
பறவைகளிலேயே கழுகுகளின் கதை மிக சுவாரஸ்யமானது. மிக அதிக நாட்கள் உயிர் வாழும் பறவைகள் இனம் இவைகள்தாம். இவைகளால் 70 ஆண்டுகள் வரை உயிர் வாழ முடியுமாம்.
ஆனால் அந்த எழுபது வயது வரை எட்ட அவை சில மிக கடினமான முடிவுகளை எடுக்க வேண்டி இருக்கும். கழுகுகள் தனது 40 வயதுகளை எட்டும் போது அவைகளால் எளிதில் தனது நீண்ட வளைந்து கொடுக்கும் நகங்களால் இரைகளை கொத்தி எடுத்துச் செல்ல முடியாது. அவைகளின் நீண்ட கூர்மையான அலகுகளும் வளைந்து போய்விடும்.
வயதான அதன் கனமான இறகுகள் அதன் நெஞ்சோடு ஒட்டிக்கொண்டு அதை பறக்க இயலாமல் செய்துவிடும். இந்நிலையில் அவைகளுக்கு இரண்டே வழிகள்தான் மிஞ்சும். ஒன்று அப்படியே செத்துப்போவது அல்லது அந்த 150 நாட்கள் நீடிக்கும் மிகக்கடினமான அந்த காலத்தை கடந்துபோவது.
இதற்காக அவை மலை உச்சியில் தாங்கள் கட்டியிருக்கும் கூடுகளில் போய் தங்கி இருக்கும். தனது பழைய அலகை பாறைகளில் கொத்தி கொத்தி அதை பிடிங்கிப் போட்டு அவை தங்களுக்கு புது அலகுகள் வரகாத்திருக்கும். அதுபோலவே அவைகளின் பழைய நகங்களும் பிடுங்கப்பட்டு புதுநகங்கள் முளைக்கத் தொடங்கும்.
புது நகங்கள் வளரத் தொடங்கியவுடன் அவை தனது பழைய இறகுகளையும் பிடிங்கிப் போட்டுவிடும். ஐந்து மாதங்கள் கடந்ததும் அவை மீண்டும் புத்துயிர் பெற்று திரும்பவும் இன்னும் 30 ஆண்டுகள் உயிர்வாழ பூமிக்கு திரும்பி வரும்.
ஐந்தறிவு கொண்ட ஒரு பறவை இனம் தன் வாழ் நாள் இதோடு முடிந்து போவதில்லை என்று போராடுகிற போது கர்த்தருடைய சாயலில் அவருடைய மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்ட மனித இனம் ஒரு இக்கட்டான சூழ்நிலை வாழ்வில வந்துவிட்டால் தன் வாழ்க்கை இதோடு முடிந்து போனதாக கருதி தற்கொலை செய்து கொள்ளும் அவலம் எத்தனை வேதனையானது,
கழுகு இனங்கள் தங்களை படைத்த இறைவனைப் பார்த்து ஏன் எங்களை கைவிட்டு இப்படிப்பட்ட துன்பத்தை எங்களுக்கு அனுமதித்தீர் என்று கேள்வி கேட்பதில்லை, அவைகளுக்குள் இறைவன் கொடுத்த உத்வேகத்தால் அவைகள் பொறுமையோடு காத்திருந்து அதன் பலனை அடைந்து கொள்ளும்
போராடி ஜெயிப்பவர்களை கர்த்தர் மிகவும் நேசிப்பார், காரணம் நம் தேவன் தோல்வியை கண்டிராதவர், நீங்கள் விழுந்தது தோல்வியல்ல விழுந்து எழுந்து என்னால் முடியாது என்று திரும்பி செல்வதுதான் தோல்வி, எனவே அன்பு சகோதரனே!சகோதரியே நீ ஜெயிக்கவே பிறந்திருக்கிறாய், காத்திரு, விழித்திரு, ஜெபித்திரு,
ஏசாயா40:31 கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்து போகார்கள்.
சங்கீதம் 103:5 நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வால வயது போலாகிறது.
சங்கீதம் 103:5 நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வால வயது போலாகிறது.
No comments:
Post a Comment