Showing posts with label இறுதிக்கால செய்திகள். Show all posts
Showing posts with label இறுதிக்கால செய்திகள். Show all posts

Wednesday, 18 November 2015

பூமியின் விழ காத்திருக்கும் அரக்கன்கள்; ஜெபிக்க சொல்லும் நாசா விஞ்ஞானிகள் -ஆசிரியர்.சுவி.D.விமலன்-jeevavootru.blogspot.com


தலைக்கு மேல் ஆபத்துக்கள் தொங்கிக்கொண்டிருக்கின்றன, என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா, ஆம் நமது விண்வெளியில் கணக்கிலடங்காத எரிகற்கள் எப்போது தன் நிலை தடுமாறி நம் பூமியில் விழுமோ என்ற பயத்தில் விஞ்ஞானிகளும் உலக நாடுகளும் பீதியில் உறைந்துள்ளன என்று சொன்னால் அது  மிகையாகாது. மனிதன் விஞ்ஞானத்தில் எவ்வளவோ வளர்ந்துவிட்டான் என்று மார்தட்டிக்கொள்ளும் மனித இனம் நம் தலைக்கு மேல் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் எரிகற்களில் சில 50 மீட்டர் விட்டமுடைய எரிகற்கள் உள்ளன அவைகளில் வெறும் 10 சதவிகித கற்களை மாத்திரமே கண்டறிந்துள்ளதாகவும் இவைகள் 10000 ற்கும் அதிகமான நகரங்களை தாக்கி அழிக்கும் திறன் கொண்டவை என்றும் கண்டறியப்பட்டுள்ளன,
உலகின் தலைசிறந்த விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் தலைவர் சார்லஸ் போல்டன் மற்றும் விஞ்ஞானிகள் சமீபத்தில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் பேசிய போது ஒரு சில விண்கற்கள் ஏறத்தாழ ஒரு கிலோ மீட்டர் விட்டமுடைய விண்கற்கள் பூமிக்கு மேல் சுற்றிக்கொண்டிருக்கின்றன, இப்படிப்பட்ட விண்கற்களானது மனித நாகரீகத்தையே முற்றிலும் அழித்துவிடும் அபாயம் உள்ளது என்று எச்சரித்துள்ளனர்.
பூமியை தாக்க இருக்கும் இப்படிப்பட்ட பேரரக்கன்களாகிய எரிகற்களை திசை திருப்புவது என்பது தற்போது உள்ள விஞ்ஞான தொழில் நுட்பத்தை வைத்து ஒன்றும் செய்ய இயலாது என்பதை வெளிப்படையாகவே நாசாவின் தலைவர் ஒப்புக்கொண்டுள்ளார், இதை தடுக்க வேறு என்னதான் வழி என்று கேட்டால்,
எல்லாம் கை மீறி போகும் பட்சத்தில் படைத்த இறைவனிடம் பிரார்த்தனை செய்வதைத் தவிர வேறு வழி இல்லை என்கிறாராம்.
அவர் சொல்வதிலும் உண்மை இருக்கத்தானே செய்கிறது விண்கற்களை நம் இஷ்டத்திற்கு திசைதிருப்ப நாம் என்ன கடவுளா?, கர்த்தர் யோபுவிடம் "துருவச்சக்கர நட்சத்திரத்தையும் அதைச்சேர்ந்த நட்சத்திரங்களையும் வழி நடத்துவாயோ" என்று கேட்கிறார்(யோபு 38:32)
கர்த்தர் நகரத்தை காவாராகில் காவலாளர் விழித்திருக்கிறது விருதா(சங் 127:2)
விஞ்ஞான அறிவை நம்பி மோசம் போகும் மனித குலமே உங்கள் விஞ்ஞானமும் விஞ்ஞான கண்டுபிடிப்புகளும் உங்களை காக்க இயலுமோ, கடந்த பிப்ரவரி மாதம் இரஷ்யாவை தாக்கிய விண்கல்லை பூமியை தாக்காதபடி திசை திருப்பி விடலாம் என்று குண்டு வைத்து தகர்க்க முற்பட்டனர் ஆனால் அதற்கு எந்தவித பலனுமின்றி இரஷ்யாவை பெருத்த அதிர்வலையோடு தாக்கியதை நாம் அனைவரும் அறிவோம்,
இப்படிப்பட்ட பேராபத்துக்கள் பூமியின் கடைசி நாட்களில் பூமியை தாக்கும் என்பதை மிகவும் துல்லியமாக நம்முடைய கைகளில் உள்ள பரிசுத்த வேதாகமம் முன்னறிவித்துள்ளது என்பதை பின்வரும் வசனத்தில் நீங்கள் தெளிவாக பார்க்க இயலும்
"வானத்தின் நட்சத்திரங்கள் விழும், வானங்களிலுள்ள சத்துவங்களும் அசைக்கப்படும்"(மாற்கு 13:25)
"அத்திமரமானது பெருங்காற்றினால் அசைக்கப்படும் போது அதின் காய்கள் உதிருகிறது போல, வானத்தின் நட்சத்திரங்களும் பூமியிலே விழுந்தது".(வெளி 6:13)
இவைகள் இப்போதே நடக்கிறது என்பதல்ல இவை பூமியின் இறுதி நாளில் நடப்பவை ஆனால் இப்போது நடப்பவை கடும் மழைக்குமுன் வானம் இருண்டு இடி மின்னல் போன்றவைகள் உண்டாகுமே அதற்கு ஒப்பானவை, ஆகவே இனியும் கால தாமதமேன், இன்றே மனந்திரும்புங்கள், இயேசு உங்களை அழைக்கிறார்.
(SOURCE TAKEN :MAALAI MALAR 20/03/2013)

தினமும் புதிய கிருமிகள் உருவாவதால் மனித குலத்துக்கு பெரும் ஆபத்து; விஞ்ஞானிகள் எச்சரிக்கை -நிறைவேறி வரும் வேதத்தின் முன்னுரைப்பு---ஆசிரியர் D.விமலன்--jeevavootru.blogspot.com


கர்த்தருடைய வருகைக்குரிய அடையாளங்கள் ஒவ்வொரு நாளும் அவருடைய வார்த்தையின் படியே திட்டமாக நம் கண் முன்னே நடந்தேறி வருகிறது, சிலர் எதையும் விஞ்ஞான பூர்வமாகத்தான் நம்புவோம் என்று ஆதாரங்களை தேடுவோருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக விஞ்ஞானத்தின் வாயிலாகவும் கர்த்தர் தம்முடைய வார்த்தையை உறுதி படுத்தி வருகிறார், அப்படியிருந்தும் சில கொழுத்த இருதயம் படைத்தவர்கள் இப்படிப்பட்ட ஆதாரத்தையும் நம்ப மறுத்து விதண்டா வாதம் பண்ணி வருகின்றனர், ஆனாலும் கர்த்தரோ தம்முடைய வார்த்தையை தொடர்ந்து உறுதிபடுத்தி வருகிறார்,
இதற்கு ஆதாரமாக, சமீபத்தில் மாலை மலர் செய்தி நிருவனம் மார்ச் 13(2013)ல் வெளியிட்ட ஒரு செய்தி குறிப்பை உங்கள் முன் வைக்கிரேன், அதன் பின் நீங்களே நிதானித்துக்கொள்ளுங்கள்
"உலகம் முழுவதும் புதிய புதிய நோய்கள் அடிக்கடி உருவாகி வருகின்றன. அந்த நோய் கிருமிகளை கொல்வதற்கு உரிய மருந்துகள் இல்லை. இதற்கு பதிலாக நோய் எதிர்ப்பு சக்தி (ஆன்டி பயாடிக்) மருந்துகளை கொடுத்து வருகின்றனர். 
ஆனால் இந்த நோய் எதிர்ப்பு மருந்துகளும் தற்போது சரியாக வேலை செய்யவில்லை. இதனால் மனித குலத்திற்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது இங்கிலாந்து விஞ்ஞானியும் தலைமை மருத்துவ அதிகாரியுமான சேலிடேவிஸ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது:- 
புதிய வகை நோய் எதிர்ப்பு சக்தி மருந்து சமீபகாலமாக கண்டுபிடிக்கப்படவில்லை. 25 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட மருந்தைதான் இப்போதும் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் இப்போதெல்லாம் கிருமிகள் கட்டுப்படுவதில்லை.
மேலும் தினமும் புதிய புதிய கிருமிகள் உருவாகி வருகின்றன. ஆனால் புதிய நோய் எதிர்ப்பு மருந்துகளை நாம் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் கிருமிகளால் மனித குலம் கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சொல்லப்போனால் இது தீவிரவாதத்தைவிட மோசமான பாதிப்பை ஏற்படுத்தலாம். புதிய மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே இதனை சமாளிக்க முடியும்"
என்று அவர் தெரிவித்துள்ளதாக அந்த நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது, இப்படிப்பட்ட நிலை அமெரிக்காவையும் விட்டு வைக்கவில்லை, அமெரிக்காவில் நிலவி வரும் நிலையை அமெரிக்க அதிகாரிகள் கூறுவதை நீங்களே படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்
"அமெரிக்காவில் மரணத்தை ஏற்படுத்தும் தன்மை கொண்ட பாக்டீரியா கிருமிகளின் தாக்கம் அதிகரித்து வருவதாக மருத்துவ அதிகாரிகள் அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளனர். வீரியம் மிக்க மருந்துகளால்கூட இவற்றின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. 
இத்தகைய பாக்டீரியா பரவலை தடுப்பதற்கான வழிமுறைகளும் மிகவும் குறைவாகவே உள்ளன என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். உயிர்காக்கும் கடைசித் தீர்வான கார்போபெனிம் மருந்துகள் கூட இந்த பாக்டீரியா கிருமிகள் முன் பயன்படாமல் போகின்றன.  
இந்தக் கிருமிகள் நுரையீரல், சிறுநீரகப் பாதை அல்லது ரத்த ஓட்டத்துடன் கலந்தால் அந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது கடினம். இவ்வாறு ரத்த ஓட்டத்தில் கலந்தவர்களில் 50 சதவீத நோயாளிகள் மரணத்தைத் தழுவுகின்றனர். 
இந்த நோய்த்தொற்று ஏற்பட்டவர்கள் மருத்துவமனையில் தொடர்ந்து தங்கியிருந்து, சிக்கலான மருத்துவ முறைகளையும் நீண்ட கால கவனிப்பையும் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது". என்று தெரிவித்துள்ளனர்.(ஆதாரம் மாலை மலர் மார்ச் 6)
இந்தியாவிலும் புதிய வைரஸ் தொற்று பரவி வருவதாக மருத்துவ விஞ்ஞானம் எச்சரித்துள்ளது(ஆதாரம் மாலை மலர் பெப்ரவரி 13) 
"வைரஸ்களால் ஊடுருவும் புதிய மூச்சு திணறல் நோய் இந்தியாவுக்குள் ஊடுருவுகிறது. வைரஸ் கிருமிகளால் மூச்சு திணறல் நோய் ஏற்படுகிறது. தற்போது அபாயகரமான புதிய வைரஸ் கிருமியால் கடுமையாக பாதிக்கக்கூடிய மூச்சு திணறல் நோய் உருவாகியுள்ளது. இந்த வைரஸ் கிருமிகள் நுரையீரல் மற்றும் மூச்சு குழாய்களை தாக்கி இந்த நோயை உண்டாக்குகின்றன. 
ஐரோப்பிய நாடுகளான இங்கிலாந்து, ஜெர்மனியில் பரவிய இந்த நோய் தற்போது மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் பரவுகிறது. இங்கிலாந்தில் இந்த நோய் தாக்குதலுக்குள்ளான 2 பேர் மான்செஸ்டர் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சவுதி அரேபியாவில் 5 பேர் பாதிக்கப்பட்டனர் அவர்களில் 3 பேர் பரிதாபமாக இறந்தனர். 
ஜோர்டானில் பாதிக்கப்பட்ட 2 பேரும் உயிரிழந்தனர். ஜெர்மனியில் ஒருவர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளார். இதுவரை 10 பேர் இந்த புதிய மூச்சு திணறல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை உலக சுகாதார மையம் உறுதிப்படுத்தியுள்ளது. கொடுமையான வைரஸ்களால் பரவும் இந்த நோய் தற்போது பாகிஸ்தானில் பரவியுள்ளது. அது படிப்படியாக இந்தியாவுக்குள் ஊடுருவும் அபாயம் உள்ளது". என்று எச்சரித்துள்ளது,
வேதம் கொள்ளை நோய் என்று குறிப்பிட்டுள்ளது, கொள்ளை நோய் என்றால் ஆங்கிலத்தில் பிளேக்(plaque) என்கிறோம், பிளேக் என்றால் திடீரென்று தோன்றும் கிருமிகளால் உண்டாகும் நோய் என்று அர்த்தம்,வேதம் எவ்வளவு திட்டமாக நமக்கு முன்னுரைத்துள்ளது என்பதை பாருங்கள் லூக்கா 21:11 "பல இடங்களில்...கொள்ளை நோய்களும் உண்டாகும்".
வணங்கா கழுத்துள்ளவர்களாக நாம் இராமல், மெய் தேவனாகிய இயேசு கிறிஸ்துவை இன்றே ஏற்றுக்கொள்ளுங்கள், 

யுப்ரட்டீஸ் நதி வற்றியது; வேதத்தின் திட்டமான முடிவுகால முன்னுரைப்பு.--jeevavootru.blogspot.com


 சுமார் 1700 மைல் அல்லது 2700 கிலோ மீட்டர் தூரம் வரை வற்றாத ஜீவ நதியாக பாய்ந்து மூன்று தேசங்களை செழிப்படைய செய்து வரும் மிகவும் பழமையான நதிதான் இந்த யூப்ரட்டீஸ் நதி. இந்த நதி துருக்கியில் ஆரம்பித்து சிரியா தேசத்திற்க்கும் ஈராக் தேசத்திற்கும் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. அவர்களின் விவசாயம், குடிநீர், மறுசுத்திகரிப்பு, மின்சார உற்பத்தி, மற்றும் தொழிற்சாலை தேவைகளுக்கு இந்நதியே வற்றாத ஜீவநதியாக விளங்கி வருகிறது, இதற்கு முந்தைய உலக வல்லரசாக விளங்கிய மகா பாபிலோனின் செழிப்புக்கும் இந்நதி முக்கிய பங்காற்றியது குறிப்பிடத்தக்கது. அந்த பாபிலோன் இன்று இல்லை, அது முற்றிலும் வேதத்தின் முன்னுரைப்பின் படியே அழிக்கப்பட்டது, ஆனால் பாபிலோன் இருந்த இடத்தில் இப்பொழுது ஈராக் தேசம் உள்ள்து, இந்த ஈராக் தேசத்திற்கும் யூப்ரட்டீஸ் நதியே முக்கிய பங்காற்றி வருகிறது.
     இவ்வளவு மிகவும் பரந்து வ்ரிந்து காணப்படும் இந்நதி வரலாற்றில் எந்த கால்த்திலும் வற்றிப்போனதாக எந்த குறிப்பும் இல்லாத நிலையில் இப்போழுது இந்நதி வற்றி போய்விட்டது என்று கூறினால் நீங்கள் நம்புவீர்களா?
     ஆம் ! இந்நதி வற்றிப்போனது என்று நியுயார்க் டைம்ஸ் என்ற உலக பிரசிதிப்பெற்ற செய்தி நிறுவனம் கடந்த 2009 ம் ஆண்டு ஜூலை மாதம் செய்தி வெளியிட்டுள்ளது. இச்செய்தி சுற்று சூழல் ஆய்வாள்ர்களை பெரிதும் வ்ருத்தமடைய செயதுள்ளது,ஆனால் பரிசுத்த வேதாகமத்தை நம்புகிறவர்களையோ இன்னும் விசுவாசத்தில் வேரூன்ற செய்தது, அது எப்படி? யூப்ரட்டீஸ் நதி வற்றியதற்கும் வேத வார்த்தை நிறைவேறியதற்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்கலாம்.
     பூமியின் கடைசி காலத்தில் இஸ்ரவேல் நாட்டின் மேல் பூமியின் கிழக்கு தேசங்களின் ராஜாக்கள் யுத்தம் பண்ண கூடி வருகையில் அவர்கள் வறண்டு வற்றிய யுப்ரட்டீஸ் நதியின் வழியாகவே இஸ்ரவேல் நாட்டிற்குள் பிரவேசிப்பார்கள் என்று வேதம் திட்டவட்டமாக கூறி உள்ளதை பின்வரும் வசனத்தின் மூலமாக உங்களுக்கு கோடிட்டு காண்பிப்ப்தில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் .
வெளிபடுத்தல்: 16:12
     ஆறாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஐபிராத்து என்னும் பெரிய நதியின் மேல் ஊற்றினான்; அப்பொழுது சூரியன் உதிக்குந் திசையிலிருந்து வரும் ராஜாக்களுக்கு வழி ஆயத்தமாகும்படி அந்த நதியின் தண்ணிர் வற்றிபோயிற்று 
    யூப்ரட்டீஸ் நதியை வேதாகமத்தில் ஐபிராத்து என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, இந்த வேதாகமமே உண்மை என்பதற்கும் இதுவே கர்த்தருடைய வார்த்தை என்பதற்கும் பல ஆயிரம் சாட்களோடே இதுவும் இணைந்து கொள்கிறது.
   நம் கண்கூடாக அவருடைய வேதத்தின் வார்த்தைகள் திட்டமாக நிறைவேறிவரும் காலக்கட்டத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம் , ஆனாலும் இன்னமும் மனக்கண்களை குருட்டு தன்மைக்கு விட்டுவிட்டு குருடராய் வாழ்ந்தால் நித்திய அக்கினியில் உங்களை யாரால் மீட்டு இரட்சிக்க கூடும் நீங்கள் மனந்திரும்ப இதுவே சரியான தருணம், இன்றே  இரட்சண்ய நாள், கர்த்தரின் பெரிதும் பயங்கரமான நாள் நெருங்கிற்று, மனந்திரும்புங்கள். 

சுவி.D.விமலன்

http://www.nytimes.com/slideshow/2009/07/13/world/20090713EUPHRATES_index.html