
இங்கிலாந்து மாகாராணி எலிசபெத் கடந்த 2015 கிறிஸ்துமஸ் செய்தியில் இதுவரையில் இல்லாத விசேஷமான விதத்தில் கிறிஸ்துமஸ் செய்தியை வழங்கியுள்ளார், அவர் மறைமுகமாக மத தீவிரவாதத்தினால் உலக மக்கள் அல்லல் அடைவதையும் அதற்கு தீர்வாக கிறிஸ்தவமே திகழமுடியும் என்று ஆணித்தரமாக உலகிற்கு எடுத்துரைத்துள்ளார். இப்போதும் அவருடைய செய்தியின் முக்கிய அம்சங்களை உங்கள் முன் வைக்கிறேன், கிறிஸ்துவுக்கே மகிமை உண்டாவதாக.
கிறிஸ்துமஸ் மரம் இவ்வளவு பிரபல்யம் ஆனதற்கு என்னுடைய முந்தைய முற்பிதாக்களாகிய ராணி விக்டோரியாவாகிய என்னுடைய பாட்டியும் பிரின்ஸ் ஆல்பர்ட்டாகிய என்னுடைய தாத்தாவும் முக்கிய பங்காற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது, மனதை தொடுகின்ற அந்த அழகிய அலங்கார கிறிஸ்துமஸ் மரத்தின் படம் வெளியானபோது அனேக குடும்பங்களில் தங்களுக்கும் அதுபோன்றதொரு கிறிஸ்துமஸ் மரம் வேண்டும் என்று தங்கள் இல்லங்களில் வைக்கத்தொடங்கினர், அதன் பின் அந்த நடைமுறை வேகமாக பரவத்தொடங்கியது.
அந்த கிறிஸ்துமஸ் மரத்தின் முன்பு குடும்பமாக கூடி நிற்கையில் வர இருக்கின்ற புதிய வருடத்தை குறித்த பல சிந்தனைகள் நம் முன்னே வந்து செல்கின்றன, நானும் கூட வருகின்ற 2016 ம் ஆண்டிலே ஓய்வில்லாமல் ஓட விரும்புகின்றேன், அதுபோல முடிந்து போகிற அந்த ஆண்டையும் நாம் நம்முடையில் சிந்தையில் கொண்டு வந்து தூரத்திலிருக்கிற நமக்கு பிரியமானவர்கள் அதுபோல நம்மை விட்டு இந்த உலகைவிட்டு கடந்துபோனவர்களையும் நினைவுகூரும் தருணமாக அது அமைகிறது.
நமக்கு பிரியமானவர்களை இழந்து நிற்கும் சமயத்தில் வருகின்ற முதல் கிறிஸ்துமஸ் மிகவும் கடினமானதாக இருக்கும் என்று அனேகர் கூருகின்றனர், அதே நேரம் எவைகளுக்கெல்லாம் நாம் நன்றியறிதல் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதையும் நினைத்துப்பார்க்கின்ற தருணமாகவும் இது இருக்கின்றது.
இந்த வருடத்திலே இந்த உலகமானது இருளான சூழ்நிலைக்குள் கடந்து சென்றது உண்மைதான், அதே நேரத்தில் மிகப்பெரிய நம்பிக்கைக்குரிய வசனங்கள் யோவான் சுவிசேஷ புத்தகத்தில் உள்ளடங்கியுள்ளது, "ஓளியானது இருளிலே பிரகாசிக்கும், இருளினால் ஒளியை மேற்கொளள இயலாது" என்பதே, இந்த வரிகளை நாம் அடிக்கடி கிறிஸ்துமஸ் பாடல் ஆரதனைகளில் வாசிப்பதுண்டு.
இரண்டாம் உலக யுத்தம் முடிவடைந்த சமயத்தில் ஓஸ்லோ மக்கள் கிறிஸ்துமஸ் பரிசாக வருடந்தோறும் கிறிஸ்துமஸ் மரத்தை ட்ராஃபல்கார் சதுக்கத்திற்கு அனுப்பத்துவங்கினர், அந்த மரத்திலே 500 ஒளிவீசும் பல்புகள் இருந்தன, கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல பிற மத நம்பிக்கையுடையவர்களும், எந்த மத நம்பிக்கையற்றவர்களாகவும் இருந்தாலும் அதை காண்கிறபோது மிகுந்த மகிழ்ச்சிக்குள்ளாவர்கள், கிறிஸ்துமஸ் மரத்தின் மேல் உச்சியில் உள்ள ஒளி வீசும் நட்சத்திரமானது பெத்லகேம் நட்சத்திரத்தை குறிக்கிறதாகவே இருக்கிறது.
இயேசு கிறிஸ்துவினுடைய பிறப்பானது ஒரு மாட்டுத்தொழுவத்திலேதான் எனறபோதும் அந்த சூழ்நிலையை சிறந்ததாகவே யோசேப்பும் மரியாளும் எடுத்துக்கொண்டனர், ஆனால் அவர்கள் குடும்பமாக நாட்டைவிட்டு கட்டாயத்தினிமித்தம் ஓடுகின்ற நிலைதான் மிகவும் மோசமானதாக விளங்கியது. உலகமெங்கும் உள்ள கிறிஸ்தவர்களாகிய நமக்கு இது ஆச்சர்யமானதாக இல்லை ஏனென்றால் இப்படிப்பட்ட மனித வரலாறுகள் நம்முடைய சிந்தையில் இடம்பிடித்து தொடர்ந்து நமக்கு ஊக்கமளித்து வருகின்றன.
இயேசு கிறிஸ்து தம்முடைய குறுகிய வாழநாளில் பல்வேறு உபத்ரவங்களையும் இருக்க இடமில்லாத சூழ்நிலையை சந்தித்தபோதும் தம்முடைய செய்திகளில் ஒரு இடத்திலும் ஒரு போதும் கலவரங்களையோ வன்முறைகளையோ பேசாமல் அதற்கு மாறாக உன்னை நேசிப்பது போல் பிறனையும் நேசி என்ற உயர் தத்துவத்தையே பறைசாற்றினார். இந்த உபதேசமானது பின்பற்றுவதற்கு சுலபமானதாக இல்லாதபோதும், அதனிமித்தம் நாம் சோர்ந்துபோய்விடாமல், கடின முயற்சியோடு அதை பின்பற்றுவதற்கு ஊக்கமளிக்கிறது, நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நமக்கு அன்பையும் மகிழ்ச்சியையும் கொண்டுவருகிற மக்களிடத்தில் நாம் நன்றியறிதலுள்ளவர்களாக இருப்பதோடு, அந்த அன்பை மற்றவர்களிடத்தில் பரப்ப நமக்கு எப்பொழுதெல்லாம் எங்கேயெல்லாம் வழியுண்டாகிறதோ அதை பயன்படுத்திக்கொள்வோம்.
ஒரு பழமையான பேச்சுவழக்கமுண்டு என்னவென்றால், இருளை சபிப்பதைக்காட்டிலும் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றுவதே சிறந்தது என்பதே,
இந்த நாளிலே உலகமெங்கிலும் இருக்ககூடிய கோடிக்கணக்கான மக்கள் மெழுகுவர்த்தியை நம்பிக்கையின் சின்னமாக ஏந்துகின்றனர், அப்படிப்பட்டவர்களுக்கும் நம்முடைய வாழ்க்கையில் ஒளியை கொண்டு வருகிறவர்களுக்கும் நாம் நம்முடைய நன்றியை வெளிப்படுத்த கிறிஸ்துமஸ் காலக்கட்டமே ஏற்றது.
உங்கள் அனைவருக்கும் என்னுடைய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்"
என்று கூறி தம்முடைய சிறப்பு வாய்ந்த கிறிஸ்துமஸ் செய்தியை வழங்கியுள்ளார் ராணி எலிசபெத்
No comments:
Post a Comment