரிக்காவிலும் பரவத்தொடங்கியது, அதன்பின்பு அந்த மேகத்தை அமெரிக்க தேசத்திலிருந்து நீக்கி அதை உலகின் பல தேசங்களுக்கு அனுப்பினார், மேலும் நான் கேட்டேன், நான் பார்த்தேன், நான் எதை பார்த்தேன்?, புகை, ஆவி, இரத்தம் மேலிருந்து கீழே வருகிறதைக் கண்டேன், என் ஆவியின் கண்களினால் அதை கண்டேன்.இந்த காட்சி எனக்கு உடனடியாக ஒரு சம்பவத்தை நினைவுக்கு கொண்டுவந்தது, 9/11 சம்பவமாகிய இரட்டை கோபுர தகர்ப்பின் போது நான் கண்ட புகை, ஆவி இரத்த காட்சிகளையே எனக்கு நினைவூட்டியது, 

அதன்பின்பு ஒரு சத்தம் என் செவிகளில் வந்தது, அது எப்படி இருந்ததென்றால், ஒரு விண்கலம் பூமியிலிருந்து விண்ணிற்கு கிளம்பும் போது எப்படி இருக்குமோ அதையே நினைவூட்டியது.

அதன்பின் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர் சொன்னார்," நான் ஒரு அடையாளத்தை உருவாக்குகிறேன்" என்றார், இந்த அடையாளம் அப்போஸ்தலர் நடபடிகளின் இரண்டாவது அதிகாரத்தில் குறிப்பிடப்படும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் ஞானஸ்நானத்தை(அபிஷேகத்தை) குறிக்கிறது, பின்னும் கர்த்தர், இது கடைசிக்கால அடையாளங்களில் குறிப்பிடத்தக்க அடையாளமாக இருக்கிறது, இந்த அடையாளம் ஏன் கொடுக்கப்படுகிறதென்றால், இந்த உலகமானது தேவக்குமாரனுடைய இரண்டாம் வருகைக்காக ஆயத்தமாகவில்லை, என் சபை தேவக்குமாரனுடைய இரண்டாம் வருகைக்கு ஆயத்தமாகவில்லை, எந்த ஜனங்களோடு ஆயிரமாயிரம் ஆண்டுகளாக உடன்படிக்கை மேற்கொண்டு அதை காத்து வருகிறேனோ அந்த யூதர்களும் தேவ குமாரனுடைய வருகைக்கு ஆயத்தமாகவில்லை,  உலகின் தேசங்களும் ஆயத்தமாகவில்லை.

அவர் மேலும் சொன்னார், அமெரிக்காவுடன் நான் மேற்கொண்டுள்ள உடன்படிகை மிகவும் விசேஷித்தது, அமெரிக்காவை தோற்றுவித்த அதன் முந்தின மனிதர்களோடு பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே நான் உடன்படிக்கை மேற்கொண்டுள்ளேன், இந்த தேசம் வேறு எந்த தேசத்தைக் காட்டிலும்  சுவிசேஷத்தை அறிவிக்க முதன்மையாக தெரிந்துக்கொண்டேன், இந்த தேசத்திலிருந்து இன்னும் அதிகமாக சுவிசேஷம் உலகமெங்கும் செல்லும் என்றார்.

மேலும் கர்த்தர், என்னுடைய வல்லமை வீணாக்கப்படுகிறது, என்னுடைய சபையும் மற்றவர்களும் முடிவு காலத்தை குறித்த உண்மைகளை சரியாக பெற்றுக்கொள்வதில் தோல்வியடைந்துள்ளனர், தங்கள் சுயநலத்திற்காகவே பெரும்பாலானவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆலயத்திற்கு வருகின்றனர், உலகின் அனேக பகுதிகளில் உள்ள ஊழியர்களும் அவ்வாறே உலக நாடுகளை குறித்த கரிசனையற்றவர்களாகவே உள்ளனர்.அவர்கள் ஒரு சிறு கூட்ட மக்களை பொறுப்பெடுத்து அவர்களுக்காகவே பாட்டு பாடுகின்றனர், அவர்களுக்காகவே போதனை செய்கின்றனர்,இரட்டை கோபுர தகர்ப்பின்போது அனேக கிறிஸ்தவ விசுவாசிகளுக்குள் பயம் தோன்றி அவர்கள் அதிகமாக கிறிஸ்தவ ஐக்கியத்திற்குள் வந்தனர், ஆலயங்களுக்கு ஒழுங்காக செல்லத்தொடங்கினர், ஆனால் கிறிஸ்தவ போதனையாளர்கள் அதற்கு ஆயத்தமாகவில்லை, இவ்வளவு பெரிய ஒரு சம்பவத்தைக் குறித்து ஜனங்களுக்கு உணர்த்தி அவர்கள் போதிக்கவுமில்லை, பேசவுமில்லை,என்றார்.

மேலும் அவர், நான் ஜனங்களை நேசிக்கிறேன், நான் அவர்களை உருவாக்கினேன், நான் அவர்களை உருவாக்கினபடியால் நான் அவர்களை நேசிக்கிறேன், நான் உலக ஜனங்களை நேசித்தபடியால் என் ஒரே பேரான குமாரனை(இயேசுவை) அவர்களுக்காக அனுப்பினேன் என்றார்.

அதை தொடர்ந்து அவர், பைபிளில் சொல்லப்பட்டுள்ளது தெரியுமா?, இரண்டாம் வருகை இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது, முதலாவது எடுத்துக்கொள்ளப்படல் அல்லது இரகசிய வருகை, இரண்டாவது வெளிப்படையாக கிறிஸ்து வெளிப்படுதல்.

முதலாவதாக எடுத்துக்கொள்ளப்படுதல் அல்லது இரகசிய வருகையில் நான் எடுத்துக்கொள்ளபோகிற என் ஜனங்கள் எப்படிப்பட்டவர்களென்றால் அவர்கள் ஆவியினால் மறுபடி பிறந்தவர்களாகவும், பரிசுத்த ஆவியின் நிறைவை பெற்றவர்களாகவும், எனக்கு ஊழியம் செய்கிறவர்களாகவும் இருப்பார்கள், அவர்களை நான் பரலோகத்திற்கு என் சமூகத்திற்கு எடுத்துக்கொள்கிறபோது மேகங்களில் தேவக்குமாரனை சந்திப்பார்கள், அதன்பின்பு வெகு காலம் செல்லாமல் கிறிஸ்துவின் மணவாட்டியை (கிறிஸ்துவின் சபையாரை) இயேசுவண்டையில் இரண்டாவது முறை பூமிக்கு வருகையில் அவரோடு சேர்க்கப்படுவார்கள், அதுதான் உலக நாடுகளுக்கான நியாயத்தீர்ப்பின் துவக்கமாக இருக்கும்.

ஆனால் அவர் சொன்னார், " என் இருதயத்தை உடைக்கும் காரியம் என்னவென்றால், என் ஜனங்களுக்கு, என் சபையாருக்கு நான் கட்டளையிட்டு சொன்னதாவது, உலகமெங்கும் சுவிசேஷத்தை பிரசங்கியுங்கள், தேசங்களுக்கு சுவிசேஷத்தை அறிவியுங்கள் என்று என்னுடைய சுவிசேஷகர்கள், போதகர்கள், அப்போஸ்தலர்கள், தீர்க்கதரிசிகள் என்னும் பலதரப்பட்ட உலகமெங்கிலும் உள்ள என் ஊழியர்கள் என் கட்டளைக்கு உட்படுகிறதின் அளவு எப்படியுள்ளதென்றால், ஒரு பெரிய வாழியில் உள்ள ஒரு துளி அளவிற்கே சமமாக உள்ளது என்றார்.

அவர் மேலும் சொன்னார், இனி அடி வயிற்றிலிருந்து அக்கினியாய் பிரசங்கங்கள் வெளிப்படும், பரிசுத்தாவியின் அபிசேகம் ஒன்று வர இருக்கிறது, நான் இப்போது வெளிப்படுத்துகிற இந்த அடையாளம் என் சபையின் எழுப்புதலுக்காகவே, ஏனென்றால் இதை கண்கள் யாவும் இதை காணும், காதுகள் யாவும் இதை கேட்கும், அவர்கள் இவைகளை பார்ப்பார்கள், அவர்கள் இது என்ன என்று அறிய வேண்டிய அவசியமில்லை,  இது தேவக்குமாரனுடைய இரண்டாம் வருகைக்காக ஆயத்தப்படுத்தும் எழுப்புதலுக்காகவே 

அவர் வருகிற போது வானங்களை இரண்டாக பிரித்து தம்முடைய மணவாட்டியோடு வந்து பூமியை ஆட்சிசெய்வார், அந்தி கிறிஸ்துவை அவர் அழித்து அந்தி கிறிஸ்துவை பின்பற்றுபவர்களையும் அவர் அழித்து தம்முடைய ராஜ்ஜியத்தை பூமியில் ஸ்தாபிப்பார், மேலும் கர்த்தர் சொன்னதாவது, தேவ குமாரனுடைய இரண்டாம் வருகையை அறியாமல் ஒருவரும் வாழவோ அல்லது மரிக்கவோ முடியாதபடி செய்வேன்". என்றார்.

என்பதாக அவருக்கு வெளிப்பாடு கிடைத்ததாக ஓரல் ராபர்ட்ஸ் கூறி இருக்கிறார், அதின் முக்கியமானவைகளை உங்களுக்கு தொகுத்து வழங்கியிருக்கிறேன், சபை பின்மாரி அபிசேகத்திற்காக காத்திருக்கிறது என்பதை ஆவிக்குரியவர்கள் அறிவார்கள், ஆகவே ஆயத்தமாவோம்.



http://www.charismanews.com/opinion/the-flaming-herald/51037-the-sign-of-christ-s-coming-a-vision-given-to-oral-roberts

No comments:

Post a Comment