Wednesday, 18 November 2015

இடுக்கமான வாசல் என்பது என்ன?---ஆசிரியர்.சுவி.D. விமலன்--jeevavootru.blogspot.com



இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்;கேட்டுக்கு போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது, அதின் வழியாய் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்கு போகிற வாசல் இடுக்கமும் வழி நெருக்கமுமாயிருக்கிறது, அதை கண்டு பிடிக்கிறவர்கள் சிலர்(மத் 7:13-14)

    இயேசு கிறிஸ்து மாம்சத்தில் இருந்த நாட்களில் ,"வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" (மத் 11:28) என்பதாக கூறினார்,ஆனால் அதே வேளையில் இங்கு மத்தேயு 7:13-14 ல் நீங்கள் இடுக்கமான வாசலிலும் அதன் வழியிலுமே உட்பிரவேசிக்க வேண்டும் என்கிறார், இயேசு மனிதர்களுக்கு சந்தோஷம், சமாதானம், இரட்சிப்பு, நித்திய ஜீவனை அளிக்கும் படியே உலகத்திற்கு வந்தார்.
இதனடிப்படையில் பார்த்தால் மனிதன் ஒடுங்கிய வாழ்க்கையை வாழாமல் விடுதலையுள்ள வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதே அவருடைய விருப்பமாக உள்ளது என்பதை அறிய முடிகிறது, அப்படி இருக்கிறபோது மிகவும் நெருக்கமான வாசல் வழியே பிரவேசிக்க சொல்லுகிற காரணமென்ன என்பதை ஆவியானவர் கொடுத்த விளக்கத்தின் படி உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன், இதை மேலோட்டமாக பார்க்கிற சிலருக்கு 'தீயிலிருந்து ஒருவனை காப்பாற்றி அவனை திரும்பவும் நெருப்புச்சட்டியில் உட்கார வைப்பதைப் போல தோன்றுகிறதே என்று நினைக்கலாம், ஆனால் அது உண்மையல்ல , கிறிஸ்தவ வாழ்க்கை என்பது இந்த இடுக்கமான வாசலில் கஷ்டப்பட்டு நுழைந்த பின் பல வேதனைகளையும் கண்ணீர்களையும் தாண்டித்தான் பரலோகம் செல்ல வேண்டும் என்பது போல சில பல பிரசங்கங்களும்  தவறுதலாக போதிக்கப்படுகிறது, நாம் இவ்வளவு வேதனைகளையும்  சகித்துத்தான் பரலோகம் செல்ல வேண்டும் என்பதற்காகவா கிறிஸ்து சிலுவையில் அந்த பாடுகள் பட்டார்?, அதுவும் அவர் பட்ட பாடுகள் எதுவுமே தனக்காக அல்ல, மாறாக ஒட்டுமொத்த உலக மனுக்குலத்துக்காகவே, பரலோகம் செல்வது என்பது கிறிஸ்துவுக்கு முன்பு வரை எட்டாத கனியாகவே இருந்தது, ஆனால் கிறிஸ்துவுக்கு பின் பரலோகம் செல்வது என்பது மிகவும் சுலபமான ஒன்று என்பதை கிறிஸ்துவின ஆவிக்குரியவர்கள் நன்கு அறிவர், எனவேதான் இயேசு கிறிஸ்து சொன்னார்,"...பரலோகராஜ்யம் பலவந்தம் பண்ணப்படுகிறது; பலவந்தம் பண்ணுகிறவர்கள் அதைப் பிடித்துக்கொள்ளுகிறார்கள்." (மத் 11:12)
பலவந்தம் என்பதின் அர்த்தம் வேதனையோடு, துக்கத்தோடு அதை பெற்றுக்கொள்ளுதல் என்பதல்ல, பலவந்தம் என்பது கட்டாயப்படுத்தி அல்லது மேற்கொண்டு பெற்றுகொள்ளுதல் என்பதே பொருள், மனுக்குலம் பரலோகம் செல்ல தடையாக இருந்த பலம்வாய்ந்த யாவையும் கிறிஸ்து இயேசுவின் மூலமாய் பலவீனப்படுத்தி அவைகளை மேற்கொண்டு எளிதாக அடைந்து கொள்ளுதலையே வேதம் இங்கு குறிப்பிடுகிறது, 
இயேசு கிறிஸ்துவின் மூலமாக இவ்வளவு எளிதாக அடைந்துகொள்ளுகிற பரலோக இராஜ்ஜியத்தின் வாசலும் வழியும் ஏன் இவ்வளவு குறுகினதாக இருக்க வேண்டும் என்ற கேள்வி நமக்குள் தோன்றாமலில்லையே.
  
  இந்த இடுக்கமான வாசல் முதலில் யார் என்று தெரிந்து கொள்ளவேண்டும், யோவான் 10:9 ன் படி இயேசுவே நாம் உட் பிரவேசிக்கும் வாசல், மாத்திரமல்ல அவரே வழியாகவும் இருக்கிறார், வாசலாகிய இயேசுவுக்குள் ஒரு மனுஷன் பிரவேசிப்பது என்பது இரட்சிப்பின் முதல் அனுபவத்தைக் குறிக்கிறது, ஒரு மனுஷன் அல்லது மனுஷி எதிலிருந்து இரட்சிக்கப்படுகிறார்கள் என்றால், அவர்களுடைய ஜென்ம சுபாவ மூட்டைகளை சுமந்தவர்களாக, தங்கள் சுய பாவ இச்சை மூட்டைகளை சுமந்தவர்களாக, பல விதமான வருத்தம் ,நோய், வேதனை, கவலை என்னும் மூட்டைகளை சுமந்தவர்களாக கிறிஸ்து இயேசுவண்டை வருகிறவர்களை மீட்டெடுப்பதே இரட்சிப்பு,

 இப்படிப்பட்ட பாவ பார மூட்டைகளை சுமந்து வருகிறவர்கள் தாங்களே அதை பிடித்திருக்கிறார்கள் என்பதல்ல, அப்படியானால் அவர்களே எங்காவது இறக்கி வைத்து விடலாமே, ஆனால் அம்மூட்டைகள் அனைத்தும் அவர்களோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது, எனவே அவர்கள் தன்னுடைய பாரங்களிலிருந்து தனக்கு விடுதலை வேண்டும் என்று ஏங்குகிற போது, அங்கே வாசலாக இருக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து,"பாரஞ்சுமக்கிற நீங்கள் யாவரும் என்னிடத்தில் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" என்கிறார், அவருடைய வார்த்தைக்கு செவிகொடுத்து வாசலாகிய இயேசுவண்டை வருகிறபோது, அந்த வாசல் குறுகியதாகவும், இடுக்கமானதாகவும் இருப்பதைப் பார்த்து திகைத்தவர்கள் சிலர் குழப்ப்மடைந்து இந்த குறுகிய வாசலுக்குள் இவ்வளவு பெரிய மூட்டைகளோடு நான் எப்படி  பிரவேசிக்க இயலும் என்ற சந்தேகத்தோடு திரும்பிச்சென்று தடையில்லாத பெரிய வாசல் வழியாக பாரத்தைச் சுமந்தவாரு வேதனையோடு கண்ணீரோடு கலக்கத்தோடு முடிவை அறியாமல் அதில் செல்ல தீர்மானிக்கின்றனர், ஆனால் நம்பிக்கை கொண்டவர்கள் கிறிஸ்துவாகிய அந்த குறுகிய இடுக்கமான வாசலில் நுழைய முற்பட்டபோதே அவர்கள் மேல் ஒட்டியிருந்த மூட்டைகள் தானாக அறுந்து விழுகிறதை கண்டபோது அவர்கள் இருதயத்தில் ஆனந்தம் பேரானந்தத்தோடு இன்னமும் நான் உள்ளே நுழைய முயற்சிப்பேன் என்று தன் உடலை நுழைத்தபோது இன்னும் பல மூட்டைகள் தெரித்து விழுவதை கண்ட பாரம் சுமந்த மனுக்குலம் ஆச்சர்யத்தோடு ஆனந்தத்தோடு தொடந்து முயற்சித்து முன்னேறுகிறார்கள், அதுவரையில் அவர்களை வாட்டி வதைத்த மன பாரங்கள் நீங்கி பாவ பாரங்களிலிருந்து , சாப பாரங்களிலிருந்து விடுதலையை அடைகிறவர்களாக அந்த இடுக்கமான் வாசலில் மிகுந்த சந்தோஷத்தோடு நுழைகிறார்கள் , ஆக இடுக்கமான வாசல் என்பது தம்முடையவர்களை கஷ்ட படுத்துவதற்கான வாசலாக இல்லாமல், தம்மைத் தேடி வருகிற பர்ரஞ்சுமந்தவர்களை விடுவிப்பதற்கான வாசலாகவே அந்த இடுக்கமான வாசல் காணப்படுகிறது, எல்லாம் சரி இடுக்கமான வாசல் ஓகே, வழியும் ஏன் இடுக்கமா இருக்கனும் அப்படின்னு கேட்க தோன்றலாம், கிறிஸ்துவின் வழி விசாலமானதாக இருந்தால் ம்னிதன் மீண்டும் இச்சையில் இழுப்புண்டு, மீண்டும் பாவ மூட்டைகளை சுமந்தவர்களாக பரலோக வாசலை தட்டிவிடக்கூடாதே என்பதற்காகத்தான் வழியையும் இடுக்கமாக வைத்து அதில் தம்முடைய பரிசுத்தவான்களை பயணிக்க செய்கிறார், இந்த நெருக்கமான வழியில் பயணிக்கும் பரிசுத்தவான்கள் யாவரும் சமாதானத்தோடும் சந்தோஷத்தோடும் பெரிதான நம்பிக்கையோடும் தேவ பெலத்தோடும் யுத்த வீரனை போல வெற்றி நடை போடுவார்கள், இதைத்தான் பவுலடிகள் நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டாலும் ஒடுங்கிப்போகிறதில்லை (2 கொரி 4:8) என்கிறார், சிலர் கிறிஸ்து எனும் இடுக்கமான வாசலில் உட்பிரவேசித்தும் இடுக்கமான வழிப்பாதையை தொடராமல் விசாலமான பாதையில் நுழைந்து , பல விதமான உலக பாரங்களை மீண்டும் சுமந்து கொண்டு கிறிஸ்தவ வாழ்க்கையிலும் மன நிம்மதி இல்லை என்று புலம்பிக்கொண்டு அல்லது முறுமுறுத்துக்கொண்டு வெளி உலகத்திற்கு கிறிஸ்தகவர்களாக வேஷம் போட்டே வாழ்ந்து வரும் அவல நிலைக்கு கிறிஸ்து எவ்வளவும் காரணமல்லவே, தன் வாழ்க்கையில் காணப்ப்டும் பின் மாற்றதை உணரும் உணர்வில்லாமல் பயணித்துகொண்டிருக்கின்றனர், 

ஆக இடுக்கமான வாசல், வழி என்பது உலக பயமில்லாமல் நிம்மதியுடன் கிறிஸ்துவின் வருகை மட்டும் தொடருகின்ற பயணம்தான் கிறிஸ்தவ வாழ்க்கை என்பதை கர்த்தருடைய ஆவியானவர் கொடுத்த தைரியத்தோடு உங்களுக்கு தெரிவித்திருக்கிறேன், இனி இடுக்கமான வாசல் என்பது கடினமானது வேதனையானது கண்ணீர் நிறைந்தது என்று உங்கள் செவி கேட்க சத்துரு போதித்தால் சரியான பதிலடி கொடுப்பீர்களென்று கர்த்தருக்குள் விசுவாசிக்கிறேன், தேவனுக்கே மகிமையுண்டாவதாக

இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்;கேட்டுக்கு போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது, அதின் வழியாய் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்கு போகிற வாசல் இடுக்கமும் வழி நெருக்கமுமாயிருக்கிறது, அதை கண்டு பிடிக்கிறவர்கள் சிலர்(மத் 7:13-14)

நேச வைராக்கியம்--jeevavootru.blogspot.com

நேசம் மரணத்தைப்போல் வலிது; நேசவைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடிதாயிருக்கிறது; அதின் தழல் அக்கினித் தழலும் அதின் ஜுவாலை கடும் ஜுவாலையுமாயிருக்கிறது - (உன்னதப்பாட்டு 8:6).

புஷ்யோக் என்னும் ரஷ்ய வாலிபன் எப்போதும் புன்சிரிப்புடன் இருப்பான். அவனை காண்பவர்களை கவர்ந்திழுக்கும் உள்ளத்தை உடையவனாய் இருந்தான். மட்டுமல்ல, இனிமையாக பாடி வாத்திய கருவிகளை இசைப்பதில் அவனுக்கு இணை அவன்தான்.
.
அவனது பெற்றோர் அவனை இசைக்கல்லூரியில் சேர்த்தனர். சங்கீதத்தை
முறைப்படி கற்றது மட்டுமல்ல, எல்லா இசைக் கருவிகளையும் திறமையாக
மீட்டுவதிலும் பிரசித்திப் பெற்றவனாக இருந்தான். தன்னோடு சுட படிக்கும்
மாணவன் மூலமாக கிறிஸ்து தம் ஜீவனை கல்வாரியில் எபபடி கொடுத்தார்
என்பதை அறிந்தான். அவன் உள்ளம் கிறிஸ்துவுக்காக பொங்கியது.
கிறிஸ்து தம் ஒரே ஜீவனை எனக்காக அர்ப்பணித்தாரென்றால் ஏன் என்
திறமை தாலந்துகள் எல்லாவற்றையும் அவருக்காக அர்பணிக்கக்கூடாது
என தீர்மானித்தான்.
.
.
அவன் பட்டம் பெறும் நாள் வந்தது. அவனது அருமையான பெற்றோர்கள்
மகிழ்ச்சியோடு, ஒழுங்கு செய்யப்பட்ட பெரிய மண்டபத்தில் காத்துக்
கொண்டிருந்தனர். அவனுடைய ஆசிரியர்கள் பெருமையோடு தம்தம்
ஆசனங்களில் வந்து அமர்ந்தனர்.
.
.
ரஷ்யாவில் நாடோடிப்பாடலான 'பொன் வாத்தின் மதுரக்கீதம்' என்ற
பாடலையே தன் பட்டம் பெறும் பாடலாக தெரிந்தெடுத்தான். தன் முழு
உள்ளத்தையும் அந்த பாடலில் இணைத்து, உருக்கமாக பாடிக் கொண்டே
வந்தான். அந்தப் பாடலோடு கூட அப்படியே கல்வாரியின் கீதத்தையும்
இணைத்து இயேசுவின் அன்பு, அவரது தியாகத்தையும், உருக்கமான
குரலில் பாடி முடித்தான். கல்லைப் போலுள்ள உள்ளங்கள் மெழுகைப்போல
உருகின. அவனது ஆசிரியர்கள் திகைத்தார்கள். அரசாங்க அதிகாரிகள்
உறுமினார்கள். அவன் மெதுவாய் மேடையில் எழுந்து நின்று, உறுதியான
குரலில், 'பாரமான சிலுவையை தம் தோள்களிலே தூக்கிக் கொண்டு
எருசலேம் வீதி வழியாக இரத்த வியர்வையோடு நடந்து, எனக்காக
ஜீவனைக் கொடுதுது, தன் ஜீவனைப் பார்க்கிலும் என்னை அதிகமாக
நேசித்தவரை நான் எப்படி நேசியாமல் இருக்க முடியும்?' என்று கூறினான்.
.
.
அப்பொழுதே அவன் கைகளில் விலங்குகள் மாட்டப்பட்டன. அவன்
பெற்றோர் கலங்கி தவித்தனர். அவன் அவர்கள் பக்கமாக திரும்பினான்,
'அம்மா,கல்வாரி கீதத்தோடு என் வாழ்க்கையின் கீதத்தையும் இணைத்துக்
கொண்டதில் நான் பெருமைப்படுகிறேன்' என்றான். மரண தண்டனைக்காக
அவன் நடந்து சென்றான். அவன் நடையில் ஒரு கெம்பீரம் இருந்தது.
.
.
பிரியமானவர்களே, நம் தேவன் மேல் நமக்கு இதுப் போன்ற நேச
வைராக்கியம் உண்டா? கிறிஸ்தவ வாலிபர்கள் பலர், தங்களது
தாலந்துகளை கர்த்தருக்கென்று பயன்படுத்தாமல், தங்கள் விருப்பப்படி
சினிமா பாடல்களுக்கும், மற்ற பாடல்களுக்கும் உபயோகப்படுத்தி
கொண்டிருக்கும் காலத்தில், நாம் நம் பிள்ளைகளுக்கு, தேவனுக்கேற்ற
வைராக்கியத்தை குறித்து போதிக்கிறோமா?

நன்றி : அனுதின மன்னா

தம்முடைய வசனத்தை அனுப்பி தம்முடையவர்களை காத்த மெய்யான தேவன்--jeevavootru.blogspot.com

அந்த பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பரிசுத்த வேதாகமம்Inline image 1
சமீபத்தில்(கடந்த மே 2013) ட்விஸ்டர் என்று சொல்லப்படுகிற அதிபயங்கர சுழல்புயல் காற்று அமெரிக்காவின் ஒக்லஹாமா பகுதியை மிகவும் சீரழித்து சென்றதை உலகமே அறியும், 

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இந்த புயல் மிகப்பெரிய சேதத்தை விளைவித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

சுமாராக 51 பேர் வரை இந்த புயலால் மரித்துள்ளனர் என்றும் இதில் குழந்தைகளும் அடங்குவதாக செய்திகள் குறிப்பிடுகின்றன,

இதுபோன்ற புயலை பின் தொடர்ந்து ஆய்வுகளை செய்துவருகின்ற குழுவைச் சேர்ந்த பிரண்டன் ஹெய்டன் என்பவர் புயல் சேதப்பகுதியில் திறந்த நிலையிலிருந்த ஒரு பைபிளை கண்டெடுத்தார், எதேச்சையாக அது ஏசாயா 32:2 வசனத்தை காண்பித்த படி திறந்திருந்தது, அவ்வசனம் என்னவென்றால் " அவர் காற்றுக்கு ஒதுக்காகவும், பெருவெள்ளத்துக்கு புகலிடமாகவும் , வறண்ட நிலத்துக்கு நீர்கால்களாகவும், விடாய்த்த பூமிக்கு பெருங்கன்மலையின் நிழலாகவும் இருப்பார்" என்பதே அந்த வசனம்,

அந்த புயல் ஆய்வாளர் இந்த வேதாகமம் யாருடையது என்பதை பார்த்தபோது அது மைக்கேல் அலெக்சாண்டர் என்பவருக்கு சொந்தமானது என்பதை தெரிந்துகொண்டார், இது அவருடைய வீட்டிற்கு அருகாமையிலுள்ள ஒரு பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

புயல் ஆய்வாளர் பிரண்டன், தான் அந்த பைபிளை எடுத்த வன்னமாக அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தார், அவரும் அந்த வேத வசனத்தை படித்தார், தன்னையும் தன் வீட்டாரையும் தேவனே தம் வார்த்தையை அனுப்பி காத்தார் என்பதை மனதார உணர்ந்தவராக முழங்கால் படியிட்டு வானத்திற்கு நேராக கைகளை கூப்பி நன்றி ஏறெடுத்தார், இந்த கர்த்தருடைய வார்த்தை தன்னை மிகவும் தேற்றி நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்றார்

சீக்கிரத்தில் இந்த செய்தி தேசமெங்கும் பரவியது, நம்பிக்கை இழந்த நிலையில் பீதியில் உறைந்திருந்த அநேகருக்கு நம்பிக்கை தீபமாய் விளங்கியது

ஏசாயா 32:2 "" அவர் காற்றுக்கு ஒதுக்காகவும், பெருவெள்ளத்துக்கு புகலிடமாகவும் , வறண்ட நிலத்துக்கு நீர்கால்களாகவும், விடாய்த்த பூமிக்கு பெருங்கன்மலையின் நிழலாகவும் இருப்பார்"

சங்கீதம் 19:7 "கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்பிக்கிறதுமாயிருக்கிறது

~ நிக் ஒரு அதிசய பிறவி ~jeevavootru.blogspot.com


நான் பிறந்தவுடன் என்னை பற்றி கேள்விப்பட்ட என் தாயும் தகப்பனும் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டனர். என் அப்பா மருத்துவரிடம் சென்று என் மகனுக்கு ஒரு கை இல்லையா என்று கேட்டார். மருத்துவர் "ஒரு கை மட்டும் அல்ல. அவனுக்கு இரு கையும், இரு கால்களும் இல்லை" என்று கூறினார். என் பெற்றோரால் இதை ஏற்று கொள்ள முடியவில்லை. ஆனால் அவர்கள் கடவுளை அதிகமாக நம்பினதால் அவர் மீது வைத்திருந்த விசுவாசத்தை விடவில்லை. என் தாய் முதல் 4 மாதங்கள் தாய்ப்பால் கொடுப்பதற்கு கஷ்டப்பட்டார்கள்.

தேவன் நிச்சயம் ஓர் திட்டம் வைத்திருப்பார் என்று என் பெற்றோர் நம்பினார்கள். நான் தேவனிடம் சாவல் விட்டேன். "தேவனே, நான் ஒரு பாவி என்று தெரியும். ஆனால் நீங்கள் எனக்கு இந்த பதிலை தர வேண்டும். ஏன்? ஏன் என் இருகைகளையும் கால்களையும் எடுத்துவிட்டீர்கள். மற்ற எல்லோருக்கும் கொடுத்திருக்கும் பொது ஏன் எனக்கு கொடுக்கவில்லை. நீர் இதற்கு பதில் தரவில்லை என்றால் நான் உமக்கு எதுவுமே செய்ய மாட்டேன்".

கடவுள் என்னுடைய கேள்விக்கு பதில் தராவிட்டால் நான் என்னை முடித்துக்கொள்வேன். என்னுடைய 8ம் வயதில் தற்கொலை செய்துகொள்ளும் விதமாக தண்ணீரில் குதித்தேன். அனாலும் காப்பாற்றப்பட்டேன். அதன் பிறகு என் பெற்றோர் என் மீது வைத்திருந்த அளவுகடந்த நம்பிக்கையை தெரிந்துகொண்டேன்.

என் தாய் என்னிடம் கூறினார்கள். நிக், நிச்சயம் தேவன் உன்னை பயன்படுத்துவார். எனக்கு எப்போ எங்கே என்று தெரியாது.

இந்த வார்த்தை என்னில் கிரியைசெய்தது. நாம் சரீரத்தில் உடைபட்டிருப்பதை விட இருதயத்தில் அவருக்காக உடைபட வேண்டும் என்று தெரிந்து கொண்டேன். எந்த ஒரு சூழ்நிலையிலும் தேவன் என்னை பயன்படுத்த முடியும் என்று தெரிந்து கொண்டேன்.

என்னுடைய 15ம் வயதில் இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுகொண்டேன். யோவான் 9: 2,3 அப்பொழுது அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: ரபீ, இவன் குருடனாய்ப் பிறந்தது யார் செய்த பாவம், இவன்செய்த பாவமோ, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமோ என்று கேட்டார்கள். இயேசு பிரதியுத்தரமாக: அது இவன் செய்த பாவமுமல்ல, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமுமல்ல, தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படும்பொருட்டு இப்படிப் பிறந்தான்.

2 தீமோத்தேயு 3:16. வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது;

என்று எழுதப்பட்டுள்ளது. நான் விசுவாசிக்கிறேன், தேவன் எனக்குள்ளாக சுவாசத்தையும், விசுவாசத்தையும் ஊதியிருக்கிறார். இந்த விசுவாசமும், சமாதானமும் என்னை வழிநடத்துகிறது. என் தேவன் என் கேள்விக்கு பதில் கொடுத்து விட்டார் என்று விசுவாசிக்கிறேன். ஏன் என்று கேட்ட கேள்விக்கு தேவன் கொடுத்த பதில் "நீ என்னை விசுவாசிக்கிறாயா?" நான் "ஆம்" என்று சொன்னேன். அது போதும், வாழ்க்கையில் எதுவுமே தேவையில்லை.

நான் எதற்காக இங்கே இருக்கிறேன் என்கிற உண்மையை இயேசு கிறிஸ்துவுக்குள் அறிந்துகொண்டேன். வேறு எங்கும் இல்லை. பலர் என்னை பல விதங்களில் குறை கூறி உள்ளனர். நீ எதற்கும் லாய்க்கியில்லை என்று உதறி தள்ளினர். நீங்கள் இயேசு கிறிஸ்துவுக்குள் உண்மையை கண்டுபிடிக்கவில்லை என்றால் பொய்கள் தான் உண்மை என்று நம்பவேண்டும். நாம் வேதத்தை வாசிக்கும் போது நாம் யார் என்கிற உண்மை புரியும். நான் மனிதன் அல்ல. தேவனின் பிள்ளை. பாவம் கழுவப்பதினால் ராஜாதிராஜாவம் இயேசுகிறிஸ்துவுக்கு ஊழியம் செய்யும் பாக்கியம் பெற்றேன்.

இது நிக் அல்ல. எனக்கு கொடுக்கப்படும் அனுதாபங்கள் இல்லை. நான் ஒன்றும் இல்லாதவன். கடவுள் எனக்குள் வாழ்கிறார். அவருடைய பலத்தில் நான் இருக்கிறேன். இயேசு என்ன செய்தாரோ நானும் செய்கிறேன்.

எனக்கு தேவன் அதிசயத்தை செய்யாமல் போனாலும் நான் அவருடைய திட்டத்தில் இருக்கிறேன். ஊழியம் ஆரம்பித்த புதிதில் சுமார் 200,000 பேர் இரட்சிக்கப்பட்டார்கள். யாராவது ஒருவரையாவது இயேசுகிறிஸ்துவுக்குள் வழிநடத்துங்கள். ஆமென் .... 


இரண்டு கைகளும் இரண்டு கால்களும் இல்லாத சகோதரர் நிக், தேவனுக்கு சாட்சியாக வாழ்ந்து வருகிறார், ஆனால் சரீரத்தில் ஒரு குறையும் இல்லாத நம்மில் அனேகர் அவரிடம் சாக்கு போக்கு சொல்லி தேவ இராஜ்ஜிய பணியில் பின் தங்கியுள்ளோம், 

இந்த சாட்சியின் மூலம் கர்த்தருடைய ஆவி உங்களோடு இடைபட்டால் உங்களை தேவனுக்கு அர்ப்பணிப்பீர்களா??

பிளாக் ஹோலில் சிக்கிய விண்கலம்--jeevavootru.blogspot.com


1962-ம் வருடம் பிப்ரவரி மாதம் 20ம் தேதி சரியாக காலை 9:47 மணியளவில் விண்கலம் கொழுந்து விட்டு எரியும் நெருப்பின் நடுவில் புகையை கக்கி கொண்டு, ஜான் கிலன் (John Glenn) என்ற விண்வெளி ஆராய்ச்சியாளரை ஏந்தி கொண்டு கிளம்பியது. அந்த விண்கலத்தில் அவர் மட்டும் தனித்து பயணம் செய்தார்.

அந்த விண்கலம் பூமியை மூன்று முறை சுற்றி, நான்கு மணி நேரத்தில் 80,000 மைல்களை கடந்து வந்து படங்களை எடுத்துவிட்டு, பூமிக்கு திரும்ப ஆரம்பித்தது. அந்த ஊர்தி கீழே வந்து கொண்டிருந்தபோது, அதை கன்ட்ரோல் செய்து கொண்டிருந்த ஹுஸ்டனில் உள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை அந்த விண்கலத்தில் இருந்து கிடைத்தது. 

அதன்படி, அந்த ஊர்தியில் இருந்த அக்கினி கேடகம் அதை விட்டு தனியே கழன்றுகொண்டு இருக்கிறது என்று அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அப்படி அது கழன்று வந்தால், முழு ஊர்தியும் எரிந்து போய் விடும். அதிலிருந்த ஜானும் எரிந்து போய் விடுவார்.

இதை விண்வெளியிலிருந்து சரி செய்ய இப்போது முடியாது. ஆனால் அந்த கலம் பூமியை நோக்கி விரைவாக வந்து கொண்டிருந்தது. என்ன செய்வது என்று விஞ்ஞானிகள் யோசித்து கொண்டிருந்தனர்.

அதே நேரத்தில் திடீரென்று அந்த விண்வெளிகலத்திற்கும் கீழே அதை இயக்கி கொண்டிருந்த ஆராய்ச்சியாளர்களுக்கும் இடையில் தொடர்பு அற்று போனது. அதை Black Hole என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். எந்தவித தொடர்பும் என்ன நடக்கிறது என்று அறியாமலும் இருக்கும்போது இந்த நிலைமை ஏற்படும்.

நிமிடங்கள் வேகமாக கடந்து சென்று கொண்டிருந்தது. நாசா விஞ்ஞானிகள் இயக்குகிற அறையிலிருந்து என்ன செய்வது என்று தவித்து கொண்டிருந்தனர். 

ஐந்து நிமிடங்கள் கழித்து, ஜானின் குரல் அவர்களுடைய ரேடியோவில் கேட்டது 'இது ஜான்' என்று. ஜான் பூமியை நோக்கி பத்திரமாக வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்தவர்களின் மத்தியில் ஏற்பட்ட சந்தோஷம் அளவில்லாதது!

பின்னர் தான் தெரிந்தது, அது தவறான ஒரு சிக்னல் என்று! ஜான் பத்திரமாக வந்து தரையிறங்கினார். அவர் அந்த Black Hole லில் இருந்த அந்த நிமிடங்கள் மிகவும் அதிர வைக்கத்தக்கதாக இருந்தது.

இதை போலவே அநேக நேரங்களில நாமும் தனிமையில் விடப்பட்டதைப் போன்ற நிலையில் தள்ளப்படுகிறோம், எந்த மனிதர்களும் நமக்கு எதுவும் செய்ய முடியாத நிலையில்,எல்லாம் முடிந்து போனது போன்ற சூழ்நிலை நம்மை இருக்கமான இருள் சூழ்ந்த மனநிலைக்கு தள்ளலாம், 

உலகம் உங்களைப் பார்த்து சொல்லலாம் இது உன் விதி, இதுதான் உன் தலையெழுத்து, இனி உன்னை யாராலும் காப்பாற்ற இயலாது என்று கைவிடலாம், இன்னும் சிலர் உங்கள் நிலையைக் கண்டு உங்களுக்காக இரண்டு சொட்டு கண்ணீரும் விடலாம், ஆனால் நீங்கள் சிக்கியுள்ள இந்த குழியிலிருந்து உங்களை விடுவிக்க, அந்த அசுத்தம் நிறைந்த அறுவருப்பான குழிக்குள் இறங்கி உங்களை தூக்கி எடுக்க ஒருவரால் மாத்திரமே கூடும் அவர்தான் "இயேசு".

இயேசுவை தவிர வேறு வழியே இல்லை, நீங்கள் சிக்கியுள்ள இந்த பிளாக் ஹோலில் ஒருவரை மட்டுமே தொடர்பு கொள்ள இயலும் அவர் இயேசு, உங்களை விடுவிக்க அவர் காத்திருக்கிறார் அவரை நோக்கி கூப்பிடுவீர்களா

சங்கீதம் 139:8 "...நான் பாதாளத்தில் படுக்கைப் போட்டாலும்,நீர் அங்கேயும் இருக்கிறீர்"
சங்கீதம் 121:1 எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்
சங்கீதம் 121:2 வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்.

கழுகைப் போல காத்திருந்தால்... ஆசிரியர்.சுவி.D. விமலன்--jeevavootru.blogspot.com



பறவைகளிலேயே கழுகுகளின் கதை மிக சுவாரஸ்யமானது. மிக அதிக நாட்கள் உயிர் வாழும் பறவைகள் இனம் இவைகள்தாம். இவைகளால் 70 ஆண்டுகள் வரை உயிர் வாழ முடியுமாம். 

ஆனால் அந்த எழுபது வயது வரை எட்ட அவை சில மிக கடினமான முடிவுகளை எடுக்க வேண்டி இருக்கும். கழுகுகள் தனது 40 வயதுகளை எட்டும் போது அவைகளால் எளிதில் தனது நீண்ட வளைந்து கொடுக்கும் நகங்களால் இரைகளை கொத்தி எடுத்துச் செல்ல முடியாது. அவைகளின் நீண்ட கூர்மையான அலகுகளும் வளைந்து போய்விடும். 

வயதான அதன் கனமான இறகுகள் அதன் நெஞ்சோடு ஒட்டிக்கொண்டு அதை பறக்க இயலாமல் செய்துவிடும். இந்நிலையில் அவைகளுக்கு இரண்டே வழிகள்தான் மிஞ்சும். ஒன்று அப்படியே செத்துப்போவது அல்லது அந்த 150 நாட்கள் நீடிக்கும் மிகக்கடினமான அந்த காலத்தை கடந்துபோவது. 

இதற்காக அவை மலை உச்சியில் தாங்கள் கட்டியிருக்கும் கூடுகளில் போய் தங்கி இருக்கும். தனது பழைய அலகை பாறைகளில் கொத்தி கொத்தி அதை பிடிங்கிப் போட்டு அவை தங்களுக்கு புது அலகுகள் வரகாத்திருக்கும். அதுபோலவே அவைகளின் பழைய நகங்களும் பிடுங்கப்பட்டு புதுநகங்கள் முளைக்கத் தொடங்கும்.

புது நகங்கள் வளரத் தொடங்கியவுடன் அவை தனது பழைய இறகுகளையும் பிடிங்கிப் போட்டுவிடும். ஐந்து மாதங்கள் கடந்ததும் அவை மீண்டும் புத்துயிர் பெற்று திரும்பவும் இன்னும் 30 ஆண்டுகள் உயிர்வாழ பூமிக்கு திரும்பி வரும்.

ஐந்தறிவு கொண்ட ஒரு பறவை இனம் தன் வாழ் நாள் இதோடு முடிந்து போவதில்லை என்று போராடுகிற போது கர்த்தருடைய சாயலில் அவருடைய மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்ட மனித இனம் ஒரு இக்கட்டான சூழ்நிலை வாழ்வில வந்துவிட்டால் தன் வாழ்க்கை இதோடு முடிந்து போனதாக கருதி தற்கொலை செய்து கொள்ளும் அவலம் எத்தனை வேதனையானது,

கழுகு இனங்கள் தங்களை படைத்த இறைவனைப் பார்த்து ஏன் எங்களை கைவிட்டு இப்படிப்பட்ட துன்பத்தை எங்களுக்கு அனுமதித்தீர் என்று  கேள்வி கேட்பதில்லை, அவைகளுக்குள் இறைவன் கொடுத்த உத்வேகத்தால் அவைகள் பொறுமையோடு காத்திருந்து அதன் பலனை அடைந்து கொள்ளும் 

போராடி ஜெயிப்பவர்களை கர்த்தர் மிகவும் நேசிப்பார், காரணம் நம் தேவன் தோல்வியை கண்டிராதவர், நீங்கள் விழுந்தது தோல்வியல்ல விழுந்து எழுந்து என்னால் முடியாது என்று திரும்பி செல்வதுதான் தோல்வி, எனவே அன்பு சகோதரனே!சகோதரியே நீ ஜெயிக்கவே பிறந்திருக்கிறாய், காத்திரு, விழித்திரு, ஜெபித்திரு, 

ஏசாயா40:31 கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்து போகார்கள்.

சங்கீதம் 103:5 நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வால வயது போலாகிறது.

தமிழ் வேதாகம சரித்திரம்--jeevavootru.blogspot.com


இந்திய மொழிகளிலே, தமிழ் மொழி தான் பழங்கால இலக்கியங்களைத் தன்னிடத்தே கொண்ட தனிப்பெருமை வாய்ந்தது. இந்தியாவின் இலக்கிய வரலாற்றில் தமிழ் மொழிக்கு இரண்டு தனிச்சிறப்பும், மேன்மையும் உண்டு. அதில் ஒன்று இந்திய மொழிகளிலே தமிழ் மொழியில்தான் முதன்முதலில் புத்தகம் அச்சிடப்பட்டது. இந்தியாவில் முதன்முதலாக வேதாகமம் அச்சிடப்பட்ட தனிப்பெருமை தமிழ் மொழியின் இரண்டாவது தனிச்சிறப்பு.
தமிழ் மொழியில் வேதாகமம் மொழி பெயர்க்கப்படுவதற்கு முக்கிய காரணமாயிருந்தவர் டென்மார்க்கு தேசத்தின் அரசன் நான்காம் பிரடெரிக். இவருக்கு இந்தியாவின் மேல் இருந்த மிஷனெரி ஊழிய பாராத்தால், எப்படி யாவது இந்தியாவுக்கு மிஷனெரிகளை அனுப்ப ஏற்பாடு செய்தார். தன் அரண்மனை பிரசங்கியாராகிய லுட்கென்ஸிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தார். ஆனால் இந்தியாவிற்கு மிஷ னெரியாக செல்வதற்கு டென்மார்க்கு தேசத்தில் ஒருவரும் முன் வராததால், லுட்கென்ஸ் தன் சொந்த தேசமாகிய ஜெர்மனியின் பக்கம் திரும்பினார். அதன் விளைவாக 23 வயது சீகன் பால்க்கும், அவரது நண்பர் 29 வயது ப்ளுட்சும் இந்தியாவிற்கு மிஷனெ ரியாக செல்வதற்கு முன் வந்தார்கள்.  சீகன் பால்க் தனது 16வது வயதில் இரட்சிக்கப்பட்டார். இந்த அனுபவத்திற்குப் பின்பு கல்லூரி மாணவராக இருக்கும் சமயத்தில் பின்வரும் சவால் நிறைந்த வார்த்தைகளை அவர் கேட்க நேர்ந்தது. புறஜாதியார் தேசத்திலே ஒரே ஒரு ஆத்துமா இரட்சிக்கப்படுவது, ஐரோப்பாவிலுள்ள ஒரு கிறிஸ்துவ தேசத்தில் 100 ஆத்துமாக்கள் இரட்சிக்கப்படுவதற்கு சமம் இந்த வார்த்தைகளின் மூலமாக தேவன் சீகன் பால்க்கை மிசினரி ஊழியத்திற்கு அழைத்தார். சந்தேகம், உபத்திரவம், அடிக்கடி உண்டாகும் சரீரசுகவீனம் இவைகள் மத்தியில் சீகன் பால்க் தேவனுடைய அழைப்பை ஏற்றுக்கொண்டு இந்தியாவிற்கு மிசினெரியாக போக தன்னை ஆயத்தப்படுத்தினார்.  வீரமும், விடாமுயற்ச்சியும் நிறைந்ததொரு வாழ்க்கைதான் சீகன் பால்க்கின் சரித்திரம். அவர் இந்தியாவிற்கு மிஷனெரியாக செல்வதற்கு தீர்மானித்த அந்த நாட்களிலே, ஐரோப்பா கண்டத்தில் வாழ்ந்து கொண்டிருந்த அனை த்து கிறிஸ்தவ சமுதாயமும் வெளிநாட்டிற்கு மிஷனெரியை அனுப்புவது வீண் என்றும், விருதா ஊழியம் என்றும் நம்புகின்ற ஒரு காலமாக இருந்தது. ஐரோப்பாவில் செடிக்கு தண்ணீர் பாய்ச்சுகிற வேலையே செய்யாமல் கிடக்கும் பொழுது, ஏன் வெளிநாட்டிற்கு சென்று செடியை நடுகின்ற வேலை யைத் தொடங்கவேண்டும்?. என்று விவாதித்து தர்க்கம் செய்யும் காலம் அது. சீகன் பால்க் இந்தியாவிற்குப் போவதை அநேக கிறிஸ்தவர்கள் விரும்பவில்லை
இதன் காரணத்தால் சீகன் பால்க், ப்ளுட்சு இருவருமே மிசனெரி தகுதித் தேர்வில் தோல்வியடைய நேர்ந்தது.  அவர்கள் இருவரையும் ஆலயத்தில் பிரதிஸ்டை செய்வதற்குக் கூட அங்கிருந்த பிஷப் மறுத்துவிட்டார். இறு தியில் டென்மார்க் அரசன் 4 வது பிரடெரிக் இந்த இரண்டு விஷயத்திலும் நேரடியாக குறுக்கிட வேண்டியதாயிற்று. இறுதியில் அவர்கள் இருவரும் தேர்வில் வெற்றி பெற்றார்கள். பின்பு ஒரு லுத்திரன் ஆலயத்திலே பிரதிஷ்டை செய்யப்பட்டார்கள். அதன்பின்பு 1705ம் ஆண்டு நவம்பர் 30ம் நாள் இருவரும், இந்தியாவிற்கு, பிராட்டெஸ்டெண்டு சபையால் அனுப்பப்பட்ட முதல் மிஷனெரிகளாக தங்கள் பய ணத்தை தொடங்கினார்கள்.
அந்த இரு இந்திய மிஷனெரிகளின் பயணத்திற்கு தடைகள் சொந்த நிலத்தில் மாத்திரமல்ல, நீரிலும் நீடித்தது. அவர்களோடு கப்பலிலே பிராயணம் செய்த மாலுமிகளும், கப்பல் தலை வனும் அவர்களுடைய பயணத்தின் நோக்கத்தைக் கேட்டபொழுது கேலியும், பரிகாசமும் செய்தார்கள். ஆனாலும் அவர்கள் மனம் தளரவில்லை. தடைகள் பல தடவை சந்தித்த அவர்களுக்கு பயணத்தின் முடிவில் ஒரு மாபெரும் தடை காத்திருந்தது.
ஏறக்குறைய 90 ஆண்டுகளாக டென்மார்க் கிழக்கிந்திய கம்பெனியானது தரங்கம்பாடியில் வியாபாரத்தொடர்பு வைத்திருந்தது. மிஷனெரி தாகமுள்ள டென்மார்க் அரசன் அந்த இரண்டு இந்திய மிஷனெரிகளைத் தரங்கம்பாடி யிலுள்ள டென்மார்க் கிழக்கிந்திய கம்பெனியில் வேலைசெய்கிறவர்கள் என்ற பெயரில் அனுப்பினார். ஆனால் கம்பெனிக்கு மிஷினெரிகளை டென்மார்க் அரசன் அனுப்பும் விஷயத்தில் இந்த டென்மார்க் கிழக்கிந்திய கம்பனி எதிர்ப்புத் தெரிவித்தது. அந்த மிஷனெ ரிகளை எப்படியாவது இந்தியாவில் இறங்கவிடாமல் இடைய+று செய்ய கங்கணம் கட்டியது. எனவே இந்தக் கம்பெனி தரங்கம்பாடியில் வேலைசெய்யும் தன்னுடைய தொழிற்சாலை அதிகாரிகளுக்கு, அந்த இந்திய மிஷ னெரிகளின் வேலையை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று மறைமுகமாக ஆலோசனை கூறியிருந்தது. இதன் விளைவாக சீகன் பால்க்கும், ப்ளுட்சும் 7 மாத கடல் பிராயணத்தின் முடிவில் தரங்கம்பாடிக்கு வந்து சோர்ந்தபோது, கப்பலிலிருந்து கடற்கரைக்கு அவர்களை அழைத்துச் செல்வதற்கு ஆள் ஒருவரும் இல்லை. எனவே கடற்கரை யில் இறங்கமுடியாமல் அநேகநாட்களாய் கப்பலிலேயே காத்திருக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இறுதியாக அந்தக் கப்பல்இருந்த பக்கமாக மீன் பிடிக்க வந்த படகில் ஏறி கரை நோக்கிப்போனார்கள். அந்தக் கப்பலிலிருந்து தப்பிப்போவதை கண்ட அந்த கப்பலின் தலைவன்தன் கையிலிருந்த தடியை உயர்த்தி அவர்களை அச்சுறுத்தினான். ஆனால் அவர்களோ அதைக் கண்டு அஞ்சாமல் கரை போய் சேர்ந்தார்கள். அவர்கள் இருவரும் இந்திய மண்ணிலே கால் வைத்த நாள் இந்தி யாவின் சுவிசேஷ சரித்திரத்திலே பொன் னினால் பொறிக்கப்பட வேண்டியயெதொரு நாள். 1706 ஆம் ஆண்டு ஜூலை 9ம் தேதி காலை 10 மணி க்கு தரங்கம்பாடியில் அவர்கள் இறங்கினார்கள்.
அந்த இரு இந்திய மிஷனெரிகளின் உபத்திரவம் உச்சக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. அவர்கள் இருவரும் தரங்கம்பாடிக்கு வெளியிலேயே காலை 10 மணியிலி ருந்து மாலை 4மணி வih காத்திருந்தார்கள். அந்த நேரத்தையும் வீணாக்க விரும்பாத அவர்கள் அப்போஸ்தலர் நடபடிகளை வாசித்துக் கொண்டிருந்தார்கள். இறுதியாக அந்த இடத்தின் அதிகாரியாகிய ( commander ) J.C. ஹேசியஸ் என்பவன் அவர்களை வந்து சந்தித்தான். உடனே அவன் யார் நீங்கள்? எதற்காக இங்கே வந்திருக்கிறீர்கள்? என்று சீரிய போது, சீகன் பால்க் தன்னுடைய கையிலிருந்த டென்மார்க் அரசனின் முத்திரையிட்ட கடிதத்தைக் காண்பித்தார். அதைப் பார்த்தவுடன் அந்த அதிகாரியின் ஆத்திரமும், கோபமும் குறைந்தன. இறுதியில் அந்த இரு மிஷனெரிகளும் அந்த அதிகாரிக்குப் பின்னால் போக அனுமதியளிக்கப்பட்டது.
அவர்கள் எல்லோரும் தரங்கம்பாடி மார்க்கெட்போய் சேர்ந்த பொழுது, அந்த அதிகாரி அவர்களை தன்னந்தனியாக விட்டுவிட்டு சட்டென்று மறை ந்து விட்டான். மொழி தெரியாத ஒரு அந்நிய தேசத்தில், தெரிந்தவர்கள், அறிமுகமானவர்கள் ஒருவரும் இல்லாததொரு சூழ்நிலையில், அந்த வாலிபர்கள் இருவரும் அனாதையைப் போல, எங்குபோவதென்று தெரியாமல் தெருவிலே நின்றார்கள். ஆயினும் இருள் நிறைந்த இந்தியாவில் தேவ வார்த்தையின் தீப ஒளியேற்றும் தரி சனத்தை தந்த தேவன் அவர்களோ டிருந்தார். அவர்களுடைய பரிதாப நிலையைக் கண்ட ஒருவர் அவர்களுக்கு இரங்கி தன் இல்லத்தில் தங்குவத ற்கு இடமளித்தார்.
தரங்கம்பாடி டேனியத் தொழிற்சாலை அலுவலர்கள் சீகன் பால்க்கையும் அவரது தோழர் ப்ளுட்சுசாவையும் நடத்திய முறையானது அடிப்படை மனித தன்மைக்கும் அபிமானத்திற்கும் அப்பாற்பட்டதாயிருந்தது. அவர்களது மிஷனெரி ஆர்வத்தை தணியச் செய்து, மிஷனெரி பணியை கைவிட்டு பின்னிடைச் செய்யும் நோக்கத்தோடு அவ்விடத்து அதிகாரி(commander)அவர்களை இலச்சைய+ட்டும ; பலவித இழி நடத்தைகட்கு ஆளாக்கினான். எந்தக் காரணமுமின்றி மிக அற்பமான காரியங்களைச் சாக்குக் காண்பித்து அவர்களை பகிரங்கமாக கைது செய்தான். அவர்களை அடித்து "நாய்களே" என்றும் அழைத்தான். இதோடு திருப்தியடையாமல், வாரினால் அடிக்கப்போவதாக அவர்களை அச்சுறுத்தி வசைமொழியனைத்தையும் அவர்கள் மீது வாரிக்கொட்டினான். இறுதியில் சீகன் பால்க் நான்கு மாதங்களாய் சிறையிலடைக்கப்பட்டார். எவரும் அவரைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. போனாவும் மையுங் கூட மறுக்கப்பட்டது. நாட்டுத் துரோகிகளெனக் கருதப்பட்ட இம் மிஷனெரிகளுடன் யாரும் தொடர்பு கொள்ளல் ஆகாது என இராணுவத்தினரும் பிற அலுவலர்களும் ஆணை பெற்றிருந்தனர். இவ்வித பாதகமான சூழ்நிலையில் எவரும் மிஷனெரி களத்தினின்று பணியைக் கைவிட்டு விட்டு ஓடியிருப்பர். ஆனால் சீகன் பால்க்கோ அப்படிப்பட்ட மனிதரல்ல. திடமனமும், மிஷனெரித் தரிசனமும் உடைய அவர் சூழ்நிலையைக் கண்டு சோர்ந்து போகவில்லை. அதற்கு மாறாக, தன்னைக் கொடுமைக்குள்ளாக்கிய அந்த அதிகாரிக்கும், மற்றவர்களுக்கும் சீகன் பால்க் கிறிஸ்துவின் உன்னத அன்பை வெளிப்படுத்தி தேவன் அளித்த மாவலிய போர்க் கருவியான அந்த "அன்பு" என்னும் ஆயுதத்தால் அவர்களனைவரையும் கீழ்ப்படித்தினார்.
ஆரம்ப காலத்தில் இவ்விதக் கொடூரமான பாடுகளைச் சகித்தனு பவித்த இவ்விரு வாலிப மிஷனெரி களும் தங்கள் மிஷனெரிப் பணியைத் தொடங்கினர். அவர்களது சொந்த மொழி ஜெர்மன்(German)ஆகும். தொழிற்சாலையின் அலுவல் மொழி யான டேனிய மொழிகூட அவர்களுக்கு அந்நிய மொழியே. டேனிய அலுவ ர்களுக்கும், அவர்களது மத குருமார்களுக்கும் தமிழ் ஓர் அறிமுகமில்லாத மொழியாக இருந்தது. சுதேசத் தமிழர் எவருக்கும் டேனிய மொழி தெரியாது. அவர்களுக்குத் தமிழ் மொழியைக் கற்க உதவி புரியும்படி தகுதி வாய்ந்த மொழியாசிரியர் ஒருவருமில்லை. எனவே, முன்னோடிப் பணிக்கும் தீரத்துக்கும் மனோதிடத்துக்கும் அடையா ளமாய் விளங்கும் சீகன் பால்க் தரங்கம்பாடியின் கடற்கரை மணல் மீது பள்ளிப் பிள்ளைகளோடு அமர்ந்து பைபிளதை; தமிழ் மொழியில் மொழி பெயர்க்கும் பிரம்மாண்டப் பணிக்கான ஆரம்ப முயற்சியாகத் தமிழ் எழுத்துக்களின் வரிவடிவங்களை மணலின் மீது எழுதிப் பழகினார்.
ஏறத்தாழ நான்கு நூற்றாண்டுகட்கு முன்னர் தரை மணல் மீது தமிழ் எழுத்துக்களை வரைந்து கொண்டிருந்த போது உண்மையில் அவர் இந்திய மிஷனெரிப் பணி வரலாற்றின் முன்னுரையை எழுதினார் என்றே சொல்ல வேண்டும். மணல் மீது வரைந்த அவரது குழந்தைத் தனமான எழுத்துககளை வெகு விரைவில் தரங்கம்பாடிக் கடலலைகள் அழித்துச் சென்ற போதிலும் அவரது உறுதியான முயற்சிகளெல்லாம் இந்திய மிஷனெரிப் பணி வரலாற்றில் அழியாததொரு முத்திரையைப் பதித்துவிட்டது என்பதனை அச்சமயத்தில் அவர் உணராதிருந்தார். அதற்கு பிறகு 87 ஆண்டுகள் கழித்து இந்தியாவிற்கு வந்த வில்லியம் கேரி "தற்கால மிஷனெரி தூது பணியின் தந்தை" எனப்படுவாரானால், சீகன் பால்க்கைத் "தற்கால மிஷனெரி தூதுப் பணியின் முற்பிதா அல்லது முன்னோடி அல்லது வழி வகுத்தவர்" என அழைப்பது சாலப் பொருத்தமாகும்.
தன்னுடைய சொந்தத் திறமையினாலும், விடாமுயற்சியினாலும் சீகன் பால்க் வெகு சீக்கிரமாக தமிழ் மொழி யைக் கற்றுக்கொள்ளத் தொடங்கினார். இரவு பகலாக தமிழ் மொழி யில் உள்ள இலக்கியங்களைப் படித்தார். வேதாகமத்திற்கு முன்னோடியாக, ஒரு சில கைப்பிரதிகளையும், பள்ளி பாட புத்தகங்களையும், பிரசங்கங்களையும் வெளியிட்டார். இந்தப் புத்தகங்களை முதலில் கையினாலும் பின்பு 1713 ம் ஆண்டு ஜெர்மனிய தேசத்து நண்பர்கள் பரிசாக அனுப்பிய அச்சு இயந்திரத்திலும் அச்சிடப்பட்டது.
தமிழ்நாட்டில் வந்து சேர்ந்த 5 ஆண்டுகளுக்குள்ளாக சீகன் பால்க் தமிழ் மொழியில் புதிய ஏற்பாட்டை மொழி பெயர்த்து முடித்தார். 1714ம் ஆண்டில் இந்திய மொழிகளிலே முதல் தடவையாக வேதாகமத்தைத் தமிழிலே அச்சிட்டார். தமிழ் மொழியில் முழு வேதாகமத்தையும் ஆர்வத்தோடு மொழி பெயர்த்துக் கொண்டிருந்த சமயத்தில் சீகன் பால்க்கை எதிர்பாராத வண்ணம் மரணம் சந்திக்க நேர்ந்தது. 1719 ஆண்டில் தன்னுடைய 36 வயதில், மனைவியையும், இரண்டு மகன்களையும் விட்டுவிட்டு தன்னுடைய ப+லோக பயணத்தை முடித்தார்.
அவருடைய மரணத்திற்கு முன்னதாக பழைய ஏற்பாட்டில் ரூத்தின் புத்தகம் வரைக்கும் மொழி பெயர்த்திருந்தார். சீகன் பால்க் தன்னுடைய மரணத்தைச் சந்தித்த விதத்தை ஆர்னோ லேமன் பின்வருமாறு விவரிக்கிறார். " தன்னுடைய உடல் மிகவும் மோசமான நிலையை அடைந்துவிட்டதை உணர்ந்த சீகன்பால்க் தன் வசமுள்ள எல்லாவற்றையும் 1719 பிப்ரவரி 10ம் தேதி ஒழுங்குசெய்ய முற்பட்டார். தன் கைவசமுள்ள ஊழியத்தின் பத்திரங்கள், பணம், கணக்கு வழக்குகள் எல்லாவற்றையும் தன் நண்பர் க்ரண்ட்லர் வசம் ஒப்படைத்தார். தன் குடும்பக் காரியங்களையும் ஒழுங்கு செய்தார். பின்பு இந்திய கிறிஸ்தவ நண்பர்களிடம் விடை பெற்றுக்கொண்டு விசுவாசத்தில் உறுதியாய் நிலைத்திரு க்கும் படியாய் ஆலோசனை கூறினார். அவர் இராப்போஜனம் எடுத்தபோது அவருடைய சரீரம் சுகமடையும் தற்காலிக வாய்ப்பு இருந்தது. அவருடைய மரண நாளான 1719 பிப்ரவரி 23ம் தேதியன்று, அதிகாலையில் எழுந்து தன் மனைவியோடும், குழந்தைக ளோடும் குடும்ப ஜெபம் செய்தார். ஆனால் காலை 9 மணிக்கு தன்னுடைய மரண வேளை மிகவும் நெரு ங்கிவிட்டதை அவர் உணர்ந்தார் நண்பர் க்ரண்ட்லர் ஜெபித்தார். ஆனால் அவரோ தேவனுடைய இராஜ்யம் செல்வதற்கு அதிக வாஞ்சையாயிருந்தார். "தேவன் தாமே என்னுடைய எல்லாப் பாவங்களையும் அவருடைய இரத்தத்தினாலே சுத்திக்கரித்து, கிறிஸ்துவின் நீதியின் வஸ்திரத்தினாலே என்னை அலங்கரித்து அவருடைய இராஜ்யத்திற்குள் சேர்த்துக் கொள்வாராக" என் சொல்லிவிட்டு தனக்கு மிகவும் பிரிய மான "இயேசு என் நம்பிக்கை" என்ற ஜெர்மனிய கீர்த்தனையைப் பாடும்படி யாக சைகையினால் விருப்பம் தெரி வித்தார். பின்பு தன்னுடைய படுக்கையை விட்டு எழுந்து சென்று நாற்காலியில் அமர்ந்து தன் ஜீவனை விட்டார்"
ஸ்கள்ட்ஸ்:
சீகன் பால்க் மொழிபெயர்க்காத பழைய ஏற்பாட்டின் ஏனைய பகுதிகளை இன்னொரு ஜெர்மானிய மிஷனெரியாகிய பென்யமின் ஸ்கள்ட்ஸ் மொழி பெயர்த்து 1728ம் ஆண்டு வெளியிடப்பட்டது.
பிப்ரேஷியஸ்:
சீகன் பால்க்கும், ஸ்கள்ட்ஸீம் மொழி பெயர்த்த தமிழ் வேதாகமம் ஒரு மிகப் பெரிய சாதனையாக இருப்பினும், அதிலுள்ள பல குறைகள் நிமித்தம் அதை மறு ஆய்வு செய்தல் அவசி யமாயிற்று. சீகன் பால்க்கிற்கு அடுத்து, தமிழ் வேதாகமத்தை உருவாக்குவதில் மிகவும் முக்கியமானவர் ஜெர்மானிய மிஷனெரியாகிய பிலிப் பிப்ரோஷியஸ்,
இவர் 1742 ம் ஆண்டு சென்னையில் வந்து இறங்கினார். அச்சமயத்தில் தான் சென்னையில் சரித்திரம் காணாத ஒரு அமளியும், கொந்தளிப்புமான சூழ்நிலைக்குள் சிக்கி தவித்துக் கொண்டிருந்தது. பிரெஞ்சுப் படையும், ஆங்கிலேயர் படையும் தங்களுடைய படை பலத்தை பரீட்சைப் பார்த்ததின் விளைவாக சென்னை நகரம் முற்றுகைக்கும், கொள்ளைக்கும் இலக்காயிற்று, இதன் நிமித்தம் பிப்ரேஷியஸ் சென்னைக்கு வெளியே உள்ள புலிக்கோட்டை என்ற இடத்தில் அடைக்கலம் புக நேர்ந்தது. கொஞ்ச நாள் கழித்து ஹைதர் அலியும், அவரது கொள்ளைப்படையும் சென்னை நகரத்தின் மீது படையெடுத்து வந்தபோது பிர்ரேஷியஸ் ஜார்ஜ் கோட்டையில் அடைக்கலம் புகுந்தார்.இவ்வளவு கொந்தளிப்பான சூழ்நிலை யையும் பொருட்படுத்தாமல், பிபரேஷியஸ் வேதாகமத்தை தமிழில் மொழி பெயர்க்கும் பணியை தீவிரமாகசெய்யத் தொடங்கினார். தமிழ் வேதாகமத்திற்கு முன்னோடியாக தமிழ் இலக்கணத்தையும், அகராதியை யும் வெளியிட்டார். ஏறக்குறைய 20 ஆண்டு கடின உழைப்பிற்குப் பின் புதிய ஏற்பாடு முழுவதையும் மொழி பெயர்த்து, 1773 ம் ஆண்டு வெளியிட்டார். நான்கு ஆண்டுகள் சென்றபின் பழைய ஏற்பாட்டை வெளியிட்டார். சீகன் பால்க், ஸ்கள்ட்ஸ் ஆகியோரின் மொழி பெயர்ப்பு அநேகரின்  கண்டனத்திற்குள்ளாயிற்று. அதற்கு மாறாக, பிப்ரேஷியஸின் மொழி பெயர்ப்பு, வேதாகம மொழி பெயர்ப்புத் துறை யில் ஒரு போற்றத் தகுந்த சாதனை யாகக் கருதப்பட்டது. அதற்கு காரணம் " அவர் தன்னுடைய முழங்காலில் நின்று மூல பாஷையிலுள்ள பகுதியை வாசித்து, ஒவ்வொரு வார்த்தையையும் ஆராய்ந்து சீர்தூக்கி பார்த்த பின்புதான் மொழி பெயர்ப்பார்;" இவருடைய மொழி பெயர்ப்பு, இவருக்கு பின்னால் தோன்றிய எல்லா மொழி பெயர்ப்புக்கும் ஒரு ஆதாரமாக விளங்கியது என்பதும் இவருடைய மொழி பெயர்ப்பை இன்றும் லுத்தரன் சபையினர் தங்க வசனம் ( புழடனநn ஏநசளழைn ) என்ற பெயரில் உபயோகித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்தில் 19ம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் வெளி நாடுகளில் உள்ள கிறிஸ்தவ ஊழியங்களின் வளர்ச்சியைக் குறித்து அதிக ஆர்வமி ருந்தது. இதன் விளைவாக வேதாகம மொழி பெயர்ப்பு ஊழியம் அதிக அவசியமாக இருந்தது, இதுவே ஆங்கில வெளிநாட்டு வேதாகமச் சங்கம் ஏற்பட அடிகோலியது. 1806 ஆம் ஆண்டில் தமிழ் தேசத்தைச் சுற்றி பார்த்த டாக்டர். புச்சண்ணன் என்பவர் இத்தேசத்திலே வேதாகமத்திற்கு அதிக வேட்கை இருந்ததாகக் குறிப்பிட்டார்.
தமிழ்தேசமக்களும் "நாங்கள் உண வையோ பணத்தையோ உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை: எங்களுக்கு தேவனுடைய வார்த்தையே தேவை" என்று அவரிடம் கூக்குரலிட்டனர்.
திருநெல்வேலி, தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ள 10,000 பிராட்டஸ்டண்டு கிறிஸ்தவமக்களிடையே முழு வேதா கமத்தை உடையவர்கள் ஒருவரும் இல்லை, நூற்றுக்கு ஒருவர் கூட ஒரு புதிய ஏற்பாட்டை உடையவராக இல்லாதிருந்தார்கள்.
ரீனியஸ்:
இந்த சமயத்தில் திருச்சபை மிஷனெரி சங்கம் சார்பாக ஊ.வு ரீனீயஸ் என்ற ஜெர்மன் தேச தேவ ஊழியாஇந்தியாவுக்கு வந்தார். இவர் வேதாகமச்சங்கத்தின் பொறுப்பிலுள்ள வேதாகம மொழி பெயர்ப்பு ஊழியத்தை மேற்கொண்டார். 1840 ம் ஆண்டு தமிழ் வேதாகமத்தின் முழு முதல் பதிப்பு இந்திய வேதாகமச் சங்கத்தாரால் வெளியிடப்பட்டது. இவ்வேதாகமம் பிப்ரேஷியஸ் என்பவர் மொழி பெயர்த்த பழைய ஏற்பாட்டையும், ரீனியஸ் என்பவர் மொழிபெயர்த்த புதிய ஏற்பாட்டையும் கொண்டிருந்தது. இவ்வாறு இணைத்ததற்குக் காரணம் பிப்ரேஷியஸ் என்பவரும், ரீனியஸ் என்பவரும் தங்களுக்குரிய தனித் திற மையை தத்தம் மொழி பெயர்ப்பில் வெளிப்படுத்தியிருந்தார்கள். மொழி பெயர்ப்பாளர்கள் என்ற விதத்தில் இருவரும் சரிநிகர் சமமாக இருந்தார்கள். அவர்களுடைய தனிப்பட்ட மொழிபெயர்ப்புகளை ஒன்று சேர்க்கும் முயற்சியானது அவரவர்களுடைய தனித்திறமை விளங்கும் மொழி பெயர்ப்பின் பாகங்கனை ஒன்றாக இணைக்கும் நோக்கத்தோடு எடுக்கப்பட்டது. பிப்ரேஷியஸின் பழைய ஏற்பாடு, மூல வேதாகமத்தோடு மிக அதிகமாக ஒத்திருந்தது. அதைப்போலவே ரீனியஸின் புதிய ஏற்பாடும் அமைந்தது.
(இலங்கை) யாழ்ப்பாண திருப்புதல்:
(Jaffna Version)
இதற்கிடையில், யாழ்ப்பாணத்தில் வட இலங்கைத் தமிழரிடையே ஊழிய ஞ் செய்துவரும் தேவ ஊழியர்கள் அப்போதிருந்த வேதாகமப் பதிப்புக்களிலிருந்த தவறுகளை நிவிர்த்திச் செய்வதற்காக வேறொரு தமிழ் வேதாகமத்தை அச்சிட முடிவு செய்தார்கள். இதற்காக ஒரு குழு தற்காலத்திலும் அதிகமாக உபயோகப்படுத்தப்படும் ஆங்கிலம் - தமிழ் அகராதியை எழுதினவரான பீட்டர் பெர்ஸில் என்பவரைத் தலைவராகவும், நவீன கால உரைநடையின் தந்தை என்று அழைக்கப்படும் இந்துமத வித்துவான் ஆறுமுக நாவலர் என்பவரை உறுப்பினராகவும் கொண்டு அமைக்கப்பட்டது. பின்பு 1850 ஆம் ஆண்டு யாழ்ப்பாண திருப்புதல் வெளியிடப்பட்டது. இந்த யாழ்ப்பாண திருப்புதல் பல வல்லுநர்களால் வரவேற்கப்பட்ட போதி லும், இதனுடைய இலக்கிய நடை சாதாரண வேதாகம மொழிபெயர்ப்பு நடைக்கு மாறுப்பட்டு இருந்ததினால் சாதாரண மனிதனின் ஆர்வத்தைத் தூண்டத் தவறிவிட்டது.
ஐக்கிய திருப்புதல்: (Union Version)
யாழ்ப்பாண திருப்புதலின் தோல்விக்குப் பிறகு மற்றொரு திருப்புதல் வெளியிடுவது தேவையாயிருந்தது, யாழ்ப்பாண திருப்புதல் ஒரு தோல்வியாக இருந்தபோதிலும் அது தொடர்ந்து வந்த எல்லா வேதாகமப் மொழி பெயர்ப்பு ஊழியங்களுக்கும், குழு (Committee) அமைக்கும் வழக்கம் ஏற்பட அடிகோலியது. இதன் காரணமாக தென்னிந்தியாவில் இயங்கும் பல மிஷன்களின் சார்பாக, டாக்டர் எச். போவார் என்பவரை தலைமை மொழி பெயர்ப்பாளராகக் கொண்டு ஒரு மறு பரிசீலனைக் குழு (Revision Committee) ஏற்படுத்தப்பட்டது. இவ்வ+ழியக் குழுவில் குறிப்பிடத் தக்கவரான டாக்டர் கால்டுவெல் உட்பட பல வல்லுநர்கள் ஒருமித்து பங்கு கொண்டார்கள். வட இலங்கையில் வசித்த கிறிஸ்தவ மக்களுக்கு அவர்களைக் கலந்து ஆலோசிக்காததால் " போவார் குழு" அமைப்பு மகிழ்ச்சியைத் தரவில்லை. இதன் காரணமாக உடனடியாக இருதரப்பிலிருந்தும் பிரதிநிதிகளை அழைத்து ஒரு மாநாடு கூட்டப்பட்டது. இந்த மாநாட்டிலே தென்னிந்தியாவிலும், வட இலங்கையிலும் வசிக்கும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளும்படியாக பொது பதிப்பு (Common Version) எனப்பட்ட ஐக்கிய திருப்புதல் (Union Version)கொண்டுவரப்பட்டு, 1971ம் ஆண்டு வெளியிடப்பட்டது. லுத்தரன் சபையைச் சார்ந்தவர்கள் பிப்ரேஷியஸின் பதிப்பைத்தக்க வைத்துக் கொண்டாலும், இந்தியாவிலும், இலங்கையிலும் வசிக்கின்ற தமிழ் மக்களிடத்தில் இப்போதுள்ள எல்லா பிரபலமான திருப்புதல்களிலும் இந்த ஐக்கிய திருப்புதல் தான் தமிழ் கிறிஸ்தவர்கள் மத்தியில் பரவலான வரவேற்பையும், செல்வாக்கையும் பெற்றுள்ளது.
லார்சன் திருப்புதல்: (Larsen Version)
ஐக்கிய திருப்புதலின் வெளியீட்டிலிருந்து இந்த நூற்றாண்டு வரை தமிழ்மொழி அடைந்த இலக்கிய வளர்ச்சி காரணமாக 1923ஆம் ஆண்டு, பல்மொழி அறிஞரும், தமிழ் வல்லுநருமான டாக்டர் எல்.பி. லார்சன் என்பவரைத் தலைவராகவும், வித்வான் ஜி. எஸ். துரைசாமி என்பவரைத் துணை வராகவும் கொண்டு, மற்றொரு திருப்புதல் குழு அமைக்கப்பட்டது. லுத்தரன் மக்கள் முதல் தடவையாக இக்குழுவுடன் இணைந்து செயல்பட்டார்கள். பிப்ரேஷியஸ் திருப்புதல்- கடவுள் என்ற சொல்லுக்கு பரா பரன் என்ற பதத்தையும், ஜக்கிய திரு ப்புதல் - தேவன் என்ற பதத்தையும் உபயோகித்திருந்தது. இதனால் கடவுள் என்ற சொல்லுக்கு எந்த பதத்தை உபயோகப்படுத்துவது என்ற பிரச்சனை எழுந்தது. நீண்ட ஆலோ சனைக்கு பின்பு, இரு தரப்பினரும் கட வுள் என் பொது பதத்தை இறுதியாக ஒப்புக்கொண்டார்கள். அதன் பிறகு லார்சன் திருப்புதல் வேதாகமம் 1936 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

தள்ளுபடி ஆகமங்கள் என்றால் என்ன?--jeevavootru.blogspot.com

தள்ளுபடி ஆகமங்கள் ( THE APOCRYPHAL BOOKS) ================= அப்போக்ரைபா என்றால் மறைக்கப்பட்டது அல்லது மூடப்பட்டது என்பதாகும். கனோனின் விதிகளை சில புத்தகங்கள் நிறைவேற்றவில்லை. அவைகள்: 1 எஸ்ரா, 2 எஸ்ரா, தோபித், யூடித், எஸ்தரின் ஓய்வு, சலோமின் ஞானங்கள், பிரசங்கிகள், பாரூக், மூன்று எபிரேய குழந்தைகளின் பாடல்கள், சூசன்னாவின் வரலாறு, பாகாலும் வலுசர்ப்பமும், மனாசாவின் ஜெபம், 1 மேக்காபீயர்கள், 2மேக்காபீயர்கள் மற்றும் எரேமியாவின் கடிதம். 1546ல் டிரென்ட் ஆலோசனைக்கூட்டத்தில், ரோமன் கத்தோலிக்க சபை இப்புத்தகங்களை ஏற்றுகொண்டாலும் புரட்டஸ்தாந்து சபைகள் பரிசுத்தாவியின் ஏவுதலால் எழுதப்பட்ட புத்தகங்கள் அல்லவென்று நிராகரித்து விட்டன. ஒருவேளை இப்புத்தகங்களில் வரலாற்று உண்மைகளும், திறமைகளும் இருந்தாலும் இவைகள் கீழ்காணும் காரங்களால் தள்ளப்படுகின்றன. *. தள்ளுபடி ஆகமங்களை எழுதிய ஆசிரியர்கள் எவரும் தெய்வீக ஏவுதலை தெரிவிக்கவில்லை, சிலர் இதனை மறுக்கின்றனர். (உதாரணமாக: 1 மக் 4:46 , 11 மக் 2 :23, 15 , 38 ) *. அநேக கிரேக்க மொழிபெயர்ப்பில் இவைகள் இடம்பெற்றிருந்தாலும் எபிரேயு பதிப்பில் இவைகள் இடம்பெறவில்லை. *. ஜெமினியாவில் 90 கி.பி யில் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் யூதர்கள் இவைகளை ஏற்றுக்கொள்ளவில்லை. *. இந்த புத்தகங்களில் பொய்யான வரலாறும், இடங்களும், தவறான வருடங்களும், உண்மையற்ற கட்டுகதைகளும் காணப்படுகின்றன. *. வேதத்தில் சொல்லப்பட்ட தரமான உபதேசங்களுக்கு மாறாக சில பொய்யான உபதேசங்களை உபதேசிக்கின்றது (தற்கொலை, தாக்குதல், மரித்தோருக்கானஜெபம் போன்ற காரியங்களை நியாயப்படுத்துகின்றது). *. ஏசுவும் புதிய ஏற்பாட்டு ஆசிரியர்களும் இந்த புத்தகங்களிலிருந்து ஒரு குறிப்பும் எடுத்து சொன்னதில்லை. அனால் மற்ற புத்தகங்களில் இருந்து நூற்றுக்கணக்கான குறிப்புகளை எடுத்துரைத்திருக்கிறார்கள். *. ஆதிகால சபை பிதாக்களான ஒரிஜன், ஜெரோம், டட்டுலியன், ஜெருசலேம் சிறில், தேர்ட்டுலியன் மற்றும் ஆத்ரசியஸ் போன்றவர்கள் இவைகளுக்கு எதிராக பேசினார்கள். *. முதல் நான்கு நூற்றாண்டுகளில் வேத சம்பந்தபட்ட ஆலோசனைக்கூட்டங்களில் இவைகள் அங்கீகரிக்கபடவில்லை. *. லுத்தரும், சீர்திருத்தவாதிகளும் இந்த புத்தங்களை நிராகரித்தனர். *. சீர்திருத்த காலங்களில் இருந்த ரோமன் கத்தோலிக்க அறிஞர்களும் தள்ளுபடி ஆகமங்களை நிராகரித்தனர்.

அரபு நாட்டில் நடந்த நெஞ்சை உருக வைக்கும் உண்மை சம்பவம் இது.--jeevavootru.blogspot.com


பாலை நிலங்களால் சூழப்பட்ட ஒரு தேசம். அந்த தேசத்தில் ஒரு பெண் தனது ஒரேயொரு மகனுடன் வாழ்ந்து வந்தாள். அவளிற்கு ஒரு கண் இல்லை. தன் மற்றைய கண்ணை வைத்து கொண்டு வாழ வேண்டிய நிலை. கணவரின் இழப்பிற்கு பிற்பாடு அவளது சுவாசத்தின் ஒவ்வொரு மூச்சும் தன் மகனின் எதிர்கால வாழ்வு பற்றியதாகவே இருந்தது. தன்னிடம் இருந்த சொத்துக்களில் ஒரு பகுதியை விற்று மகனை ஒரு நல்ல தரமிக்க பாடசாலையில் சேர்த்தாள். மீகுதி சொத்தை தனது மகனின் கல்வி தொடர்பான செலவுகளிற்கு தயார் செய்திருந்தாள்.

நல்ல ஒழுக்கமிக்க மகன். இரக்கமானவன். புத்திசாலி. ஊரில் எல்லோரும் புகழும் வண்ணம் அவன் செயற்பாடுகள் இருந்தன. பாடசாலையில் முதல் தரத்தில் சித்தி எய்துபவன் அவன். காலங்கள் உருண்டன. ஒரு முறை அவன் மிகச்சிறந்த பெறுபேற்றினை ஈட்டி அந்த பிரதேசத்திற்கும், அவனது பாடசாலைக்கும் பெருமை சேர்த்தான்.

இந்த செய்தியை அறிந்த உடனேயே அந்த தாய் ஆவலுடன் பாடசாலை நோக்கி ஓடினாள். மகனின் வகுப்பறை எது என அறிந்து அங்கு சென்று அவனை வாரி அணைத்து முத்தமிட்டாள். இறைவனை புகழ்ந்தாள். சந்தோஷத்துடன் வீடு வந்து அவனிற்கு பிடித்தமான உணவை தயாரிக்க ஆரம்பித்தாள்.

மகனின் வரவை எதிர்பார்த்து வழி மேல் விழி வைத்து காத்திருந்த தாய் மகன் வந்தவுடன் வாஞ்ஞையுடன் அருகில் சென்றாள். ஆனால் மகன் முகத்தை திருப்பி கொண்டான். தாயுடன் பேசவில்லை. நேராக அறைக்குள் சென்று படுத்து விட்டான். அவளிற்கு ஒன்றும் புரியவில்லை. பதற்றத்துடன் ஓடிச்சென்று என்னவென்றாள் கவலையுடன். மகன் சொன்னான், " நீ ஏன் என் பாடசாலைக்கு வந்தாய்?. அங்கு அழகான பணக்காரர்கள் மட்டுமே வருவார்கள். நீயோ குருடி. என் நண்பர்கள் என்னை குருடியின் மகன் என கூப்பிடுகின்றனர். இது பெரிய அவமானம். வெட்கம். இதன் பின்னர் நீ என் பாடசாலை பக்கமே வராதே" என கத்தினான் கோபமாக. அதிர்ந்து போனாள் தாய். ஆனாலும் மகனின் சந்தோஷம் கருதி இனி அவ்வாறு நடக்காது என சத்தியம் செய்தாள்.

இப்போது அவனது சுபாவம் மேலும் மாறுபட ஆரம்பித்தது. தன்னை தேடி வரும் நண்பர்கள் முன் வர வேண்டாம் என தாயை எச்சரித்தான். அவள் கண்கலங்க சரி என்றாள். பின்னர் சில நாட்கள் சென்ற பின், தனக்கு குருடியுடன் இருப்பது வெட்கம் என்றும், தான் ஹாஸ்டலில் தங்கி படிப்பதாக சொன்னான். ஒரு நாள் வீட்டை விட்டே சென்று விட்டான். அவள் கதறி துடித்தாள், தினமும் தன் மகனை நினைத்து.

இறுதி பரீட்சையில் பாஸாகி, மருத்துவ கல்லூரிக்கு மகன் தெரிவானது அவளிற்கு தெரியவந்தது. தலை நகர் சென்று படிக்க வேண்டும். நிறைய செலவாகும். தனது மிகுதமிருந்த அனைத்து சொத்துக்களையும் விற்று மகனிற்கு அனுப்பி வைத்தாள். 5 ஆண்டுகள் பறந்து சென்றன. இப்போது அவளது மகன் ஒரு மருத்துவன்.

அவனை பார்க்க அவள் பல முயற்ச்சிகளை மேற்கொண்டும் எதுவும் பயனற்று போயின. ஒரு கடிதம் மகனிடம் இருந்து வந்தது. அதில், " உம்மா, நான் இப்போது இந்த நாட்டில் உள்ள சிறந்த வைததியர்களில் ஒருவன். குருடியின் மகன் வைத்தியன் என்பது தெரிந்தால் எனது கொளரவம் பாதிப்படையும். ஆதலால் நான் இந்த நாட்டை விட்டும் உன் பார்வையை விட்டும் கண்காணாத தேசம் செல்கிறேன்". இது தான் அந்த கடிதத்தின் வரிகள். துடித்து போனாள் தாய்.

சில வருடங்கள் கடந்தன. முதுமையும், வறுமையும், அவளது ஒற்றை கண்ணுமே அவளிடம் எஞ்சியிருந்த சொத்துக்கள். பசி காரணமாக ஒரு பணக்கார வீட்டில் ஆயாவாக தினமும் வேலை செய்து வந்தாள் அந்த தாய். அந்த வீட்டின் எஜமான இளவயதினள். நல்ல இளகிய குணம் படைத்தவள். இறையட்சமிக்கவள். அவளும் ஒரு வைத்தியராகவே இருந்தாள். இந்த தாயை தனது தாயக நேசித்து போஷித்து வந்தாள். எல்லாம் நன்றாகவே நடந்தன.

அவளது கணவன் அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்தான். தனது எஜமானியின் கணவர் வருகிறார் என்பதனால் வாய்க்கு ருஷியாக நல்ல உணவுகளை தயார்படுத்தி வைத்திருந்தாள் அந்த குருட்டு தாய்.

வீடு வந்த அவளது கணவன், சில நாளிகைகளின் பின்னர் சாப்பிட அமர்ந்தான். உணவை ஆசையாக வாயில் அள்ளி திணித்தான். திடீரென அவன் முகம் மாறியது. கருமை அவன் முகத்தில் அப்பி கொண்டது. சடாரென தனது மனைவியின் முகத்தை பார்த்து கேட்டான், "இதனை நீ தான் சமைத்தாயா?" என்று. மனைவி குழப்பத்துடன் இல்லையே என்றாள். " அப்படியானால் யார் சமைத்தது" இது அவனது இரண்டாம் கேள்வி. வீட்டு வேலைக்காரி சமைத்தாள் என்றாள் மனைவி. உடன் எழுந்த அவன் அடுப்படிக்கு சென்று எட்டி பார்த்தான். உள்ளே அவனது குருட்டு தாய்.

அதிர்ந்து போனார்கள் இருவரும். இவள் இன்னும் இங்கேயா எனும் ஆத்திரமும், வெறுப்பும் அவன் மூளையை ஆட்டுவித்தது. என் மருமகளா என் எஜமானி என்ற சந்தோஷமும், மகிழ்ச்சியும் அந்த தாயின் இதயத்தை நிரப்பின. உணற்ச்சிகளால் இருவருமே பேசவில்லை.

மீண்டும் சாப்பாட்டு அறைக்கு வந்த வைத்தியன் சொன்னான் தன் மனைவியை பார்த்து, "இந்த குருடியை உடனடியாக கொண்டு சென்று வேறு எங்காவது விட்டு விடு. கண்காணாத இடத்தில்". கத்தினான். அவன் சத்தம் அடுப்படியில் நின்ற அந்த அபலை தாயின் இதயத்தில் முட்டி மோதி நின்றது.

துவண்டு போனாள். வாழ்க்கையை இதற்கு பிறகும் வாழ வேண்டுமா என எண்ணி அழுதாள்.

தனது கணவனின் பிடிவாதமும், கோபமும், ஆவேசமும் எல்லை மீறி செல்லவே, அவனது மனைவியான அந்த பெண் வைத்தியர் வேறு வழியின்றி அவளிற்கு போதுமான பணத்தினை வழங்கி பல நூறு கிலோ மீட்டர் தூரத்தில் முன்பு அவள் வாழ்ந்து வந்த இடத்திற்கே மீண்டும் அனுப்பி வைத்தாள் அழுகையுடன்.

காலம் மீண்டும் வேகமாக அசைந்தது. இப்போது அந்த வைத்தியனின் தலை மயிர்கள் பழுக்க ஆரம்பித்து விட்டன. உடல் பலம் சற்று சோர்ந்தும் போய்விட்டது. கணவனின் தொடரான சுயநலன், நன்ற மறத்தல் போன்ற காரணங்களினால் கருத்து மோதல் ஏற்பட்டு அந்த வைத்தயரான மனைவியும் இவரை விவாகரத்து செய்து விட்டு இன்னாரு மறுமணம் புரிந்து கொண்டாள். இப்போது வைத்தியரிடம் பணத்தை தவிர வேறு எதுவும் இருக்கவில்லை. தனி மரமாக, எதிர்காலங்கள் சூனியமான நிலையில், ஆறுதலிற்கு கூட தலை வருட யாரும் இன்றி தனி மரமாக நின்றான். மெல்ல மெல்ல தான் தன் தாயிற்கு செய்த துரோகங்கள், அநியாயங்கள், நோகடிப்புக்கள் அவன் உள்ளத்ததை வந்து உசுப்ப ஆரம்பித்தன. ஒரு முறை நடுநிசியில் எழும்பி உம்மா என கத்தி அழும் அளவிற்கு அவனிற்கு தனது பாவங்களின் பாரம் புரிந்து போனது.

ஒரு நாள் காலை அவன் தொலைபேசிக்கு ஒரு செய்தி வந்தது. அவனது தூரத்து உறவினர் ஒருவர் பேசினார். "உன் தாய் தள்ளாத வயதில் மரணிக்கும் தறுவாயில் ஸகராத் எனும் நிலையில் இருக்கிறாள்" என்பதே அந்த செய்தி. உடனடியாகவே அவன் தனது காரில் கிளம்பி தாயிருக்கம் இடத்திற்கு சென்றான். அவன் சென்ற போது, அவளது உயிர் பிரிந்து விட்டது. ரூகூ போன நிலையில் அவளை கட்டிலில் கிடத்தி வைத்திருந்தனர். இப்போது "உம்மா" என கதறினான். கண்ணீர் விட்டான். ஜனாஸாவை நல்ல முறையில் அடக்கம் செய்ய உதவினான்.

இப்போது ஒரு கடிதத்தை அவனது உறவுக்காரர் கொடுத்தார். தான் மறைந்த பின்னர், மகன் வருவானாக இருந்தால் மட்டும் கொடுக்குமாறும், இல்லையெனில் எரித்து விடுமாறும் தயார் கடைசி தருவாயில் வேண்க்கொண்டதாகவும் அவர் சொன்னார். பிரித்து வாசித்தான். அவன் கண்களில் இருந்த வழிந்த கண்ணீர் அந்த பாலைவெளியையே சகதியாக மாற்றியது.

அதில் இருந்த வரிகள் இதுதான்....

"அன்பின் மகனே!.. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்.

எனக்கு தெரியும், என் உருவத்தை பார்ப்பது உனக்கு ஒரு போதும் பிடிக்காது என்று. அதனாலேயே, எனது மரணத்திற்கு பின்னர் நீ வந்தால் மட்டும் இதனை கொடுக்கும்படி சொன்னேன்.

மற்றபடி எனது அன்பு என்றும் மாறாதது. அது இறைவனிற்கு மட்டுமே தெரிந்த விஷயம். மகனே நான் குருடிதான். உனக்கு குருடி தாய் இருந்திருக்க கூடாது தான். எனக்கு உன் உள்ளம் புரிகிறது.

உனது உள்ளத்து உண்ர்வுகளை நான் பெரிதுமே மதிக்கின்றேன். நான் உன்னை சபித்தது கிடையாது. ஏன் கோபப்பட்டது கூட கிடையாது. எனக்கு ஒரு வாழ்க்கை வேண்டும் என்றிருந்தால் நான் இன்னொரு திருமணம் முடித்து நன்றாக வாழ்ந்திருப்பேன். உனக்காகவே நான் வாழ்ந்தேன். அதை நீ புரிந்து கொள்ளாமல் போய் விட்டாய்!

மகனே உனக்கு தெரியுமா? நான் ஏன் குருடியானேன் என்று! அப்போது உனக்கு சின்ன வயது. பாதையில் நின்று நீ விளையாடிக்கொண்டிருந்தாய். ஏதோ ஒரு பொருள் உன் கண்களில் பட்டு உன் ஒரு கண் குருடாகி விட்டது. வைத்தியர்கள் இன்னொரு வெண்படலம் இருந்தால் மட்டுமே உன் பார்வையை மீண்டும் கிடைக்க வைக்கலாம் என்றனர். என்ன செய்வதென்று தெரியவில்லை. நேரமும் போதாது.

அதனால்....

என் ஒரு கண்ணை உடனடியகாவே தானம் செய்து உனக்கு பார்வை கிடைக்க செய்தேன். எனது கண்மணியே இன்று உன் கண்களாக இருக்கிறது. நீ இந்த உலகத்தை, வாழ்க்கையை பார்ப்பதும் அந்த கண்களாளேயே!...

உனக்கு இதுவும் அவமானம் என்றால் உனது வலது கண்ணை பிடுங்கி எறிந்து விடு. ஏனென்றால் அது ஓர் குருடியின் கண்ணல்லாவா? இல்லை மனமிருந்தால் அப்படியே விட்டு விடு. அந்த கண்களால் நான் உன்னை பார்த்துகொண்டிருப்பேன்."

இப்படிக்கு, என்றுமே அன்புள்ள,
உன் குருட்டு உம்மா.

"நீ உயிரோடு பிழைத்தால் நான் உன்னை அதிகமாய் நேசிக்கிறேன் என்பதை நினைத்துக்கொள்"-ஜப்பான் பூகம்பத்தில் நடந்த உண்மை சம்பவம்----ஆசிரியர்.D.விமலன்--jeevavootru.blogspot.com


ஜப்பானில் பூகம்பம் நிகழ்ந்த பின், மீட்பு பணியில் அரசாங்கம் மும்மூரம் காட்டியது, மீட்பு பணியாளர்கள் ஒரு குறிப்பிட்ட இளம் வயது பெண்ணின் வீட்டை அடைந்தபோது அந்த பெண்ணின் உடல் வீட்டின் இடிபாடுகளில் சிக்கி மரித்திருந்தாள், ஆனால் அந்த காட்சி மீட்பு பணியாளர்கள் மத்தியில் ஒரு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது, காரணம்,இடிபாடுகளில் சிக்கி மரித்திருந்த அந்த பெண்ணின் முழங்கால்கள் ஜெபிப்பதை போல மண்டியிட்ட நிலையிலும் உடல் முன்புறமாக விழுந்த நிலையிலும் காணப்பட்டது, அவளுடைய இரு கைகளும் தன் உடலை தாங்கிக்கொள்ளக்கூடிய ஒன்றை பிடித்திருந்தாள்.இடிந்து விழுந்த அந்த வீடு அவள் உடலின் பின் புறத்தையும் மண்டையையும் உடைத்திருந்தது. 
அந்த மீட்பு பணியாளர்களின் தலைவர் மிகுந்த சிறமத்திற்க்கிடையில் பூகம்ப பிளவுகளுக்குள் சிக்கியிருந்த அந்த பெண் ஒருவேளை உயிருடன் இருக்க கூடுமோ என்று எண்ணியவராய் அந்த பெண்ணின் உடலை தொட்ட போது அது குளிர்ந்தும் விரைத்துபோய் இருந்ததால் அந்த பெண் மரித்துவிட்டாள் என்ற மன நிலைக்குள் வந்தவராய் அவரும் அவருடைய டீமும் அந்த வீட்டை விட்டு அடுத்த வீட்டிற்கு சென்று அங்கு யாரும் உயிருடன் போராடி வருகின்றனரா என்று பார்க்க கடந்து சென்றார்கள், இருந்தபோதும் ஏதோ உள்ளத்தில் தூண்டப்பட்டவராய் இடிபாடுகளுக்குள் சிக்கி மரித்திருந்த அந்த பெண்ணின் வீட்டிற்கு திரும்ப சென்று பார்க்க விரைந்தனர், மறுபடியும் அந்த இடிபாடுகளுக்கிடையில் சிக்கியிருந்த அந்த பெண்ணின் இருந்த பகுதியில் தான் எடுத்து வந்த மீட்பு கருவியைக் கொண்டு பல பிரயாசத்திற்கிடையில் அந்த பெண்ணின் சடலத்தை நெருங்கியபோது, திடீரென்று மிகுந்த ஆச்சர்யத்தோடு "ஒரு குழந்தை,இங்கே ஒரு குழந்தை" என்று கத்தினார்.
ஒட்டுமொத்த குழுவினரும் மிகுந்த ஜாக்கிரதையுடன் அந்த இடிபாடுகளையும் கற்களையும் நீக்கியபின் மரித்த அந்த பெண்ணின் சடலத்தை அடைந்தனர், அந்த மரித்த பெண்ணின மடியில் அழகிய 3 மாத ஆண் குழந்தை உயிருடன் காணப்பட்டது, அந்த ஆண் பிள்ளை தன் தாயின் மடியில் பஞ்ஜனையில் தூங்குவது போல் நன்றாக தூங்கிக்கொண்டிருந்தது, அந்த பெண் தன் பிள்ளையை காப்பதற்காக தன் உயிரை பெரிதாக எண்ணாமல் வேதனைகளையும் வலிகளையும் தாங்கியவளாய் அவள் மரித்து தன் பிள்ளையை காப்பாற்றினாள்,இன்னமும் தூங்கிக்கொண்டிருந்த அந்த பச்சிளம் சிறுவனை தூக்கி எடுத்தனர், அங்கே ஒரு மருத்துவர் அவசரமாக வரவழைக்கப்பட்டு அந்த குழந்தையை பரிசோதித்தார், இந்த வேளையில் அந்த குழந்தையை சுற்றியிருந்த துப்பட்டியில் ஏதோ ஒன்று இருப்பதை கவனித்த மீட்பு பணிக்குழுவின் தலைவர், அதை எடுத்து பார்த்தபோது அதில் ஒரு செல்போன் இருந்தது, அந்த செல்போனில் ஒரு எழுத்து குறுஞ்செய்தி(TEXT MESSAGE) இருந்தது, அது என்னவென்று படித்த்போது அதில் பின்வருமாறு டைப் செய்யப்பட்டிருந்தது, "நீ உயிரோடு பிழைத்தால், நான் உன்னை அதிகமாய் நேசித்தேன் என்பதை நினைத்துக்கொள்"(if you can survive, you must remember that i love you), அந்த செல்போன் செய்தி ஒருவரிடத்திலிருந்து மற்றவர்க்கு வெகு விரைவாக பரவியது, யார்யாரெல்லாம் அந்த செய்தியை படித்தார்களோ அத்தனைபேரும் அந்த தாயின் அன்பை எண்ணி கதறி அழுதனர்,"நீ உயிரோடு பிழைத்தால், நான் உன்னை அதிகமாய் நேசித்தேன் என்பதை நினைத்துக்கொள்", என்ற தாய் தன் பிள்ளையை எவ்வளவாய் நேசித்தாள் என்பதை உலகம் அறிந்து கொண்டது.
ஆனால் 2000 வருடங்களுக்கு முன்பு நம் எல்லாருக்காகவும் தன் ஜீவனை பெரிதாக எண்ணாமல் நாம் அடைய வேண்டிய தண்டனையை அவர் தன் மேல் ஏற்றுக்கொண்டு பாவமறியாத நமக்காக பாவியைப் போல சிலுவையில் கடைசி சொட்டு இரத்தத்தையும் சிந்தியவராய் பாடுபட்டு மரித்து இவ்வள்ளவாய் நம் மேல் அவர் அன்பு கூர்ந்த போதும், இன்னமும் நம் வார்த்தைகளினாலும் செயல்களினாலும் காயப்படுத்தி வருகிறோம், நாம் அனைவரும் நரகத்திற்கு செல்லவே தகுதியானவர்கள் ஆனால் அவர் தன் மேல் அந்த ஆக்கினையை ஏற்று நாம் பிழைக்கும் படி செய்திருக்கிறார், நாம் அவரை நேசித்ததால் அல்ல அவர் நம்மை முந்தி நேசித்ததால், அவரால் பிழைத்த நீங்களும் நானும் அவரை உண்மையாய் நேசிக்கிறோமா?, அவர் உங்களையும் என்னையும் பார்த்து கேட்கிற கேள்வி இதுதான்,"என்னால் பிழைத்த நீ, நான் உன்னை அதிகமாய் நேசிக்கிறேன் என்பதை மறந்து விடாதே"



மனித இனம் என்னும் அதிசய படைப்பு--jeevavootru.blogspot.com


சங்கீதம் 139:14 நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள், அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும்.


எத்தனை உண்மை... ஒரு சிறு கருவினின்று எலும்புகள், மூட்டுகள், தலை, முகம், கண், காது, மூக்கு, வாய், கழுத்து, உடல், கைகள், கால்கள், தசைகள், மூளை, இருதயம், ஈரல், நுரையீரல், முடி, நகம் போன்ற யாவும் சரியான இடத்தில் பொருத்தமாக அமைக்கப்படுகின்றன.
மூளையின் நுண்ணிய அமைப்பும் செயல்களும் வியப்பைத் தருகின்றன. நாம்  உயிர்வாழ்வதற்குப் பிராணவாயு (ஆக்ஸிஜன்) அவசியமாகும். அது உடலுக்குள் செல்வதற்குச் சுவாசம், அது இரத்தத்தில் கலப்பதற்கு நுரையீரல் இரத்தம் சுத்திகரிக்கப்படும் விதம் ஆகியவற்றை ஆராய்ந்து பாருங்கள். 

வலைப்பின்னல் போன்ற 1500 கி.மீட்டருக்கு அதிகமான நீளமுள்ள இரத்தக் குழாய்களும் ஒரு கோடிக்கு அதிகமான நரம்புகளும் உடலெங்கும் பரவியிருக்கின்றன. கண்ணிற்குள் இரு விழிகள் அதில் நுணுக்கமான சிறப்பான நரம்புகள், திரை, அதை ஈரமாக வைத்திருப்பதற்கு ஒரு சுரப்பி, அதிலிருந்து வரும் நீர் கண்ணின் மீது பரவுவதற்கு இமையும், கண்சிமிட்டுதலும் ஆகியவை எத்தனை ஞனத்தோடு வடிவமைக்கப்பட்டுள்ளன.

மனிதனின் தோலின் ஒவ்வொரு சதுர சென்டிமீட்டரிலும் 500 இற்கு மேற்பட்ட வேர்வை நாளங்கள், உணவை உடலில் சேர்க்கிறதற்காக குடலில் 2 கோடிக்கு மேற்பட்ட “வாய்கள்” நுரையீரலில் 50 கோடிக்கு மேலான காற்று செல்கள் ஆகியவை செயல்படுகின்றன. 

உடலின் ஒவ்வொரு பாகத்திலிருந்தும் வலி, சுவை, காட்சிகள், ஒலி, மணம் போன்றவற்றை உடனடியாக மூளைக்குத் தெரிவிக்கும் “டெலிபோன்” அமைப்பு வியப்புக்குரியது. 

இரத்தத்தில் உள்ள அணுக்கள் உடலிலேயே உருவாக்கப்படுதல் விந்தையன்றோ. ஆயிரக்கணக்கான சுரப்பிகள் (பலவித நீர்களை சுரக்கும் ஊற்றுகள்) நமது உடலில் உண்டு அதில் ஒன்று பழுதடைந்தாலும் தொல்லைதான். 

பல சிறு கயிறுகளால் பிணைக்கப்பட்டது போன்ற உயிர், அதில் ஒன்று அறுந்தாலும் போய்விடும் நிலையிலுள்ளது அது. ஆயினும் ஒவ்வொரு ஆண்டும் மூன்றரைக் கோடிக்கு மேலான தடவைகள் சீராகத் துடிக்கும் இருதயம், எப்பொழுதும் உடலில் வெப்பத்தைச் சரியாக வைத்திருத்தல், உணவு செரித்து உடலுக்கு தேவையானவை கிடைத்தல் போன்றவை பல ஆண்டுகள் சரியாக நடப்பது பிரமிக்கத்தக்கது அன்றோ. 

நான் பிரமிக்கத்தக்க அதிசயமாக உண்டாக்கப்பட்டவன். இவையும் தானாக நடைபெறுகின்றன என்று சிலர் எப்படிக் கூறுகிறார்கள் என்று தெரியவில்லை. 

அதற்கு மேலாக மனிதனுக்குள் பல்வேறு உணர்வுகள், நன்மை தீன்மை அறியும் ஆற்றல், அவனுக்குள் தேவனின் குரலாகிய மனச்சாட்சி, ஆவிக்குரிய பல காரியங்கள், மறுபடியும் பிறத்தல் (யோவான்.3.3), இறுதி முடிவு போன்றவை இதைவிட அதிகமாக பிரமிக்கத்தக்கவை.

தேவனுடைய சாயலாகவும், உருவமாகவும் உருவாக்கப்பட்ட மனிதன், தேவனுடைய பார்வையில் “தன்னுடைய சொந்தக்குமாரனின் இரத்தத்தைச் சிந்தி மீட்கும் அளவிற்கு” மிகவும் விலையேறப் பெற்றவன். நாம் நித்தியத்திற்காக  உருவாக்கப்பட்டவர்கள். இவ்வுலக வாழ்க்கை அதற்கு ஆரம்பமாகவும் அடித்தளமாகவும் அமைகின்றது. 

சங்கீதம்-139:14 இல் நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப் பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள், அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும். என்று வேதாகமத்தில் கூறப்பட்டுள்ளது எத்தனை உண்மை?????

பூமியின் விழ காத்திருக்கும் அரக்கன்கள்; ஜெபிக்க சொல்லும் நாசா விஞ்ஞானிகள் -ஆசிரியர்.சுவி.D.விமலன்-jeevavootru.blogspot.com


தலைக்கு மேல் ஆபத்துக்கள் தொங்கிக்கொண்டிருக்கின்றன, என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா, ஆம் நமது விண்வெளியில் கணக்கிலடங்காத எரிகற்கள் எப்போது தன் நிலை தடுமாறி நம் பூமியில் விழுமோ என்ற பயத்தில் விஞ்ஞானிகளும் உலக நாடுகளும் பீதியில் உறைந்துள்ளன என்று சொன்னால் அது  மிகையாகாது. மனிதன் விஞ்ஞானத்தில் எவ்வளவோ வளர்ந்துவிட்டான் என்று மார்தட்டிக்கொள்ளும் மனித இனம் நம் தலைக்கு மேல் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் எரிகற்களில் சில 50 மீட்டர் விட்டமுடைய எரிகற்கள் உள்ளன அவைகளில் வெறும் 10 சதவிகித கற்களை மாத்திரமே கண்டறிந்துள்ளதாகவும் இவைகள் 10000 ற்கும் அதிகமான நகரங்களை தாக்கி அழிக்கும் திறன் கொண்டவை என்றும் கண்டறியப்பட்டுள்ளன,
உலகின் தலைசிறந்த விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் தலைவர் சார்லஸ் போல்டன் மற்றும் விஞ்ஞானிகள் சமீபத்தில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் பேசிய போது ஒரு சில விண்கற்கள் ஏறத்தாழ ஒரு கிலோ மீட்டர் விட்டமுடைய விண்கற்கள் பூமிக்கு மேல் சுற்றிக்கொண்டிருக்கின்றன, இப்படிப்பட்ட விண்கற்களானது மனித நாகரீகத்தையே முற்றிலும் அழித்துவிடும் அபாயம் உள்ளது என்று எச்சரித்துள்ளனர்.
பூமியை தாக்க இருக்கும் இப்படிப்பட்ட பேரரக்கன்களாகிய எரிகற்களை திசை திருப்புவது என்பது தற்போது உள்ள விஞ்ஞான தொழில் நுட்பத்தை வைத்து ஒன்றும் செய்ய இயலாது என்பதை வெளிப்படையாகவே நாசாவின் தலைவர் ஒப்புக்கொண்டுள்ளார், இதை தடுக்க வேறு என்னதான் வழி என்று கேட்டால்,
எல்லாம் கை மீறி போகும் பட்சத்தில் படைத்த இறைவனிடம் பிரார்த்தனை செய்வதைத் தவிர வேறு வழி இல்லை என்கிறாராம்.
அவர் சொல்வதிலும் உண்மை இருக்கத்தானே செய்கிறது விண்கற்களை நம் இஷ்டத்திற்கு திசைதிருப்ப நாம் என்ன கடவுளா?, கர்த்தர் யோபுவிடம் "துருவச்சக்கர நட்சத்திரத்தையும் அதைச்சேர்ந்த நட்சத்திரங்களையும் வழி நடத்துவாயோ" என்று கேட்கிறார்(யோபு 38:32)
கர்த்தர் நகரத்தை காவாராகில் காவலாளர் விழித்திருக்கிறது விருதா(சங் 127:2)
விஞ்ஞான அறிவை நம்பி மோசம் போகும் மனித குலமே உங்கள் விஞ்ஞானமும் விஞ்ஞான கண்டுபிடிப்புகளும் உங்களை காக்க இயலுமோ, கடந்த பிப்ரவரி மாதம் இரஷ்யாவை தாக்கிய விண்கல்லை பூமியை தாக்காதபடி திசை திருப்பி விடலாம் என்று குண்டு வைத்து தகர்க்க முற்பட்டனர் ஆனால் அதற்கு எந்தவித பலனுமின்றி இரஷ்யாவை பெருத்த அதிர்வலையோடு தாக்கியதை நாம் அனைவரும் அறிவோம்,
இப்படிப்பட்ட பேராபத்துக்கள் பூமியின் கடைசி நாட்களில் பூமியை தாக்கும் என்பதை மிகவும் துல்லியமாக நம்முடைய கைகளில் உள்ள பரிசுத்த வேதாகமம் முன்னறிவித்துள்ளது என்பதை பின்வரும் வசனத்தில் நீங்கள் தெளிவாக பார்க்க இயலும்
"வானத்தின் நட்சத்திரங்கள் விழும், வானங்களிலுள்ள சத்துவங்களும் அசைக்கப்படும்"(மாற்கு 13:25)
"அத்திமரமானது பெருங்காற்றினால் அசைக்கப்படும் போது அதின் காய்கள் உதிருகிறது போல, வானத்தின் நட்சத்திரங்களும் பூமியிலே விழுந்தது".(வெளி 6:13)
இவைகள் இப்போதே நடக்கிறது என்பதல்ல இவை பூமியின் இறுதி நாளில் நடப்பவை ஆனால் இப்போது நடப்பவை கடும் மழைக்குமுன் வானம் இருண்டு இடி மின்னல் போன்றவைகள் உண்டாகுமே அதற்கு ஒப்பானவை, ஆகவே இனியும் கால தாமதமேன், இன்றே மனந்திரும்புங்கள், இயேசு உங்களை அழைக்கிறார்.
(SOURCE TAKEN :MAALAI MALAR 20/03/2013)