Wednesday, 13 January 2016

கர்த்தருடைய ஆவியானவர் கொடுத்த 2016ம் ஆண்டுக்கான வெளிப்பாடுகள்--jeevavootru.blogspot.com

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! கடந்த டிசம்பர் மாதம் (2015) கர்த்தருடைய சமூகத்தில் காத்திருந்தபோது தேவ ஆவியானவர் இந்த 2016 ஆண்டைக்குறித்து சில வெளிப்பாடுகள் மூலமாக கிருபையாக என்னோடு இடைப்பட்டார். அதில் குறிப்பிடத்தக்க முக்கிய அம்சங்களை உங்கள் முன் வைக்கிறேன். தேசத்தை இருள் மூடாதபடிக்கு திறப்பின் வாசலில் நின்று கதறுகிற தேவ பிள்ளைகள் உங்கள் ஜெபத்தை அதிகப்படுத்துங்கள்.

இந்திய தேசத்திற்கான வெளிப்பாடுகள்

1.  நம்முடைய தேசத்தில் தென்மாநிலங்களின் ஒரு பகுதியில் காரிருள் சூழும்,      ஜனங்கல் தத்தளிப்போடும் திகிலோடும் இங்கும் அங்கும் அலைகின்ற                  நிலை உருவாகும். தீயினாலும் சேதம் உண்டாகும்.

2.  தென் இந்தியாவைக் குறித்த செய்தி அதிகமாக முழு இந்தியாவின்                          கவனத்தையும் ஈர்க்கும்.

3.  ஒரு பழங்கால வழிபாட்டுதலம் குறித்த செய்தி கேள்விப்படுவீர்கள்.

4.  மாடுகளைக் குறித்த சர்ச்சை மீண்டும் பெரிதாகும்.

5.  தமிழ்நாட்டில் மதுபானம் தாராளமாய் கிடைக்கும் நிலை குறையும்.

6.  நம்முடைய இந்திய தேசத்தின் மேற்கு எல்லைகளிலும் வான்                                    எல்லைகளிலும் போதுமான பாதுகாப்பு இல்லாத  நிலையில் இருப்பது                வெளிப்படும்.

7.  பெண்களில் ஒரு குறிப்பிட்ட சிலர் நம்முடைய இந்திய தேசத்தின்                           பண்பாட்டை மீறி செய்யும் ஒரு குறிப்பிட்ட செய்கையினால் தேசத்திற்கு           நிந்தையாக அமையும்.

8.  தமிழ்நாட்டில் ஒரு முதிர்வயதான முக்கிய அரசியல்வாதியைப் பற்றிய                செய்தி அனைவர் கவனத்தையும் ஈர்க்கும்.

9.  இந்தியாவில் பிறை நிலவை தன் உச்சியிலுடைய ஒரு மத                                          வழிபாட்டுத்தலத்தைக் குறித்து பெரிய அளவில் சர்ச்சை கிழம்பும், அதைத்          தொடர்ந்து சீரழிவுகள் உண்டாகும்.

10. இரத்தம் சிந்துதல்களும் உண்டாகும்.

முழு உலகத்திற்கான வெளிப்பாடு

1.  அகழ்வாராய்ச்சியின் மூலம் தோண்டி வெளியே எடுக்கப்படுகிற ஒரு ஆதாரத்தை குறித்து பிரபலமாக பேசப்படும்.

2.  உலகின் ஒரு பகுதியில் நீரின் வேகம் அசூரத்தனமாக வெளிப்பட்டு தடுப்பாரில்லாமல் ஒரு கூட்ட ஜனங்களை விழுங்கிச் செல்லும்.

3.  மரண சம்பவங்கள் அதிகரித்து காணப்படும்.

4.  வானத்திலே பலம் வாய்ந்த பெரிய தூதன் தான் பூமியிலே செய்யப்போகிற செயலுக்கு ஆயத்தமாகி பரலோகத்தின் தேவனுடைய உத்தரவுக்கு காத்திருக்கிறதைக் கண்டேன்.


கிறிஸ்துவுக்குள்ளான தேவப் பிள்ளைகளுக்கான வெளிப்பாடுகள்


1.  கடந்த காலங்களில் இமைப்பொழுது கைவிடப்பட்ட தம்முடைய ஜனங்கள் மேல் தம்முடைய இரக்கத்தை காண்பிப்பார்.

2.  தேவன் தம்முடைய பரிசுத்த அலங்கார ஆடைகளை சிலருக்கு தரிப்பித்து தம்முடைய நாமத்தின் மகிமைக்கென்று வல்லமையாக எழுப்புவார்.

3.  இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கு கடினமாக தடை விதித்திருந்த பகுதிகளில் அல்லது தேசங்களில் தம்முடைய வல்லமையினால் உடைத்து நொறுக்கி திறந்த வாசலை உண்டாக்குவார்.

4.  கிறிஸ்து இயேசுவின் இரட்சிப்பை பெறக்கூடாதபடி கடினமான இருதயம் கொண்டவர்களை தம்முடைய வல்லமையினால் மீட்டு இரட்சிப்பார்.

5.  கடந்த காலங்களில் பல்வேறு நெருக்கங்கள் மத்தியிலும் போராட்டத்தின் மத்தியிலும் உண்மையாக கர்த்தருக்கு காத்திருந்த தேவ பிள்ளைகளுக்கு கர்த்தர் தம்முடைய களஞ்சியத்திலிருந்து அள்ளிக்கொடுத்து ஆசீர்வதிப்பார்.

6.  கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் கொண்ட தேவ பிள்ளைகளை பயமுறுத்தி வந்த சத்துருவின் வாயைக் கட்டி அடைத்து அமைதலாக்குவார்.


தேவனுடைய நாமம் ஒன்றே மகிமைப்படுவதாக 

கர்த்தருடைய ஆவியானவரின் நடத்துதலால்--- சகோ.D.விமலன்


"இயேசுவின் வருகை அதி சீக்கிரம் "---அமெரிக்காவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரின் அறைகூவல்---jeevavootru.blogspot.com


கர்த்தராகிய இயேசு சொன்னார், நான் திரும்ப வருவேன், அனேகர் கேட்கும் கேள்வி என்னவென்றால், அவர் திருமப வருவாரென்றால் எப்போது வருவார், இந்த கேள்வி அன்ன்றைக்கு அவரோடு இருந்த அவருடைய சீஷர்களுக்கும் உண்டானது, அதற்கு அவர், அவர் திரும்ப வருவதற்கு முன்னர் உலகில் சில அடையாளங்கள் நடந்தேற வேண்டும், அதில் இயற்கை பேரழிவுகளும் அடங்கும், என்று பட்டியலிட்டு முன்னுரைத்திருக்கிறார், இன்றைக்கு நம் கண் முன்னே அவைகளில் பல நடந்து வருகின்றன.

கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைக் குறித்து ஏராளமான தேவ பிள்ளைகள் எச்சரித்து வருகின்றனர், இதற்கு காரணம், இயேசு இதற்கு முன்னர் பூமியில் வந்ததைப் போன்று சாந்த சொரூபியாய் மன்னிப்பின் சிகரமாய் வந்ததைப் போலல்லாமல் இரும்புக்கரம் கொண்டு நியாயந்தீர்க்கும் நியாயாதிபதியாய் வரப்போகிறார், அவர் வந்த பின் அவரிடம் மண்ணிப்பு கேட்டு தப்பிக்கொள்ளலாம் என்ற பேச்சிற்கே இடமில்லை, ஆகவேதான் தேவ பிள்ளைகள் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைக் குறித்து உலகை எச்சரித்து வருகின்றனர்.

அந்த வகையில், முன்னாள் அமெரிக்க பாராளுமன்ற குடியரசுக் கட்சி உறுப்பினராகிய மிச்சல் பெக்மான் என்ற பெண்மணி மிகவும் தைரியம் கொண்டு தேசத்தின் அவலங்களை எடுத்துச்சொல்லி, எச்சரித்து வருகிறார், இது குறித்து அவர் கூறிய எச்சரிப்பின் சத்தத்தை சில செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன, அவற்றின் சுருக்கத்தை பார்ப்போம்,

"ஒபாமாவின் வெளியுறவுக் கொள்கையை வரவேற்றுள்ள அமெரிக்கர்கள் தேவ கோபாக்கினையை சந்திக்க உள்ளனர்" என்று எச்சரித்துள்ளார், ஒரு ரேடியோ நிகழ்ச்சியில் பேட்டி அளித்த மிச்சல், முடிவுக்கால கடிகாரத்தின் கடைசி மணித்துளிகளில் நாம் இருக்கிறோம் என்பதை உணர வேண்டிய தருணம் இதுவே என்று குறிப்பிட்டுள்ளார், 

நாம் நம்முடைய கண்களினாலே உலகின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் அழிவுகளை பார்க்கிறோம், ஆயினும் இவைகள் அனைத்தும் ஏற்கனவே வேதாகமத்தில் முன்னுரைக்கப்பட்டுள்ளது, இதனடிப்படையில் பார்த்தால் நம்முடைய கால கட்டத்திலேயே கிறிஸ்துவின் சபை எடுத்துக்கொள்ளப்படும் இரகசிய வருகையும், இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையும் நேரிடலாம் என்றுள்ளார்,

ஒபாமாவின் ஈரானிய அணுக்கொள்கையையும் ஓரினத்திருமணத்திற்கான அங்கீகாரங்களையும் கரு கலைப்பையும் கடுமையாக சாடியுள்ளார், அமெரிக்காவின் ஈரான் அணு ஒப்பந்தத்தின் நிமித்தமாக உலகின் மேலும் சில நாடுகளும் ஈரானோடு அணு ஒப்பந்தம் மேற்கொள்ள முன் வந்துள்ளதினிமித்தமாக அணு ஆயுதங்கள் ஏராளமாய் உற்பத்தி செய்யும் நிலை உருவாகும்,  அது அணு ஆயுத போருக்கு வழி வகுக்கும்,  இது மூன்றாம் உலகப்போருக்கு வழி வகுக்கப்போவது உறுதி என்று எச்சரித்துள்ளார். 

மேலும் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைக் குறித்து மிச்சல் பெக்மான் கூறியதாவது, நான் உங்களுக்கு ஒரு நற்செய்தியை பகிர விரும்புகிறேன், அதென்னவென்றால்,  பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் கூறிய வார்த்தைகளை நினைவுக்கூருங்கள், நாம் வாழும் இந்த காலக்கட்டத்தை அவர்கள் வாழ விரும்பினார்கள், இந்த கடைசி காலக்கட்டத்தில் அவர்கள் பங்கடைய மிகவும் வாஞ்சித்தார்கள், ஆகவேதான், இந்த நாட்கள் பயம் மிகுந்த கலக்கத்தின் நாட்களல்ல, உலக வரலாற்றிலேயே மிகவும் உற்சாகமிக்க நாட்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், ஒவ்வொரு நாளும் இயேசு கிறிஸ்துவினுடைய இரண்டாம் வருகை அதி சீக்கிரம் என்பதற்கான உண்மைகளையும் இறைவனுடைய கால கடிகாரத்தை குறித்தும் பேசி வருகிறோம், என்னுடைய ஒப்பீட்டின் படி இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கான காலம் மிகவும் குறுகின நேரமே மிதமுள்ளது, இதுதான் அந்த நற்செய்தி, மாரநாதா, கர்த்தராகிய இயேசுவே வாரும், ஆகவே நாம் விரக்தியடையலாமா?, இந்த உலகம் இரட்சிப்பின் மகத்துவத்தை உதறித்தள்ளி, ஆசிர்வாதத்திற்கான வழியை புறக்கணித்து, சீரழிவை பற்றிக்கொள்வதுதான் விரக்தியடைவதற்கான காரணம்.

எந்த ஒரு நாடு கடவுளையும் அவருடைய கட்டளைகளையும் ஏற்றுக்கொள்கிறதோ அந்த நாடு ஆசீர்வதிக்கப்படும், எந்த நாடு கடவுளை புறக்கணிக்கிறதோ அந்த தேசம் சபிக்கப்பட்டதாக மாறும், அமெரிக்காவும் தற்போது அப்படிப்பட்ட நிலைக்கே தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது, என்று கூறி எச்சரித்துள்ளார்.

இதை படிக்கின்ற அன்பர்களே, இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை என்பது கட்டுக்கதையல்ல, அதிக நிச்சயமாக நடக்கபோகிற ஒரு அதி முக்கியமான வரலாற்று நிகழ்வாகப்போகிற சம்பவம், இதை அற்பமாக எண்ணி புறக்கனியாமல் இன்றே இயேசு கிறிஸ்துவை உங்கள் சொந்த இரட்ச்கராக ஏற்றுக்கொள்ளுங்கள், நீங்கள் எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் மதமாற்றத்தையல்ல உங்கள் மனமாற்றத்தையே இயேசு விரும்புகிறார். இயேசு உங்களை நேசிக்கிறார்.

கர்த்தருடைய கிருபையின் நடத்துதலால்

சகோ.D.விமலன்




 

http://www.huffingtonpost.com/2015/04/20/michele-bachmann-obama-rapture_n_7104136.html?ir=India&adsSiteOverride=in

இருள் சூழ்ந்த உலகிற்கு கிறிஸ்தவ நம்பிக்கையே சிறந்தது--பிரிட்டன் மகாராணி எலிசபெத்--jeevavootru.blogspot.com


இங்கிலாந்து மாகாராணி எலிசபெத் கடந்த 2015 கிறிஸ்துமஸ் செய்தியில் இதுவரையில் இல்லாத விசேஷமான விதத்தில் கிறிஸ்துமஸ் செய்தியை வழங்கியுள்ளார், அவர் மறைமுகமாக மத தீவிரவாதத்தினால் உலக மக்கள் அல்லல் அடைவதையும் அதற்கு தீர்வாக கிறிஸ்தவமே திகழமுடியும் என்று ஆணித்தரமாக உலகிற்கு எடுத்துரைத்துள்ளார். இப்போதும் அவருடைய செய்தியின் முக்கிய அம்சங்களை உங்கள் முன் வைக்கிறேன், கிறிஸ்துவுக்கே மகிமை உண்டாவதாக.

கிறிஸ்துமஸ் மரம் இவ்வளவு பிரபல்யம் ஆனதற்கு என்னுடைய முந்தைய முற்பிதாக்களாகிய ராணி விக்டோரியாவாகிய என்னுடைய பாட்டியும்  பிரின்ஸ் ஆல்பர்ட்டாகிய என்னுடைய தாத்தாவும் முக்கிய பங்காற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது, மனதை தொடுகின்ற அந்த அழகிய அலங்கார கிறிஸ்துமஸ் மரத்தின் படம் வெளியானபோது அனேக குடும்பங்களில் தங்களுக்கும் அதுபோன்றதொரு கிறிஸ்துமஸ் மரம் வேண்டும் என்று தங்கள் இல்லங்களில் வைக்கத்தொடங்கினர், அதன் பின் அந்த நடைமுறை வேகமாக பரவத்தொடங்கியது.

அந்த கிறிஸ்துமஸ் மரத்தின் முன்பு குடும்பமாக கூடி நிற்கையில் வர இருக்கின்ற புதிய வருடத்தை குறித்த பல சிந்தனைகள் நம் முன்னே வந்து செல்கின்றன, நானும் கூட வருகின்ற 2016 ம் ஆண்டிலே ஓய்வில்லாமல் ஓட விரும்புகின்றேன், அதுபோல முடிந்து போகிற அந்த ஆண்டையும் நாம் நம்முடையில் சிந்தையில் கொண்டு வந்து தூரத்திலிருக்கிற நமக்கு பிரியமானவர்கள் அதுபோல நம்மை விட்டு இந்த உலகைவிட்டு கடந்துபோனவர்களையும் நினைவுகூரும் தருணமாக அது அமைகிறது.

நமக்கு பிரியமானவர்களை இழந்து நிற்கும் சமயத்தில் வருகின்ற முதல் கிறிஸ்துமஸ் மிகவும் கடினமானதாக இருக்கும் என்று அனேகர் கூருகின்றனர், அதே நேரம் எவைகளுக்கெல்லாம் நாம் நன்றியறிதல் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதையும் நினைத்துப்பார்க்கின்ற தருணமாகவும் இது இருக்கின்றது.

இந்த வருடத்திலே இந்த உலகமானது இருளான சூழ்நிலைக்குள் கடந்து சென்றது உண்மைதான், அதே நேரத்தில் மிகப்பெரிய நம்பிக்கைக்குரிய வசனங்கள் யோவான் சுவிசேஷ புத்தகத்தில் உள்ளடங்கியுள்ளது, "ஓளியானது இருளிலே பிரகாசிக்கும், இருளினால் ஒளியை மேற்கொளள இயலாது" என்பதே, இந்த வரிகளை நாம் அடிக்கடி கிறிஸ்துமஸ் பாடல் ஆரதனைகளில் வாசிப்பதுண்டு.

இரண்டாம் உலக யுத்தம் முடிவடைந்த சமயத்தில் ஓஸ்லோ மக்கள் கிறிஸ்துமஸ் பரிசாக வருடந்தோறும் கிறிஸ்துமஸ் மரத்தை ட்ராஃபல்கார் சதுக்கத்திற்கு அனுப்பத்துவங்கினர், அந்த மரத்திலே 500 ஒளிவீசும் பல்புகள் இருந்தன, கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல பிற மத நம்பிக்கையுடையவர்களும், எந்த மத நம்பிக்கையற்றவர்களாகவும் இருந்தாலும் அதை காண்கிறபோது மிகுந்த மகிழ்ச்சிக்குள்ளாவர்கள், கிறிஸ்துமஸ் மரத்தின் மேல் உச்சியில் உள்ள ஒளி வீசும் நட்சத்திரமானது பெத்லகேம் நட்சத்திரத்தை குறிக்கிறதாகவே இருக்கிறது.

இயேசு கிறிஸ்துவினுடைய பிறப்பானது ஒரு மாட்டுத்தொழுவத்திலேதான் எனறபோதும் அந்த சூழ்நிலையை சிறந்ததாகவே யோசேப்பும் மரியாளும் எடுத்துக்கொண்டனர், ஆனால்  அவர்கள் குடும்பமாக நாட்டைவிட்டு கட்டாயத்தினிமித்தம் ஓடுகின்ற நிலைதான் மிகவும் மோசமானதாக விளங்கியது. உலகமெங்கும் உள்ள கிறிஸ்தவர்களாகிய நமக்கு இது ஆச்சர்யமானதாக இல்லை ஏனென்றால் இப்படிப்பட்ட மனித வரலாறுகள் நம்முடைய சிந்தையில் இடம்பிடித்து தொடர்ந்து நமக்கு ஊக்கமளித்து வருகின்றன.

இயேசு கிறிஸ்து தம்முடைய குறுகிய வாழநாளில் பல்வேறு உபத்ரவங்களையும் இருக்க இடமில்லாத சூழ்நிலையை சந்தித்தபோதும் தம்முடைய செய்திகளில் ஒரு இடத்திலும் ஒரு போதும் கலவரங்களையோ வன்முறைகளையோ பேசாமல் அதற்கு மாறாக உன்னை நேசிப்பது போல் பிறனையும் நேசி என்ற உயர் தத்துவத்தையே பறைசாற்றினார். இந்த உபதேசமானது பின்பற்றுவதற்கு சுலபமானதாக இல்லாதபோதும், அதனிமித்தம் நாம் சோர்ந்துபோய்விடாமல், கடின முயற்சியோடு அதை பின்பற்றுவதற்கு ஊக்கமளிக்கிறது, நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நமக்கு அன்பையும் மகிழ்ச்சியையும் கொண்டுவருகிற மக்களிடத்தில் நாம் நன்றியறிதலுள்ளவர்களாக இருப்பதோடு, அந்த அன்பை  மற்றவர்களிடத்தில் பரப்ப நமக்கு எப்பொழுதெல்லாம் எங்கேயெல்லாம் வழியுண்டாகிறதோ  அதை பயன்படுத்திக்கொள்வோம்.

ஒரு பழமையான பேச்சுவழக்கமுண்டு என்னவென்றால், இருளை சபிப்பதைக்காட்டிலும் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றுவதே சிறந்தது என்பதே, 

இந்த நாளிலே உலகமெங்கிலும் இருக்ககூடிய கோடிக்கணக்கான மக்கள் மெழுகுவர்த்தியை நம்பிக்கையின் சின்னமாக ஏந்துகின்றனர், அப்படிப்பட்டவர்களுக்கும் நம்முடைய வாழ்க்கையில் ஒளியை கொண்டு வருகிறவர்களுக்கும் நாம் நம்முடைய நன்றியை வெளிப்படுத்த கிறிஸ்துமஸ் காலக்கட்டமே ஏற்றது.

உங்கள் அனைவருக்கும் என்னுடைய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்"

என்று கூறி தம்முடைய சிறப்பு வாய்ந்த கிறிஸ்துமஸ் செய்தியை வழங்கியுள்ளார் ராணி எலிசபெத்

புகழ்பெற்ற தேவ ஊழியர் ஓரல் ராபர்ட்ஸ்க்கு வெளிப்படுத்தப்பட்ட கடைசிகால இரகசியம்--jeevavootru.blogspot.com


உலகளவில் மிகவும் பிரசித்திப் பெற்ற மூத்த கிறிஸ்தவ ஊழியராக விளங்குபவர் ஓரல் ராபர்ட்ஸ், இவர் அமெரிக்காவின் ஒக்லஹாமா என்ற மாகாணத்தில் உலகளவில் பிரசித்திப்பெற்ற ஓரல் ராபர்ட்ஸ் பல்கலைகழகத்தை ஸ்தாபித்தவர், இவர் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைக் குறித்து செய்தியாக ஜனங்கள் மத்தியில் பேசி வந்திருக்கிறார், இந்நிலையில் அவருடைய இந்த முதிர்வயதில் தேவன் அவருக்கு விசேஷித்த விதத்தில் இயேசுவின் இரண்டாம் வருகையைக் குறித்த அதிர்ச்சியளிக்கும் தரிசனத்தை கொடுத்துள்ளார், தமக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளைக் குறித்து அவர் கூறிய வார்த்தைகளின் தொகுப்பை உங்கள் முன் வைக்கிறேன், இது வேத வார்த்தைக்கு உகந்த வெளிப்பாடுதான் என்று நீங்கள் கருதுவீர்களானால் இந்த வார்த்தைகளை எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளலாம், அல்லது நீங்கள் இதை தவிர்த்து செல்வதற்கும் உங்களுக்கு உரிமை உண்டு, எது எப்படியானாலும் கிறிஸ்துவின் இரண்டாம் வருகை என்பது நிதர்சனமாக நடக்கப்போகிற வரலாற்று சம்பவமாக மாறப்போகிறது.

இதோ இப்போதும் அந்த முதிர்வயது தேவ மனுஷனுக்கு வெளிப்படுத்தப்பட்ட வெளிப்பாடுகளின் தொகுப்பை தொடர்ந்து படியுங்கள்.

"அமெரிக்க தேசத்திலும் உலகமெங்கிலும் கலவரங்களும், திகிலும் பயமும் சூழ்ந்த நிலையில் நான் அதைக் குறித்து சிந்தித்துக்கொண்டே நடந்துக்கொண்டிருந்தபோது, நான் கர்த்தருடைய சத்தத்தை என் ஆவியின் காதுகளினால் கேட்டேன், இந்த சத்தம் எனக்கு மிகவும் பரிட்ச்சயமான சத்தம், காரணம் இதே சத்தத்தை இதற்கு முன்னர் பலமுறை கேட்டிருக்கிறேன்,நான் அந்த சத்தத்தை கேட்டதோடு மாத்திரமல்ல என் கண்களினால் நான் ஒருபோதும் கண்டிராத காட்சிகளையும் தரிசனமாக கண்டேன்,(அதன் விவரமாவது)

திடீரென, நியுயார்க் நகரத்திலும் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் கிழக்கு பகுதியின் வானத்திலே சூழ்ந்த மேகமானது பூமியை தொடாமல் சிறிது நேரம் அங்கேயே நின்று கொண்டிருந்தது, அதன்பின் அங்கிருந்து முழு அமெரிக்காவிலும் பரவத்தொடங்கியது, அதன்பின்பு அந்த மேகத்தை அமெரிக்க தேசத்திலிருந்து நீக்கி அதை உலகின் பல தேசங்களுக்கு அனுப்பினார், மேலும் நான் கேட்டேன், நான் பார்த்தேன், நான் எதை பார்த்தேன்?, புகை, ஆவி, இரத்தம் மேலிருந்து கீழே வருகிறதைக் கண்டேன், என் ஆவியின் கண்களினால் அதை கண்டேன்.இந்த காட்சி எனக்கு உடனடியாக ஒரு சம்பவத்தை நினைவுக்கு கொண்டுவந்தது, 9/11 சம்பவமாகிய இரட்டை கோபுர தகர்ப்பின் போது நான் கண்ட புகை, ஆவி இரத்த காட்சிகளையே எனக்கு நினைவூட்டியது, 

அதன்பின்பு ஒரு சத்தம் என் செவிகளில் வந்தது, அது எப்படி இருந்ததென்றால், ஒரு விண்கலம் பூமியிலிருந்து விண்ணிற்கு கிளம்பும் போது எப்படி இருக்குமோ அதையே நினைவூட்டியது.

அதன்பின் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர் சொன்னார்," நான் ஒரு அடையாளத்தை உருவாக்குகிறேன்" என்றார், இந்த அடையாளம் அப்போஸ்தலர் நடபடிகளின் இரண்டாவது அதிகாரத்தில் குறிப்பிடப்படும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் ஞானஸ்நானத்தை(அபிஷேகத்தை) குறிக்கிறது, பின்னும் கர்த்தர், இது கடைசிக்கால அடையாளங்களில் குறிப்பிடத்தக்க அடையாளமாக இருக்கிறது, இந்த அடையாளம் ஏன் கொடுக்கப்படுகிறதென்றால், இந்த உலகமானது தேவக்குமாரனுடைய இரண்டாம் வருகைக்காக ஆயத்தமாகவில்லை, என் சபை தேவக்குமாரனுடைய இரண்டாம் வருகைக்கு ஆயத்தமாகவில்லை, எந்த ஜனங்களோடு ஆயிரமாயிரம் ஆண்டுகளாக உடன்படிக்கை மேற்கொண்டு அதை காத்து வருகிறேனோ அந்த யூதர்களும் தேவ குமாரனுடைய வருகைக்கு ஆயத்தமாகவில்லை,  உலகின் தேசங்களும் ஆயத்தமாகவில்லை.

அவர் மேலும் சொன்னார், அமெரிக்காவுடன் நான் மேற்கொண்டுள்ள உடன்படிகை மிகவும் விசேஷித்தது, அமெரிக்காவை தோற்றுவித்த அதன் முந்தின மனிதர்களோடு பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே நான் உடன்படிக்கை மேற்கொண்டுள்ளேன், இந்த தேசம் வேறு எந்த தேசத்தைக் காட்டிலும்  சுவிசேஷத்தை அறிவிக்க முதன்மையாக தெரிந்துக்கொண்டேன், இந்த தேசத்திலிருந்து இன்னும் அதிகமாக சுவிசேஷம் உலகமெங்கும் செல்லும் என்றார்.

மேலும் கர்த்தர், என்னுடைய வல்லமை வீணாக்கப்படுகிறது, என்னுடைய சபையும் மற்றவர்களும் முடிவு காலத்தை குறித்த உண்மைகளை சரியாக பெற்றுக்கொள்வதில் தோல்வியடைந்துள்ளனர், தங்கள் சுயநலத்திற்காகவே பெரும்பாலானவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆலயத்திற்கு வருகின்றனர், உலகின் அனேக பகுதிகளில் உள்ள ஊழியர்களும் அவ்வாறே உலக நாடுகளை குறித்த கரிசனையற்றவர்களாகவே உள்ளனர்.அவர்கள் ஒரு சிறு கூட்ட மக்களை பொறுப்பெடுத்து அவர்களுக்காகவே பாட்டு பாடுகின்றனர், அவர்களுக்காகவே போதனை செய்கின்றனர்,இரட்டை கோபுர தகர்ப்பின்போது அனேக கிறிஸ்தவ விசுவாசிகளுக்குள் பயம் தோன்றி அவர்கள் அதிகமாக கிறிஸ்தவ ஐக்கியத்திற்குள் வந்தனர், ஆலயங்களுக்கு ஒழுங்காக செல்லத்தொடங்கினர், ஆனால் கிறிஸ்தவ போதனையாளர்கள் அதற்கு ஆயத்தமாகவில்லை, இவ்வளவு பெரிய ஒரு சம்பவத்தைக் குறித்து ஜனங்களுக்கு உணர்த்தி அவர்கள் போதிக்கவுமில்லை, பேசவுமில்லை,என்றார்.

மேலும் அவர், நான் ஜனங்களை நேசிக்கிறேன், நான் அவர்களை உருவாக்கினேன், நான் அவர்களை உருவாக்கினபடியால் நான் அவர்களை நேசிக்கிறேன், நான் உலக ஜனங்களை நேசித்தபடியால் என் ஒரே பேரான குமாரனை(இயேசுவை) அவர்களுக்காக அனுப்பினேன் என்றார்.

அதை தொடர்ந்து அவர், பைபிளில் சொல்லப்பட்டுள்ளது தெரியுமா?, இரண்டாம் வருகை இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது, முதலாவது எடுத்துக்கொள்ளப்படல் அல்லது இரகசிய வருகை, இரண்டாவது வெளிப்படையாக கிறிஸ்து வெளிப்படுதல்.

முதலாவதாக எடுத்துக்கொள்ளப்படுதல் அல்லது இரகசிய வருகையில் நான் எடுத்துக்கொள்ளபோகிற என் ஜனங்கள் எப்படிப்பட்டவர்களென்றால் அவர்கள் ஆவியினால் மறுபடி பிறந்தவர்களாகவும், பரிசுத்த ஆவியின் நிறைவை பெற்றவர்களாகவும், எனக்கு ஊழியம் செய்கிறவர்களாகவும் இருப்பார்கள், அவர்களை நான் பரலோகத்திற்கு என் சமூகத்திற்கு எடுத்துக்கொள்கிறபோது மேகங்களில் தேவக்குமாரனை சந்திப்பார்கள், அதன்பின்பு வெகு காலம் செல்லாமல் கிறிஸ்துவின் மணவாட்டியை (கிறிஸ்துவின் சபையாரை) இயேசுவண்டையில் இரண்டாவது முறை பூமிக்கு வருகையில் அவரோடு சேர்க்கப்படுவார்கள், அதுதான் உலக நாடுகளுக்கான நியாயத்தீர்ப்பின் துவக்கமாக இருக்கும்.

ஆனால் அவர் சொன்னார், " என் இருதயத்தை உடைக்கும் காரியம் என்னவென்றால், என் ஜனங்களுக்கு, என் சபையாருக்கு நான் கட்டளையிட்டு சொன்னதாவது, உலகமெங்கும் சுவிசேஷத்தை பிரசங்கியுங்கள், தேசங்களுக்கு சுவிசேஷத்தை அறிவியுங்கள் என்று என்னுடைய சுவிசேஷகர்கள், போதகர்கள், அப்போஸ்தலர்கள், தீர்க்கதரிசிகள் என்னும் பலதரப்பட்ட உலகமெங்கிலும் உள்ள என் ஊழியர்கள் என் கட்டளைக்கு உட்படுகிறதின் அளவு எப்படியுள்ளதென்றால், ஒரு பெரிய வாழியில் உள்ள ஒரு துளி அளவிற்கே சமமாக உள்ளது என்றார்.

அவர் மேலும் சொன்னார், இனி அடி வயிற்றிலிருந்து அக்கினியாய் பிரசங்கங்கள் வெளிப்படும், பரிசுத்தாவியின் அபிசேகம் ஒன்று வர இருக்கிறது, நான் இப்போது வெளிப்படுத்துகிற இந்த அடையாளம் என் சபையின் எழுப்புதலுக்காகவே, ஏனென்றால் இதை கண்கள் யாவும் இதை காணும், காதுகள் யாவும் இதை கேட்கும், அவர்கள் இவைகளை பார்ப்பார்கள், அவர்கள் இது என்ன என்று அறிய வேண்டிய அவசியமில்லை,  இது தேவக்குமாரனுடைய இரண்டாம் வருகைக்காக ஆயத்தப்படுத்தும் எழுப்புதலுக்காகவே 

அவர் வருகிற போது வானங்களை இரண்டாக பிரித்து தம்முடைய மணவாட்டியோடு வந்து பூமியை ஆட்சிசெய்வார், அந்தி கிறிஸ்துவை அவர் அழித்து அந்தி கிறிஸ்துவை பின்பற்றுபவர்களையும் அவர் அழித்து தம்முடைய ராஜ்ஜியத்தை பூமியில் ஸ்தாபிப்பார், மேலும் கர்த்தர் சொன்னதாவது, தேவ குமாரனுடைய இரண்டாம் வருகையை அறியாமல் ஒருவரும் வாழவோ அல்லது மரிக்கவோ முடியாதபடி செய்வேன்". என்றார்.

என்பதாக அவருக்கு வெளிப்பாடு கிடைத்ததாக ஓரல் ராபர்ட்ஸ் கூறி இருக்கிறார், அதின் முக்கியமானவைகளை உங்களுக்கு தொகுத்து வழங்கியிருக்கிறேன், சபை பின்மாரி அபிசேகத்திற்காக காத்திருக்கிறது என்பதை ஆவிக்குரியவர்கள் அறிவார்கள், ஆகவே ஆயத்தமாவோம்.



http://www.charismanews.com/opinion/the-flaming-herald/51037-the-sign-of-christ-s-coming-a-vision-given-to-oral-roberts