Wednesday, 18 November 2015

தென் ஆப்பிரிக்க முன்னாள் பிரசித்தி பெற்ற கிரிக்கட் வீரர் ஷான் பொல்லாக்கின் கிறிஸ்தவ அனுபவம்--jeevavootru.blogspot.com


தென் ஆப்பிரிக்காவின் legendary கிரிக்கட் வீரர் கிராமி பொல்லாக். இவரது(ஷான் பொல்லாக்கின்) குடும்பத்தைச் சேர்ந்தவர். அதனால் ஷான் பொல்லாக் சர்வதேச அளவில் கலந்துக்கொள்ளும் போது மிகுந்த எதிர்ப்பார்ப்பு இருந்தது. 1995 ல் தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடினார். அவரது திறமையான விளையாட்டும், consistent ம், performance ம், அவரை உயர்த்தியது, அந்நிலையை தக்க வைத்துக்கொண்டார். ஆலன் டொனால்டுக்கு பவுலிங் பார்ட்னர் ஆனார். தென் ஆப்பிரிக்கா குழுவின் சிறந்த பார்ட்னர்ஸாக விளங்கினார். அவர்களது கூட்டனி எதிர் அணியினரை எப்போதும் பயமுறுத்துவதாக இருந்தது.

400 டெஸ்ட் விக்கெட்டை எடுத்த முதல் தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர் பொல்லாக் தான். 390 க்கும் மேலான ODI விக்கெட்டை வீழ்த்திய பெருமையும் அவருக்கு உண்டு. பொல்லாக் ஒரு கடினமான பேட்ஸ்மேன் ஆவார். இரண்டு முறைகளிலும் அதிக சதம் எடுத்துள்ளார். ஒரு முறை உலக சிறந்த ஆல் ரவுண்டர் என்று கருதப்பட்டுள்ளார். தென் ஆப்பிரிக்கா, ஆப்பிரிக்கா XI மற்றும் World Xl team களுக்கு கேப்டனாக இருந்துள்ளார்.2003 ம் ஆண்டு Wisden Player Award பெற்றார். அவர் விளையாடிய காலங்களில் தென் ஆப்பிரிக்காவின் ODI Player Award மற்றும் Player's Player Award பெற்றுள்ளார். அவரது Career வெற்றிகரமாக அமைந்தது. கிரிக்கட் உலகில் அன்பும் மரியாதையும் அதிகமாக பெற்றிருந்தார். தனது குடும்ப பெருமையை தக்க வைத்துக்கொண்டார். அதன் பெருமையை அதிகரிக்கவும் செயதார்.

தென் ஆப்பிரிக்காவின் ஒரு சாதாரன குடும்பத்தில் பிறந்த பொல்லாக், கிறிஸ்துமஸ் மற்றும் ஈஸ்டர்(ஆண்டவர் உயிர்தெழுந்த நாள் பண்டிகை) அன்று மட்டுமே ஆலயம் செல்வதுண்டு. கிறிஸ்தவ பண்புகளில் கற்பிக்கப்பட்டார்.சிறு வயதில் ஞாயிறு பள்ளி செல்வதுண்டு. சரி மற்றும் தவறு இரண்டுக்கும் வித்தியாசம் தெரிந்த, ஆனால் தேவனோடு தனிப்பட்ட உறவு என்று எதுவும் இல்லை. கிறிஸ்துவை அறிந்து கொள்வது பற்றி புரிதல் இல்லாமல் இருந்தார், பின்னர் அவரது பெற்றோர், மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர்கள் ஆனார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கையையும் உலகத்தையும் பார்த்த பார்வை முற்றிலும் மாறியது. அவர்களது மாற்றம் பொல்லாக்கை பாதித்தது. ஒரு நாள் தனது தாயாரை த்ன்னோடு சேர்ந்து பாவ மண்ணிப்பு ஜெபத்தை சொல்ல அழைத்தார். அன்று முதல் தன் பாவங்களை களையத் தொடங்கினார். மறுபடியும் பிறந்த கிறிஸ்தவன் ஆனார்.

பொல்லாக் கூறுவது : நீ கிறிஸ்தவனாக் இருக்கும்போது, வாழ்வின் போராட்டங்களையும், பிரச்சனைகளையும் எதிர்கொள்வது மிகவும் சுலபமாகிறது. வேதம் வாசிக்கும் போது நாம் பின்பற்ற வேண்டிய வாழ்க்கையின் நெறிமுறைகளை அறியலாம். வேதத்தைப் போதிக்கும் பழக்கம் கொண்டிருந்தோம் என்றால், சுலபமாக தவற மாட்டோம். மேலும் அவர் சொல்வது என்னவென்றால், தான் ஒரு பெரிய இழப்பு / பாதிப்பு / பிரச்சனையினால் இயேசுவை ஏற்றுக் கொள்ளவில்லை, இயெசுவை ஏற்றுக்கொண்டவர்களுடைய வாழ்வில் இருந்த மாற்றம் என்னை பாதித்தது என்று சொல்கிறார். அவர்களது மாற்றத்தைக் கண்டு, இயேசுவின் தாக்கம் தன் வாழ்விலும் இருக்க வேண்டும் என விரும்பினார்.

தேவனிடம் தன் வாழ்வை ஒப்புக்கொடுத்த நாள் முதல், தேவன் அவருடைய Career ல் சிறப்பாக வழி நடத்தினார். பொல்லாக் "கிரிக்கட் விளையாடும் இந்த திறமையை தேவன் எனக்கு தந்துள்ளார். நான் விளையாடுகிறேன். தேவனுடைய நாம மகிமைக்காக விளையாடுகிறேன். இதனால் நான் கடினமாக விளையாடுவதில்லை. மற்றவர்களுடன் போட்டியிடுவதில்லை என்று அர்த்தமில்லை. (மற்ற)மக்கள் கிறிஸ்தவர்கள் அன்பாக இருக்க வேண்டுமென நினைக்கின்றார்கள். ஆனால் நான் முரட்டுத்தனமான விளையாட்டு வீரன். கிறிஸ்தவம் ஆடுகளத்திலும், வெளியிலும் என்னை சீர் நோக்கோடு செயல்பட உதவுகிறது. என்னால் முடிந்த அளவிற்கு சிறப்பாக விளையாடினாலும், என்னுடைய சிறப்பான ஆட்டங்களுக்கு தேவனுடைய உதவி இன்றியமையாதது" என்கிறார்.

அவர் விளையாடிய நாட்களில் தனது குழுவினருடன் சேர்ந்து ஜெபம் பண்ணுவதுண்டு, ஜெபக்குழு தலைவராக செயல்பட்டுள்ளார். அந்த ஜெபக்குழுவில் உள்ளவர்கள் (மற்ற தென் ஆப்பிரிக்க கிரிக்கட் வீரர்களான) ஜாண்டி ரோட்ஸ்( Johnty Rhodes), கேரி கிரிஸ்டன்(Gary Kirsten), ஹன்சி குரோனே(Hansie Cronje), ஏ.பி. டிவில்லியர்ஸ்(A.B.Dvilliers) மற்றும் பலர். 

அன்பு சகோதரனே! சகோதரியே! ஷார்ன் பொல்லாக்கின் வாழ்க்கை, நமது எல்லா நிலைகளிலும் தேவனோடு நெருங்கி நடக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது. நமது கஷ்ட நேரங்களில் அவரோடு நெருங்கி வாழும் போது, உங்கள் வாழ்வு அர்த்தமுள்ளதாகவும் மாறும் 

நன்றி  :  அறைகூவல்(march 13)

No comments:

Post a Comment