
கர்த்தராகிய இயேசு சொன்னார், நான் திரும்ப வருவேன், அனேகர் கேட்கும் கேள்வி என்னவென்றால், அவர் திருமப வருவாரென்றால் எப்போது வருவார், இந்த கேள்வி அன்ன்றைக்கு அவரோடு இருந்த அவருடைய சீஷர்களுக்கும் உண்டானது, அதற்கு அவர், அவர் திரும்ப வருவதற்கு முன்னர் உலகில் சில அடையாளங்கள் நடந்தேற வேண்டும், அதில் இயற்கை பேரழிவுகளும் அடங்கும், என்று பட்டியலிட்டு முன்னுரைத்திருக்கிறார், இன்றைக்கு நம் கண் முன்னே அவைகளில் பல நடந்து வருகின்றன.
கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைக் குறித்து ஏராளமான தேவ பிள்ளைகள் எச்சரித்து வருகின்றனர், இதற்கு காரணம், இயேசு இதற்கு முன்னர் பூமியில் வந்ததைப் போன்று சாந்த சொரூபியாய் மன்னிப்பின் சிகரமாய் வந்ததைப் போலல்லாமல் இரும்புக்கரம் கொண்டு நியாயந்தீர்க்கும் நியாயாதிபதியாய் வரப்போகிறார், அவர் வந்த பின் அவரிடம் மண்ணிப்பு கேட்டு தப்பிக்கொள்ளலாம் என்ற பேச்சிற்கே இடமில்லை, ஆகவேதான் தேவ பிள்ளைகள் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைக் குறித்து உலகை எச்சரித்து வருகின்றனர்.
அந்த வகையில், முன்னாள் அமெரிக்க பாராளுமன்ற குடியரசுக் கட்சி உறுப்பினராகிய மிச்சல் பெக்மான் என்ற பெண்மணி மிகவும் தைரியம் கொண்டு தேசத்தின் அவலங்களை எடுத்துச்சொல்லி, எச்சரித்து வருகிறார், இது குறித்து அவர் கூறிய எச்சரிப்பின் சத்தத்தை சில செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன, அவற்றின் சுருக்கத்தை பார்ப்போம்,
"ஒபாமாவின் வெளியுறவுக் கொள்கையை வரவேற்றுள்ள அமெரிக்கர்கள் தேவ கோபாக்கினையை சந்திக்க உள்ளனர்" என்று எச்சரித்துள்ளார், ஒரு ரேடியோ நிகழ்ச்சியில் பேட்டி அளித்த மிச்சல், முடிவுக்கால கடிகாரத்தின் கடைசி மணித்துளிகளில் நாம் இருக்கிறோம் என்பதை உணர வேண்டிய தருணம் இதுவே என்று குறிப்பிட்டுள்ளார்,
நாம் நம்முடைய கண்களினாலே உலகின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் அழிவுகளை பார்க்கிறோம், ஆயினும் இவைகள் அனைத்தும் ஏற்கனவே வேதாகமத்தில் முன்னுரைக்கப்பட்டுள்ளது, இதனடிப்படையில் பார்த்தால் நம்முடைய கால கட்டத்திலேயே கிறிஸ்துவின் சபை எடுத்துக்கொள்ளப்படும் இரகசிய வருகையும், இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையும் நேரிடலாம் என்றுள்ளார்,
ஒபாமாவின் ஈரானிய அணுக்கொள்கையையும் ஓரினத்திருமணத்திற்கான அங்கீகாரங்களையும் கரு கலைப்பையும் கடுமையாக சாடியுள்ளார், அமெரிக்காவின் ஈரான் அணு ஒப்பந்தத்தின் நிமித்தமாக உலகின் மேலும் சில நாடுகளும் ஈரானோடு அணு ஒப்பந்தம் மேற்கொள்ள முன் வந்துள்ளதினிமித்தமாக அணு ஆயுதங்கள் ஏராளமாய் உற்பத்தி செய்யும் நிலை உருவாகும், அது அணு ஆயுத போருக்கு வழி வகுக்கும், இது மூன்றாம் உலகப்போருக்கு வழி வகுக்கப்போவது உறுதி என்று எச்சரித்துள்ளார்.
மேலும் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைக் குறித்து மிச்சல் பெக்மான் கூறியதாவது, நான் உங்களுக்கு ஒரு நற்செய்தியை பகிர விரும்புகிறேன், அதென்னவென்றால், பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் கூறிய வார்த்தைகளை நினைவுக்கூருங்கள், நாம் வாழும் இந்த காலக்கட்டத்தை அவர்கள் வாழ விரும்பினார்கள், இந்த கடைசி காலக்கட்டத்தில் அவர்கள் பங்கடைய மிகவும் வாஞ்சித்தார்கள், ஆகவேதான், இந்த நாட்கள் பயம் மிகுந்த கலக்கத்தின் நாட்களல்ல, உலக வரலாற்றிலேயே மிகவும் உற்சாகமிக்க நாட்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர், ஒவ்வொரு நாளும் இயேசு கிறிஸ்துவினுடைய இரண்டாம் வருகை அதி சீக்கிரம் என்பதற்கான உண்மைகளையும் இறைவனுடைய கால கடிகாரத்தை குறித்தும் பேசி வருகிறோம், என்னுடைய ஒப்பீட்டின் படி இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கான காலம் மிகவும் குறுகின நேரமே மிதமுள்ளது, இதுதான் அந்த நற்செய்தி, மாரநாதா, கர்த்தராகிய இயேசுவே வாரும், ஆகவே நாம் விரக்தியடையலாமா?, இந்த உலகம் இரட்சிப்பின் மகத்துவத்தை உதறித்தள்ளி, ஆசிர்வாதத்திற்கான வழியை புறக்கணித்து, சீரழிவை பற்றிக்கொள்வதுதான் விரக்தியடைவதற்கான காரணம்.
எந்த ஒரு நாடு கடவுளையும் அவருடைய கட்டளைகளையும் ஏற்றுக்கொள்கிறதோ அந்த நாடு ஆசீர்வதிக்கப்படும், எந்த நாடு கடவுளை புறக்கணிக்கிறதோ அந்த தேசம் சபிக்கப்பட்டதாக மாறும், அமெரிக்காவும் தற்போது அப்படிப்பட்ட நிலைக்கே தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது, என்று கூறி எச்சரித்துள்ளார்.
இதை படிக்கின்ற அன்பர்களே, இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை என்பது கட்டுக்கதையல்ல, அதிக நிச்சயமாக நடக்கபோகிற ஒரு அதி முக்கியமான வரலாற்று நிகழ்வாகப்போகிற சம்பவம், இதை அற்பமாக எண்ணி புறக்கனியாமல் இன்றே இயேசு கிறிஸ்துவை உங்கள் சொந்த இரட்ச்கராக ஏற்றுக்கொள்ளுங்கள், நீங்கள் எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் மதமாற்றத்தையல்ல உங்கள் மனமாற்றத்தையே இயேசு விரும்புகிறார். இயேசு உங்களை நேசிக்கிறார்.
கர்த்தருடைய கிருபையின் நடத்துதலால்
சகோ.D.விமலன்
No comments:
Post a Comment